Thursday, 31 August 2017

எம் பரத்திக்கு

நெய்தல் நில பரத்திக்கு நெய்தல் தமிழன்
சகோதரனின அன்பு வேண்டுகோள்.

உப்புக்காற்றில் என்னோடு வளர்ந்தவளே
                                              - நலமா ?
வீரத்தை என்னோடு குருதியில் பகிர்ந்தவளே
                                              - நலமா ?

வான் திமிர் கொண்ட ஆணையும் மதி
                              - கொண்டு வெல்பவள் நீ
உன் கைவிரல் பிடித்ததால் ஓடிய குருதி
                                  -ஆறும் அறியனும் நீ

கற்புக்கரசி கண்ணகி வழி வந்தவள் தான்
                          -  அதுவும் நினைவு கொள் நீ
உலகமே வியந்த தமிழ்  தேசியதலைவரின்
                                            - சகோதரி நீ

கிறிஸ்தவ கத்தோலிக்கத்தின் வேறூண்றிய
                                          - ஆணி வேர் நீ
பார் ஆண்ட பரத இனத்தின் வலிகளையும்
                                            - அறிவாயா நீ

உன் இனத்தை தாங்கி பிடிப்பாயா ! தூக்கி
                                             - நிற்பாயா ?
பிளவுண்ட இனத்தின் விரிசல்களை பூசி
                                             - காற்பாயா ?

உனக்கு அறிவுறை கூற நான் அறிவாளி
                                   -  உன்னை விட அல்ல
உன்னிடத்தில் கெஞ்சி கேட்கிறேன் நீ
                              - என் இனத்தின் தாயல்ல

கல்வியின்  சிகரம் தொடு...
அதிகாரத்தில் ஆணி வேர் தொடு....
வீரம் கொண்டாலும் மதியை எடு...
வீழ்ந்த இனத்திற்கு எழுச்சி கொடு....

குறிப்பு...

பரத ஆண்களே கொஞ்சம் வழி விடுங்கள்
உங்கள் ஆணாதிக்கத்தை மீண்டும் திணிக்காதீர்கள்.

என் இனம் என உன்னோடு அவள் பேசுகிறாள் என்றால்  நீ அவள் அரண் என நினைத்து... அதை சிதைத்துவிடாதே...

நாளைய இனத்தின் விடியலை இருளில் கிடத்திவிடாதே...

    என்றும் நெய்தல் தமிழன் ✍🏻