Sunday, 13 November 2016

குருஸ்பர்னாந்து நினைவு மாரத்தான் 2016

தூத்துக்குடியின் தந்தை ஐயா
குருஸ்பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு...
இன்று நடந்த #மாரத்தான் போட்டி...
மிக அருமையாக நடைபெற்றது...
மிக அருமையாக நடத்திய "அகில இந்திய
பரதர் இளைஞர் பேரவை " மனமார்ந்த
பாராட்டுக்கள்... போட்டியை தொடங்கி வைத்த
ஐயா #பெனோ_ரோச், மற்றும் தூத்துக்குடி உதவி
கண்காணிப்பாளர் #செல்வநாகரத்தினம் அவர்களுக்கு அகில இந்திய பரதர் இளைஞர் பேரவை உறவுகளுக்கும் அதன் பொதுச்செயளாலர் சகாய் அவர்களுக்கும்
மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் !!!

147 வது வருட குருஸ்பர்னாந்து ஜெயந்தி விழா

தூத்துக்குடி மக்களின் தாகம்
தீர்த்த ஐயா
தெய்வத்திருமகன்...
#இராவ்_பகதூர்
#குருஸ்பர்னாந்தின்
147  ஆம் ஆண்டு....
ஜெயந்தி திருவிழா....
சொந்தங்கள் அனைவரும்...
ஐயாவுக்கு...மாலை அணிவித்து..
மரியாதை செய்யவும்...
ஐயாவின் புகழ் ஓங்குக !!!

இவன்- பரதர் தொலைக்காட்சி

தூத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான்

துாத்துக்குடியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி : ஏஎஸ்பி., துவக்கி வைத்தார்ஞாயிறு 13, நவம்பர் 2016 
மழை நீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி துாத்துக்குடியில் இன்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.துாத்துக்குடிக்கு குடிநீர் கொண்டு வந்த குருஸ் பர்னாந்து நினைவாகவும், மழை நீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தியும் துாத்துக்குடியில்  "அகில இந்திய பரதர் இளைஞர் பேரவை " நடத்தியது.இன்று மாணவ மாணவியர் பங்கேற்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடந்தது.பாண்டியாபதி மாதா கோவில் அருகே தொடங்கிய இப்போட்டியை துாத்துக்குடி ஏஎஸ்பி செல்வன் நாகரத்தினம் தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000ம் மற்றும் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.2000ம் மற்றும் கோப்பையும்,மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கோப்பையும் வழங்கப்படும்.