Saturday, 22 October 2016

மீன் கொடி பறக்க விட்ட பரத பாண்டியர்

பழம்பெரும் பாண்டியர்களின் வரலாற்றை பேசும் பகுதி(தமிழ் மண்ணின் மூத்த குடிமக்கள் பாண்டியர்கள், பழம்பெருமை வாய்ந்த அவர்களின் சிறப்பையும், பெருமைகளையும் தெள்ள, தெளிவாய் எடுத்துரைக்க இருக்கிறது இந்தப் பகுதி. பல்வேறு பாண்டியர்களின் வரலாற்றை கால வாரியாக இத்தொடரில் நீங்கள் அறியலாம்)பாண்டியர்கள், மதுரையை ஏன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்பதை பார்ப்போம்.பாண்டியர்கள் முதலில் ஆட்சி செய்த இடம் கொற்கை. இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தின் (லெமூரியா கண்டத்தின்) நடுவே பழம் பாண்டியர்களின் கொற்கை அமைந்திருந்தது. குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டியர்கள் வாழ்விற்கும், செழிப்புக்கும் காரணமாக கொற்கை துறைமுகம் இருந்தது. கடல் வாணிபத்தால் இத்துறைமுகம் புகழ் பெற்றது. கடல் தங்களை வாழவைக்கும் கடவுளாக பாண்டியர்கள் கருதியதால், சின்னமாக மீனை வைத்துக் கொண்டனர். இரண்டு மீன்களின் இருபுறமும் உள்ள கண்கள் தெரிய வேண்டுமென்பதற்காக செங்குத்தாக நிற்பது போல் அமைத்தனர். எதிலும் தாங்கள் உறுதியாக நிற்பவர்கள் என்பதை காட்ட இச்சின்னத்தை தேர்ந்தெடுத்தனர்.கொற்கையை ஆண்ட சடவர்மன் வீரபாண்டியன், இலங்கையில் போர்தொடுத்து வென்று, திரிகோணமலை பாறையில் மீன்கொடியை பொறித்தான். பிற்காலத்தில் டச்சுக்காரர்கள், அந்த பாறையை பெயர்த்தெடுத்து, தூய பெரடரிக் கோட்டை சுவர் மீது வைத்தனர். பாண்டிய மன்னர்கள் வாணிப செலாவணிக்காக காசுகளை அச்சடித்தனர். பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது.கொற்கை துறைமுகமும் அந்த கடல்கோளால் சீரழிந்தது. கொற்கையை ஆண்ட கடைசி மன்னர் முடத்திருமாறன்.இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது.பழைய காயலுக்கு துறைமுகம் இடம்பெயர்ந்தது. இங்கும் கடல்கோளால் 4 கி.மீ., தூரத்தை கடல்கொண்டது.இங்கும் இப்படி அடிக்கடி கடல் கோள்கள் பல ஏற்பட்டு பின் இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது.இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று.பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து,பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்ற குறிப்பு இராமாயணத்தில் உள்ளது.

பரதரே பாண்டியர் சொல்லும் வரலாறு

கடலும், கடல் சார்ந்த பகுதியில் வாழும் நெய்தல் நில மக்களாக பரதவர் குறிக்கப்படுகின்றனர்.. பரதவர்களுக்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி உண்டு. கப்பல் ஓட்டுவதிலும் கடல்வள வாணிபத்திலும் - சிறப்புற்று விளங்கிய இவ்வினம் பற்றி – பல வரலாற்று ஆசிரியர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அத்தகைய ஆய்வுகளை ஒன்று திரட்டி யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கலாநிதி ப.புஸ்பரட்டினம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்

சங்ககாலத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் வாழ்ந்த நெய்தல் நில மக்களாகப் பரதவர் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். இவற்றில் இருந்து தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிட்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. (ளுநநெஎசையவநெ 1985: 49 – 50) இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி, சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம் (ஏநடரிpடைடயi 1980: 13) பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன.

புறநானூறு முத்துக்குளித்தலில் ஈடுபட்ட பரதவரை பாண்டிய மன்னன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதிலும் சோழ மன்னருக்கு அவர்கள் சவாலாக விளங்கியதாகக் கூறுகிறது (புறம் 378’1) பெரிபுளஸ் என்ற நூலில் முத்துக்குளித்தலில் ஈடுபட்ட மக்களை பாண்டிய மன்னன் தனது சிறையில் அடைத்ததாகவும், சிறைத்தண்டணை பெற்ற மக்களைப் பாண்டிய மன்னன் முத்துக்குளித்தலில் ஈடுபடுத்தியதாகவும் கூறுகிறது. (ளுஉhழகக 1912: 46) முத்துக்குளித்தலில் பாண்டிய மன்னருக்கும் பரதவருக்கும் பிற்காலத்திலும் பகைமை இருந்ததை நெடுஞ்செழியன் பராந்தகன் வேள்விக்குடிச்செப்பட்டில் வரும் பரவரைப் பாழ்படுத்தும் என்ற சொல் உறுதிப்படுத்துகிறது. (முருகானந்தம் 1990, 3) முத்துக்குளித்தலைப் போல் சங்கு குளித்தலும் முக்கிய தொழிலாக விளங்கியது. பரதவர் சங்குகளுக்காக கடலுக்குள் மூழ்கியதையும் அவற்றை கள்ளுக்காக விற்றது பற்றியும் அக நானூறு கூறுகிறது. (அகம் 296- 8, 9, 350: 11-13) – பாண்டி நாடு நெடுகிலும் சங்கும் முத்தும் விற்பனை செய்யப்பட்டதை மதுரைக்காஞ்சி கூறுகின்றது. பாண்டிய மன்னர் வெள்வளை தரித்ததாக சின்ன மன்னூர் செப்பேடு கூறுகிறது. (ளுஐஐ.3:4)

பரதவரின் இன்னொரு தொழிலாக மீன் பிடித்தலும் வர்த்தகமும் விளங்கியது. முத்து பாண்டியரின் சொத்தாக விளங்கியது போல் மீன் பாண்டியரின் பிரதான உணவாக இருந்தது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறுந்தொகையில் வரும் மீன் வேட்டம். திமில் வேட்டுவர் என்ற சொல்லாட்சி மீன்பிடித் தொழிலின் சிறப்பைக் காட்டுகிறது. (குறு 123)- பரதவர் காய விட்ட மீனை (உப்புக்கண்டம்) விற்பனைக்காக படகுகளில் கொண்டுவந்ததாக மதுரைக்காஞ்சி கூறுகிறது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப்பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் (பட்டினப் 185 – 193) மதுரைக்காஞ்சியும் (மதுரை 321. 323) மேலை நாட்டுக் குதிரைகளும் வட இந்தியக் குதிரைகளும் தென்னிந்தியத் துறைமுகங்களுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறுகின்றன.

மதுரைக் காஞ்சி பாண்டி நாடு நெடுகிலும் குதிரை வர்த்தகம் நடந்ததாகக் கூறுகிறது. (மதுரை 315.24) இலங்கைப் பாளி நூல்கள் தமிழ் நாட்டு வணிகர் இலங்கையில் குதிரை வர்த்தகம் செய்ததாகக் கூறுகின்றன. இவ் வர்த்தகத்தில் பரதவர் ஈடுபட்டதாக செனவிரட்ண கூறுகிறார். பரதவர் கடலிலிருந்து எடுத்த உப்பை உமணர் உள்நாட்டில் விற்பனை செய்தார். நற்றிணையில் உமணர் வருகையை எதிர்பார்த்து உழாத உழவர் (பரதவர்) உப்பைக் குப்பைகளாக வைத்துக் காத்திருந்தனர் என்ற குறிப்புள்ளது. (நற் 138.12) பாண்டி நாட்டிலுள்ள சில பிராமிக் கல்வெட்டுக்கள் உப்பு வணிகர் பற்றிக் கூறுகின்றன. (ஆயாயனநஎயn 1966)
இவ்வாறு பலதரப்பட்ட பொருளாதார நடவடிக்கையில் பரதவர் ஈடுபட்டதினால் செல்வம் இவர்களிடத்தே குவிந்தன. சங்க இலக்கியத்தில் இவர்களது இருப்பிடங்கள், மாளிகைகள், கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புக்கள் இவர்களின் செல்வ நிலையை காட்டுகின்றன. (மதுரை 315. 323 பெரும்பாண் 319, 324 அகம் 86) புற நானூறில் வரும் ‘தென் பரதவர் மிடல் சாய’ என்ற சொற்றொடர்களும், பாண்டிய நெடுஞ்செழியனை கொற்றவன் காவலன் ‘பரதவ தலைவன்’ எனவும் கூறப்படுவது சங்ககால அரசியலிலும், சமூகத்திலும் பரதவருக்கிருந்த மதிப்பைக் காட்டுகின்றது.

இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயருக்குரியவர்கள் ஆற்றிய தொழில்கள், பதவிகள், சமூக அந்தஸ்து என்பவற்றை நோக்கும் போது சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்தை அப்படியே நினைவுபடுத்துவதாக உள்ளன. சங்க இலக்கியங்களில் பரதவ சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றிக் கூறப்படுவது போல், இலங்கை வரலாற்று இலக்கியங்களில் எந்தவித குறிப்பும் காணப்படவில்லை. ஆனால் இக்காலத்தில் தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டது பற்றி ஆக்காங்கே சில குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவர் பற்றிவரும் பெரும்பாலான கல்வெட்டுக்கள் பெருங்கற்கால கறுப்பு – சிவப்பு மண்டபங்கள் காணப்படும் இடங்களை அண்டிய பகுதியில் காணப்படுவதை சான்றாதாரம் காட்டி வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பரதவர் இலங்கை வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார். (1985 : 49) அநுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாய்வில் குடியேற்றத்தின் ஆரம்பகாலச் சான்றுகளுடன் இலங்கையில் கிடைக்கப்பெறாத பளிங்குக் கற்கள், மணிகள், குதிரை எலும்பின் எச்சங்கள் கிடைத்துள்ளன. (ஊழniபொயஅ 1996 : 81) இவை வணிக குடியேற்றம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

தமிழ் நாட்டில் பரதவர் வாழ்ந்த இடங்களில் ஒன்றாகப் பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதே இடப்பெயர் வடமேற்கு இலங்கையில் உள்ள ஒரு இடத்தின் பெயராக கி.மு.6ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டு, பின்னர் முழு இலங்கைக்குரிய பெயராக மாறியதை அசோகன் காலக் கல்வெட்டிலும், கி.பி.1.2.ஆம் நூற்றாண்டுக்கு உரிய வெளிநாட்டார் குறிப்புக்களிலும் காணமுடிகிறது. இவ்விடப் பெயர் ஏற்பட பாண்டி நாட்டிலுள்ள தாமரபரணி ஆற்றங்கரையிலிருந்து ஏற்பட்ட வர்த்தக குடியேற்றம் ஒரு காரணமாக இருக்கலாமென கூறுவோருமுளர். ஆனால் இலங்கையில் கி.மு.6ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்படும் இப்பெயர் தமிழ் நாட்டு வலலாற்று மூலங்களில் கி.பி.12ஆம் நூற்றாண்டின் பின்னரே காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது இரு பிராந்தியத்திலும் வாழ்ந்த பரதவ சமூகத்தினருக்கு இடையிலான வர்த்தகப் பண்பாட்டுத் தொடர்பால் இங்கிருந்தே அப்பெயர் தமிழ் நாட்டிற்கு சென்றதா என எண்ணத் தூண்டுகிறது.

பரத பற்றி வரும் கல்வெட்டுக்களில் பொலநறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு சிறப்பாக குறிப்பிடத்தக்கது. (வழக்கத்திற்கு மாறாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக எழுதப்பட்டுள்ள இககல்வெட்டில் பரதஸ ஹகிதஸ (டீயசயவயளயலய மவையளய) என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் பரத என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. (ஏறத்தாழ இதையொத்த கப்பல் உருவம் தமிழ் நாட்டில் அழகன் குளம் அகழ்வாய்வின் போது கி.மு.2.1 ஆம் நூற்றாண்டுக்குரிய ரௌலட்டட் மண்டபத்தில் பெறப்பட்டுள்ளது.) இது பரத என்பவனை கப்பல் தலைவனாக அல்லது, வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்ட வணிகனாக கருத இடமுண்டு. தொலமி பாண்டி நாட்டுக் கடற்கரைப் பகுதியில் தரித்து நின்ற கப்பல் பற்றி தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் அம்பி, நாவாய், வங்கம், படகு, தொணி, பங்றி, திமில் என்பன கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலன்களாக குறிப்பிடப்பட்டு உள்ளன. இதில் திமில், அம்பி என்பன மீன் பிடித்தலுக்கும் பெரிய கப்பலிலிருந்து பொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு வரவும் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கம், நாவாய் நீண்ட கடற்பயணத்திற்கும் வர்த்தகத்திற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. (சுப்பராயலு 1983 : 161 – 162) இலங்கையில் தமிழ் வணிகனாகிய நாவாய் தலைவன் தென்னிந்தியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்து விற்பனை செய்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. நாயன்மார் பாடல்கள் வங்கம் நிறைந்த துறை முகமாக வட இலங்கையில் உள்ள மாதோட்டத்தைக் கூறுகின்றன. (மயினைகிளார் 1953) இதனால் பொலநறுவைக் கல்வெட்டில் வரும் கப்பல் உருவத்தை பாளி, தமிழ் இலக்கியங்கள் கூறும் நாவாய் அல்லது வங்கமாகக் கருதலாம்.

கல்வெட்டுக்கள் சிலவற்றை நாவிக என்ற பெயருடன் படகெ, தொட என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புரணவிதாண இவை கடற்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட கலன்கள் எனக் கூறுகிறார். இதில் படகெ, தொட என்ற சொற்கள் தமிழில் வழக்கில் உள்ள படகு, தோணி போன்ற சொற்களுடன் தொடர்புபடுத்த இடமுண்டு. அண்மையில் பிரித்தானிய nஐர்மன் ஆய்வுக் குழுவினர் அநுராதபுர பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வின் போது கி.மு.3ஆம் நூற்றாண்டுக்குரிய சங்ககால நாணயங்களையும் கடற்போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்ட கலம் ஒன்றின் உருவம் பொறித்த நரைநிற மட்பாண்ட ஓடு ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். (ஊழniபொயஅ 1996இ92) இதில் உள்ள கடற்கலத்தை கல்வெட்டுக்களில் வரும் படகெ. தோட போன்ற சொற்களுடன் தொடப்பு படுத்தலாம். இதையொத்த உருவத்தை தமிழ் நாட்டில் புதிய கற்கால ஓவியங்களிலும் சாதவானகர் கால நாணயங்களிலும் காணமுடிகிறது. இவ் ஆதாரங்களில் இருந்து சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையே கடல் வாணிபத் தொடர்புகள் இருந்ததென உறுதிப்படுத்தலாம். இவை பொலநறுவைக் கல்வெட்டில் வரும் பரத என்பவனை அயல் நாடுகளுடன் கடல் வாணிபத்தில் ஈடுபட்டவனாகக் கருத இடமளிக்கிறது.

சங்க இலக்கியத்தில் பரதவரின் முக்கிய தொழில்களில் ஒன்றாக முத்து, சங்கு குளித்தல் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தொழில்கள் பாண்டி நாட்டிற்கும் வடமேற்கு இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பிராந்தியத்தில் நடந்ததற்கு போதிய சான்றுகள் உண்டு. இந்தியாவைக் காட்டிலும் இலங்கையில் தரமான முத்து கிடைத்ததாக கி.மு.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெகத்தனில் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காலப் பகுதியில் ஆட்சிபுரிந்த இலங்கை மன்னர்கள் சிலர் இந்திய மன்னர்களுக்கு முத்தை பரிசாக கொடுத்ததாக பாளி நூல்கள் கூறுகின்றன. பண்டு தொட்டு வடமேற்கு இலங்கையில் உள்ள சிலாபம் என்ற இடம் முத்துச் சிலாபம் என்ற பெயரை பெற்றிருந்ததற்கு இங்கு நடைபெற்று வரும் முத்துக் குளித்தலே முக்கிய காரணமாகும். பரத என்ற பெயருக்குரிய பிராமிக் கல்வெட்டுக்களில் கணிசமானவை இப்பிராந்தியத்திலிருந்து கிடைத்திருப்பது இத்தொழில்களோடு இவர்களுக்கிருந்த தொடர்பைக் காட்டுகிறது எனலாம்.

பண்டைய இலங்கையில் மீன்பிடித் தொழிலோடு பரத என்ற பெயருக்குள்ள தொடர்பைக் காட்ட கல்வெட்டுக்களிலோ அல்லது பாளி இலக்கியங்களிலோ இதுவரை சான்றுகள் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்றில் இதற்குரிய சான்று கிடைத்துள்ளது. இங்கு இதே காலத்திற்குரிய உதிரன், தஸபிடன், மஹசாத்தன், கபதிகடலன் போன்ற தமிழ் நாணயங்களுடன் பரததிஸ என்ற பெயர் பொறித்த நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. (டீழிநசயசயஉhஉhi 1999: 53, புஷ்பரட்ணம் 1999: 55 – 70) இதில் காணக்கூடிய சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் பரததிஸ என்ற பெயரும் முன்புறத்தில் இரு மீன்கோட்டுருவமும் இடம்பெற்றிருப்பதாகும். இதில் வரும் மீன் சின்னங்கள் மீன்பிடி தொழிலோடு பரததிஸ என்பவனுக்குள்ள தொடர்பைக் காட்டுகின்றது. இதில் முன்னொட்டுச் சொல்லாக வரும் பரத என்பது பரதவ சமூகத்தைக் குறிக்கலாம். பின்னொட்டுச் சொல்லாக வரும் திஸ என்ற பெயருக்கு பூச நட்சத்திரம் என்ற பொருள் உள்ளது (இராசகோபால்). இப்பெயர் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களிலும், பாளி இலக்கியங்களிலும் பல இடங்களில் வருகிறது. இப்பெயரில் குறுநில மன்னர்களும், சிற்றரசர்களும் இருந்துள்ளனர். இது பிராகிருத மொழிக்குரிய பெயராக இருப்பினும் இப்பெயரில் தமிழர்களும் இருத்ததற்குப் போதிய சான்றுகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்ற இடத்திலுள்ள கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டொன்று தீகவாபி என்ற இடத்தில் வாழ்ந்த திஸ என்ற தமிழ் வணிகன் பற்றிக் கூறுகிறது. அநுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டொன்று திஸ தமிழன் தமிழ் வணிகர்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறுகின்றது. அண்மையில் தமிழ் நாட்டில் அழகன் குளம் என்ற இடத்தில் கிடைத்த மட்பாண்டை ஓட்டில் தீசன் என்ற பெயர் பெறப்பட்டுள்ளது (இராசகோபால்). பேராசிரியர் சிற்றம்பலம் சங்க இலக்கியத்தில் வரும் திரையர் என்ற ஒரு இனக் குழுவைக் குறித்ததெனக் கொண்டால் அச்சொல்லிற்கும் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த திஸ, திஸ்ஸ என்ற பெயர்களுக்கும் இடையிலான தொடர்பு ஆராயப்படக் கூடியதென்பதற்கு சில சான்றாதாரங்களைக் காட்டியுள்ளார். திரை என்ற சொல்லுக்கு கடல், கடலலை, குளம் என்ற பல கருத்துக்கள் உண்டு. இலங்கையில் கிடைத்த பரத பற்றிய 21 கல்வெட்டுக்களில் 12 கல்வெட்டுக்கள் திஸ என்பனவை பரதவ (பரத) சமூகத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகின்றன. இதில் கல்வெட்டுக்களில் வரும் வணிகன், அரச தூதுவன், கப்பல் தலைவன் போன்ற பதவிகள் அனைத்தும் பரததிஸ என்பவனோடு தொடர்புடையதாக உள்ளன. தென்னிலங்கையில் கிடைத்த கி.மு.2ஆம் நூற்றாண்டுக்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டு அதன் மத்தியில் “திஸஹ” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. (டீழிநயசய உhiஉhi 1999: 60இ ழே- 43) இதை நாணயமாக கொள்வதைவிட திஸ என்பவனுக்குரிய முத்திரை எனக் கூறலாம். இவற்றிலிருந்து மீன் பிடித்தலோடு பரதவ சமூகத்திற்கும் திஸ என்ற பெயருக்கும் உள்ள தொடர்பு தெரியவருகிறது. இச்சான்றுகள் கடல் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளோடு பரதவ சமூகத்திற்கும் திஸ, திஸய என்ற பெயருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுவதால் திரையர் என்ற இனக் குழுவுடன் திஸ என்ற பெயருள்ள உறவை தொடர்புபடுத்திப் பார்க்கலாம் என்ற கருத்திற்கு இவை மேலும் சான்றாக உள்ளன. செனிவரட்னா இலங்கையில் பரதவ சமூகத்தின் தோற்றத்தைப் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்பு படுத்துகிறார். இதற்கு இச்சமூகம் பற்றிய கல்வெட்டுக்கள், பண்பாட்டு மையங்களை அண்டிக் காணப்பட்டதையே சான்றாகக் காட்டுகிறார். இன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் பரதவ சமூகம் வாழ்ந்து வரும் இடங்களில் வட, வடமேற்கு இலங்கை சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பூநகரி வட்டாரத்திலுள்ள மண்ணித்தலை என்ற கடற்கரைக் கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது பெருங்கற்காலப் பண்பாட்டிற்குரிய பல சான்றுகளுடன் குறிப்பாக கறுப்பு சிவப்பு நிற மட்பாண்டங்கள் (டீடயஉம யனெ சநன றயசந) தமிழ் பிராமி எழுத்துப் பொறிந்த மட்பாண்ட ஓடுகள், இரும்புக் கருவிகள் என்பவற்றுடன் மீன் பிடிப்பதற்கென ஊசிகளும் (குiளா ர்ழமள) கிடைத்துள்ளன. (புஷ்பரட்ணம் 1993). பரத என்ற சொல்லின் இன்னொரு வடிவமாக கல்வெட்டுக்களில் வரும் பத என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இப்பெயருக்குரியவர்கள் இலங்கையில் பரந்துபட்ட அளவில் வாழ்ந்தனர் எனக் கூறலாம்.

இவர்கள் வர்த்தகத்தில் மட்டுமன்றி அரசியல், கிராம நிர்வாகம், நீதி, படைத்துறை, கலை போன்ற பல துறைகளில் ஈடுபட்டிருந்தமை தெரிகிறது. குத்திக்குளம் என்ற இடத்தில் உள்ள கல்வெட்டு பதகுமார என்பவன் பௌத்த சங்கத்திற்கு அளித்த தானம் பற்றிக் கூறுகிறது. இதில் வரும் பதகுமர என்பதை பரதகுமார என எடுத்துக்கொள்ளலாம். சங்க காலத்தில் சிலப்பதிகாரம் பரதவ குமாரன் என அழைத்ததற்கு சான்றுண்டு. (சிலப் 156) அண்மையில் சேருவில் என்ற தமிழ் கிராமத்தில் கிடைத்த கல்வெட்டில் பதகம திஸ்ஸவும், தமிழ் சோழவும் (தமிட சுட) இணைந்து பௌத்த சங்கத்திற்கு தானம் அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (ளுநநெஎசையவநெ 1985: 52). இதில் சோழர் தமிழராக குறிப்பிடப்பட்டமை சிறப்பாக நோக்கத்தக்கது. வட இலங்கையில் பதசுட என்ற சொல் சில கல்வெட்டுக்களில் வருகின்றன.

மேற் கூறப்பட்ட கல்வெட்டுக்களில் இருந்து சங்ககாலத்தைப் போல் சமகாலத்தில், இலங்கையிலும் பரதவ சமூகம் வாழ்ந்ததெனக் கூறலாம். சங்க இலக்கியத்தில் பரவர், பரதவர் என வரும் பெயர்கள் இலங்கைக் கல்வெட்டு மொழிக்கு ஏற்ப பத, பரத என மாற்றமடைந்திருக்கலாம். இதற்கு கல்வெட்டுக்களில் வரும் பிராகிருதமயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்கள் சம காலத்தில் வெளியிட்ட நாணயங்களில் தமிழில் இடம்பெற்றிருப்பதைச் சான்றாக கூறலாம். செனிவரட்னா பரத என்ற முன்னொட்டுச் சொல் திராவிட மொழிக்குரிய ஆய், மாற, மருமக என்ற பெயர்களுடனும், பிராகிருத மொழிக்குரிய சும, உதர, சுமலி போன்ற சொற்களுடனும் வருவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆரம்பத்தில் இனக் குழுவைக் குறித்த பரதவ என்ற பெயர் பின்னர் சமூகப் பெயராக மாறியதாக ஒரு குருத்துண்டு. Nஐம்ஸ் ஆர்னலின் பரதவர், பரவர், பரதர் ஆகியோர் நாக இனக்குழுவை சார்ந்தவர் எனக் கூறுகிறார் (முருகானந்தம் 1990, 3) வட இலங்கை நாகதீவு எனவும், நாகர்கள் வாழ்ந்த இடம் எனவும் கூறும் வரலாற்று மரபுண்டு. இலங்கையில் பரத பற்றி வரும் கல்வெட்டுக்கள் பெருமளவுக்கு வட இலங்கையிலும், வடமேற்கு இலங்கையிலும் காணப்படுவதுடன் சில கல்வெட்டுக்களில் பரதநாக என்ற பெயர் இணைந்து வருவதையும் காணலாம். இதனால் பரத என்ற சமூகப் பெயர் இலங்கையில் வேறுபட்ட இனக் குழுக்களிடையே சமூகப் பெயராகப் பயன்படுத்தப்பட்ட போதிலும் அதன் செல்வாக்கு கூடிய அளவுக்கு வட, வடமேற்கு இலங்கையில் இருந்ததெனக் கூறலாம். இன்று பரதவ சமூகம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழி பேசும் பிராந்தியங்களிலும், இலங்கையில் சிங்கள, தமிழ் மொழி பேசும் வட்டார மக்களிடமும் காணப்படுகின்றன. வட, வடமேற்கு இலங்கையில் இப்பரதவ சமூகம் நீண்ட காலமாக வாழ்ந்து வருவதை இடைக்கால, மத்தியகால வரலாற்று ஆவணங்களிலிருந்து அறியமுடிகிறது. இதனால் இச்சமூகத்தின் தொடக்க கால ஆதாரமாக இப்பிராந்திய த்தில் காணப்படும் கல்வெட்டுக்களில் வரும் பரத என்ற பெயரைக் குறிப்பிடலாம்’’
மேற்கூறியன அனைத்தும் பரவர்கள் வர்ண குலத்தினர் தோர்றம் பரவல் , பற்றி வழங்கி வரும் பதிவுகளாகும் இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருந்தாலும் வர்ணகுலம் பற்றிய தொன்மையயையும் அதன் தொடர்ச்சியயையும் நமக்கு உணர்த்தி நிற்கிறது.
வர்ணகுலம் வர்ணகுலத்தான் குருகுலத்தான் எனவரும் தொடர்களும் மீகமன் பற்றிய குறிப்புகளும்வெடியரசன் பற்றிய நம்பிக்கைகளும் இம் மரபினரின் தொடர்ச்சியான இருப்பையும்நீட்சியயயும் வலியுறுத்துகின்றன.சிலப்பதிகாரத்தின் வழிவந்த ‘’கண்ணகி வழக்குரை’’ காவியம் மீகாமன் பற்றிய செய்திகளை தருகிறது.கண்ணகியின் காற்சிலம்பில் பதிக்க கூடிய நாகமணியயை தென் திசையில்தென் திசையில் உள்ள நாகத்தீவிலிருந்து கொண்டு வரக் கூடியவன் மீகாமனே என சொல்கிறது.
‘’கூட்டி வந்தார் வருணர் தமை குறையறுத்து கரை நீளும்
வாட்டமற வைத்த நாளின் வளங்கிய பேர் கரையார் காண்
பாட்டிலவர் தம் பெருமை பகரவினித் தொலையாது
மீட்டு புகழ் மீகாமன்சிறந்த மரபென உரைத்தார்’’
இது போலவே பரதர் குலத் தெருவில் வசித்து வந்தமீகாமனை அழைத்து வந்த செய்தியில்
‘’எல்லையிலா புகழ் பரதர் இருக்குமந்த தெரு புகுந்து
மல்லையொத்த புயத்தானே வர்ணகுலத்துதித்தோனே''
என மீகாமனின் வீரத்தை குறிப்பிடுகிறது.
கண்ணகி குளிர்த்தியில்
‘’மீகாமனுக்கு மிகுந்த வரம் கொடுத்து
நாகமணி வாங்கவெண்று நயந்தாய் குளிர்ந்தருள்வாய்’’'
என வரும் வரிகளும் மீகாமன் பற்றிய செய்தியயை நமக்கு தருகிறது.
திருகோணமலியின் வரலாற்றையும் வளமைகளையும் கூறும் கோணேசர் கல்வெட்டு கொட்டியாரத்தில் கோணேசர் ஆலயத்துக்காக கொடுக்கப் படும் பொருட்கள் கெவுளிமுனையிலுள்ள மீகாமனிடம் சேர்ப்பிகப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பிடுகிறது இங்கு மீகாமன் ஒரு தலைவனாக காட்டப் படுவதை காணலாம்.
கோணெசர் கல் வெட்டு வேறு ஒரு தகவலையும் நமக்கு தருகிறது கொட்டியாரத்தில் கூட்டப்பட்ட தேசத்தார் கூட்டத்தில் ஏழூர் அடப்பன் பற்றிய குறிப்பு வருகிறது. அடப்பன் அடப்ப்னார் என்ற பெயர்கள் ஒல்லாந்தர் கால குறிப்புகளின் படி குருகுலத்தவருக்குரிய தலைமைக் காரரின் பெயர் என விளங்கிக் கொள்ள முடிகிறது.இப்படிப் பார்க்கும் போது கோணெசர் கல்வெட்டு கூறும் காலப் பகுதியில் கொட்டியாரத்தின் ஏழு ஊர்கள் குருகுலத்தவர்களுக்கு உரியதாக இருந்திருக்கிறது என புலனாகிறது.
‘’முக்கறு கற்றன’’ எனும் சிங்கள ஏட்டுச் சுவடீப்படியொரு குறிப்பை தருகிறது.’’7740 வீரர்கள் கொண்டகரவ சேனை கொர மண்டலம் என அழைக்கப் படும்காஞ்சிபுரம் , காவிரிப் பூம் பட்டினம்,கீழைக் கரைஆகிய குருகுலப் பிரதேசங்களிலிருந்து வந்ததையும்,முக்குவரையும் துலுக்கரையும் போராடி வென்றனர் என்பதயும்விபரிக்கிறது.கோட்டை இராசதானியின் 6ம் பராக்கிரம பாகுவே(1412-1467)இவர்களை அழைத்தான் என்றுமவர்களுக்கு பல வீதிகளையும் வசிப்பிடங்களையும் 18துறைமுகங்களையும் வரியின்றி கொடுத்தான் என பிறிற்றோவின் யாழ்ப்ப்பாண சரித்திரம் கூறுகிறது’’
சோழப் பேரரசன் இராசேந்திர சோழன் இலங்கை மீதான படையெடுப்பை கூறும் திருமுருக கூடல் கல் வெட்டில்சிங்கள இராணுவத்தின் வீழ்ச்சியயயுமதில் தங்க கால்வளை அணிந்த குருகுலத்தராயன் வீழ்ந்து மடிந்ததும் கூறப் பட்டுள்ளது.
குருகுல மக்கள் வீரம் செறிந்தவர்களாகவும்போர்த்திறன் மிக்கவர்களாகவும் இருந்தமைக்கான சான்றுகள்பரவிக் கிடக்கின்றன வர்ணகுலத்தவர் பற்றிய புராணக்கதையொன்று “ஜலப் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து நீரால் நிறைந்த போது மீகாமன் தோணி மட்டுமே வெள்ளத்தில் மிதந்ததாகவும் சிவபெருமானும் வெள்ளத்தில் தத்தளிக்க சிவன் தன்னை ஓடத்தில் ஏற்றும் படி கேட்க சிவனை கைதூக்கி விடாமல் வள்ளத்தை ஒருக்கணித்து ஏற இடமளித்த போது “உள்ளமும் கரயான் உகத்திலும் கரையான்’’ என கூறியதாக இப்படி சொல்கிறது.
வர்ணகுலத்தாரின் கொடி மகரம் மகரக் கொடி. மகரம் என்பது யானையின் தந்தத்தையும் சிங்கத்தின் கால்களையும்,பன்றியின் காதையும்,மீனின் உடலையும்,வெளித்தெரியும் பற்களையும்,குரங்கின் கண்களையும் அழகான தோகையயையும் கொண்ட கடற் பிராணியாகும்.அது பிரபஞ்சம் தழுவிய குறியீடாக அடையாளப் படுத்தப் படுகிறது.
வட இந்தியாவின் குருகுல வம்சத்தோடுஉறவு கொண்ட பாண்டிய அரசர்கள் மகரத்தை தமது அடையாள சின்னமாக கொண்டனர் என நம்பப் படுகிறது.மகரம் எங்கள் குருகுல வம்சத்தின் அடையாளம் என வலைவீசு புராணம் சொல்கிறது.
கெறாஸ் அடிகளாரின் ஒரு கூற்றையும் கவனத்தில் கொள்ளலாம்"மொகஞ்சதாரோ களி மண் முத்திரையில் காணப்படும் மீன்களும் சந்திரனும் அவர்களது மூதாதயரான பாண்டிய மன்னனையும்கரையோரப் பரவ மக்களையும்குறிப்பதாகுமங்கு காணப்படும் எட்டு நட்சத்திர அடையாளங்களுள் நண்டு இரு சோடி மீன்கள்,மகரம் ஆகியன இடம் பெறுகின்றன.''
திருகோணமலை கோட்டை வாசலில் பொறிக்கப் பட்டுள்ள மீன் லச்சினைகளையும் இதனுடன் பொருத்திப் பார்க்கமுடியும்