தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த
இராவ் பகதூர் #குருஸ்பர்னாந்து வரலாற்று குறிப்பு..
பிறப்பு -
தூத்துக்குடியில் வாழ்ந்த சாந்தகுருஸ் பர்னாந்து தம்பதயினரின் மூன்று பிள்ளைகளில் இரண்டாவது மகனாக பிறந்தார் ஐயா குருஸ்பர்னாந்து 15:11:1869
இல் தூத்துக்குடி மாநகராட்சி மக்களின தாகம் தீர்க்க வித்தாக பிறந்தார்.
கல்வி -
அன்றைய காலக்கட்டத்தில் உயர்க்கல்வி
ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.புனித பிரான்சிஸ் சவேரியாரின் இந்திய வருகையால் இயேசு சபை குருக்களால் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது.
புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளி.
குருஸ்பர்னாந்தின் இல்லத்தின் அருகே
இருந்த இப்பள்ளி அவரின் அறிவுத்திறன்
வளர்ச்சிக்கும் ஆளுமை திறனுக்கும்
வித்தாய் அமைந்தது.
குருஸ்பர்பானாந்து அப்போதைய 1885
சென்னை சென்னை பல்கலை கழக
மெட்ரிகுலேசன் தேர்வில் உயர்ந்த மதிப்பென் பற்று தேர்ந்சி அடைந்தார்...
நகரமன்றம் -
அன்றைய தூத்துக்குடி நகர சபையில்
இரு இடங்கள் ஆங்கிலேயருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது அதில் ஆங்கிலேயர்களே தான் போட்டியிட
முடியும்.இங்கே உறுப்பினராக பல முறை
அன்றய ஜெர்மனி வால்காட் பாஞ்சாலை நிறுவனத்தின் மேலாளர் செல்வீசர்
துரையிருந்தார். அவருக்கு உதவியாளராக
சேர்ந்தார் குருஸ்பர்னாந்து.
செல்வீசர் துறையிடம் உதவியாளராக
பணிபுரிந்தமையால் நகரசபை கூட்டத்திற்கு
செல்லக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அதுவே அவரின் பொதுவாழ்க்கை நுழைவுக காரணமாக இருந்தது.
செல்வீசர் துறை குருஸ்பர்னாந்தின்
திறமைகளை கண்டு. புகழ் பெற்ற
நிறுவனத்தில் கணக்கராக வேலையில்
சேர்க்க பறிந்துரை செய்தார்.
குருஸ்பர்னாந்தும் சேர்ந்தார்.
தனி மனிதன் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். திருமணத்திற்கு முன் அது தாயாகவும்.
பின் மனைவியாகவும் அமைவதும் இயற்கை.
மனைவி சரியாக இருந்தால் ஆண்கள்
எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும்
தகர்த்தெறிந்து விடலாம்.அதே மனைவி
"உங்களுக்கு ஏன் வம்பு, உங்க வேலைய பாருங்க "என்கிற பதில் வரும் வேளையில்
சமுக வாழ்க்கையில் ஆண்களால் வெற்றி
இலக்கை அடைய இயலாது.
அப்படி குருஸ்பர்னாந்து மனைவி
தொபியாஸ் மரியாம்மாள் பர்னாந்து
குருஸ்பர்னாந்தின் சமுக வாழ்க்கைக்கு
துனையாக நின்றவர்.
#ஏழைகளுக்கு_கல்வி_கொடுத்தவர்
தூத்துக்குடியின் பஞ்சு தரகர்களை ஒன்றினைத்து ஏழைக் குழந்தைகளின் கல்விக்கான திட்டம் ஒன்றை உருவாக்கினார் குருஸ்பர்னாந்து.
தூத்துக்குடி பஞ்சு தரகர்கள்
மாதிரி பஞ்சுகளை விற்று தாங்களே எடுத்து
கொள்ளாமல் குழந்தைகளின் கல்விக்காக கொடுக்க ஏற்பாடு செய்தார். இதன்படி
பஞ்சு தரகர்களிடம் இருந்து மாதிரி
பஞ்சுகளை பெற்று கொண்டு விற்றார்.
அந்த பணத்தை A.M.M சின்னமனி நாடார்
வசம் பணத்தை ஒப்படைப்பார் .சின்னமனி நாடார் அப்பனத்தில் மாணவர்களுக்கு புத்தகம் ,உதவித்தொகை என வரங்குவார்.
உதவித்தொகை பெறும் மாணவர்கள் குருஸ்பர்னாந்திடல் சீட்டினை பெற்று
அதை சின்னமனி நாடாரிடம் கொடுத்தாலே
உதவித்தொகை வழங்கப்படும்.
குருஸ்பர்னாந்து உதவித்தொகை கோருவோரின் குடும்ப நிலமையை ஆராய்ந்து சீட்மினை வழங்குவார்.
ஏழை மக்களின் கல்விக்காக பாடுபட்ம குரஸ்பர்னாந்து அந்த திட்டத்தில்
சின்னமனி நாடார் போன்றோர்களை
இனைத்து தலைவர்களாக உருவாக்கினார்.
இவரின் சிந்தனைகளும் செயலும் ஏழை மாணவர்கள் கல்வி கண்டு உயர வழி பிறந்தது.
#கூட்டுறவு_வங்கி
தூத்துக்குடி மக்களின் வளர்ச்சிக்காக
பலரிடம் குறிப்பிட்ட தொகையை பங்கு
தொகையாக பெற்று 1912 இல் இந்நகரின்
கூட்டுறவு வங்கியை உருவாக்கினர் குருஸ்பர்னாந்து.அந்த கூட்டுறவு வங்கியின்
முதல் தலைவராக பொறுப்பேற்கிறார் குருஸ்பர்னாந்து.பல ஏழைகளுக்கு வீடு கட்ட
கடன்களை வழங்கினார். தூத்துக்குடியின்
அன்றைய காலத்தில் புதிய குடியேற்றங்களாக உருவான போல்டன்புரம்,மட்டக்கடை பகுதி உள்ளீட்ட பகுதிகளில் வாழ்ந்தோர் கூட்டுறவு வங்கியில்
கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டினார்கள்.தூத்துக்குடியின் குடிசை வீடுகள் பல கட்டடங்களாக உருவாக வித்திட்டவரும் இவரே!!
#அருந்ததியர்_மக்களின்_குடியிருப்பு
தாழ்த்தப்பட்ட மக்களுள் ஒருசாரரான அருந்ததியர் மக்கள் நகரத்தை தூய்மை செய்யவும் ,மனித கழிவுகளை அள்ளவும் நியமிக்கப்பட்டனர்.அருந்ததியர் மக்களின்
வருகை தூத்துக்குடி மக்களுக்காக பெரும் உதவிகாக அமைந்தது.ஆனால் இவர்களை எங்கே குடியமர்த்த வேண்டும் என்ற பிரச்சனை எழும்பியது. சாதி தீண்டாமைகளால் அவர்களை மாநகரை விட்டு வெளியே தங்க வைக்க வேண்டும்
என்று பல சாதிகள் கொந்தெளித்தனர்
ஆனால் தீண்டாமையை அகற்றி
அவர்களை தருவை மைதானத்திற்கு மேற்கு பகுதிகளில் குடியமர்த்தினார் குருஸ்பர்னாந்து.இதற்கு குருஸ்பர்னாந்தின்
நடவடிக்கையை கண்டு எழுந்த எதிர்ப்புகள்
ஏறாலம். இதில் ஐயா குருஸ்பர்னாந்து
அனைத்து சமுதாய மக்களை ஒரே நிலையாக கொண்டு "சமத்துவ தலைவராக"
அழைக்கப்பட்டார்.
#மனிதநேயம்
தூத்துக்குடி மக்களின் உடல் நிலை
சீர்குழைய தெருவோரம் போடப்பட்டிருக்கும்
சுகாதாரமற்ற பலகார கடைகளும் ஒரு காரணம் என்று தெரிந்து கொண்ட குருஸ்பர்னாந்து அவைகளை அகற்ற முடிவு
எடுத்தார். சூகாதாரமற்ற பலகாரக்கடைகளை கண்டால் அதை அப்புறப்படுத்தி விடுவார். அப்படி ஒரு தடவை
ஐயா குருஸ்பர்னாந்து குதிரை வண்டியில் வரும் பொழுது சுகாதாரமற்ற நிலையில்
பலகாரக் கடையை தெம்மாசி எனும் .மூதாட்டி வைத்திருப்பதை கண்டார்
குருஸ்பர்னாந்து உடனே கோபம் கொண்ட
குருஸ்பர்னாந்து அதை அப்புறப்படுத்திவிட்டார். மறுநாள் அந்த
தெம்மாசி பாட்டி குருஸ்பர்னாந்துவிடம்
ஒரு கடிதத்தை கொடுத்தார்.அதில்
"ஐயா நான் ஏழை என் மகள் இறந்துவிட்டால் அவரது கனவர் பக்கவாதத்தால் நோய்வாய்பட்டுவிட்டார்.
அவருக்கு பத்து பிள்ளைகள் நான் உழைத்துதான் இவர்களை காப்பாற்ற வேண்டும். எனது கடையை நீங்கள் அழித்து
விட்டீர்கள் அப்படியே மண்ணெண்ணெய்
வாங்கி எங்களை எறித்து விடுங்கள்.எங்களால் இனி வாழ முடியாது" என்று எழுதியிருப்பதை கண்டு மனம் உடைந்து விட்டார்.பின் வீட்டை விட்டு
வெளிவர மனமில்லாமல் அறைக்குள்ளேயே
திரும்பிவிட்டார்
அன்றிரவு பலகாரக்கனை மூதாட்டி வீட்டை
சிலர் தட்டினர். பாட்டியின் காலடியில்
புது அடுப்பு,ஆப்பச்சட்டி,பிட்டுக்குழாய்,பெரிய கண்ணாடி பலகார பெட்டி,அரிசி,பருப்பு
மற்றும் ₹20 ருபாய் கொடுத்த்து ( அன்றைய காலத்தில் 20 ருபாய் என்பது பெருந்தொகை) நீங்கள் மறுபடி பலகாரக்கபை நடத்தலாம்,ஆனால் பலகாரங்களை கண்ணாடி பெட்டியில்
வைத்து தான் விற்க வேண்டும்.மற்றும்
உங்கள் பேரக்குழந்தைகள் அனைவரையும்
ஐயாவின் அலுவலக்கத்திற்கு அணுப்பவும்
அவர்களது கல்விக்கு அவர் நிதியுதவி
செய்வார்களாம் என்றனர் குருஸ்பர்னாந்து
அனுப்பிய அவரது வேலையாட்கள்.
இதை கண்டு திகைத்துப்போனார்
அந்த பாட்டி...பின் அந்த பாட்டியின் பேரக்குழந்தைகள் பயில கல்வி,நிதியும் வழங்கினார்.
#நீரைக்காத்திட_தண்ணீர்_தொட்டி
தூத்துக்குடி வட்டத் தெப்பம் ( குருஸ்பர்னாந்து சிலை இருக்குமிடத்திற்கு அருகில்) வ.உ.சிதம்பரம் சந்தைதிடல் அருகில் ,தருவை மைதானம் போன்ற இடங்களில் மக்களின் தேவைக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்நீரில் கால்நனைகளை கழுவிட நகராட்சி தடை விதித்தது.
மக்களின் அன்றாட பயண்பாட்டுக்கான தண்ணீரை கால்நடைகள் புழங்குவதை தடுக்க குருஸ்பர்னாந்து ஒரு திட்டம் ஒன்றை உருவாக்கினார்.தூத்துக்குடி நகருக்குள் முச்சந்திகள்,நாற்சந்திகள்,அமைந்துள்ள
இடத்தில் கால்தடைகள் தண்ணீர் குடித்திட
தொட்டிகளை கட்டி நிரப்பினார்.இத்தொட்டிகளிலுள்ள நீரைப்பறுகி தண்ணீர் தேவைக்காக தொடர்ந்து அங்கேயே வரத்தொடங்கின.
மக்களின் தேவைகளுக்குரிய நீரை காத்ததோடு விலங்குகளுக்கும் நீரை வழங்கியதின் மூலம் அவரின் கூர்மை திறனை உணர முடிகிறது.
#சமயத்துக்கு_உதவி
மதங்களை கடந்து மனிதர்களை நேசிப்பவராக இருந்தார் ஐயா குருஸ்பர்னாந்து .தூத்துக்குடியில் வாழ்ந்த
மூன்று மதத்தவர்களையும் ஒருசேர நேசித்தார். இசுலாமிய சகோதரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில காலம் ஜமாஅத்தின் தலைவராக இருந்த ஒரே
கிறிஸ்தவர் இவர் மட்டுமே. தனக்கு பின்
நகரமன்ற தலைவராக ஒரு இந்து மதத்தவரை முன்மொழிந்தவர்.
தூத்துக்குடி இஞ்ஞாசியார் புரத்திலுள்ள சில ஏக்கர் நகராட்சி நிலத்தை சமுகப் பணிக்காக தந்துவுதவுமாறு ஆயர் திபூர்சியஸ் ரோச் கேட்டதற்கிணங்க நகரசபை நிர்வாகம் மூலம் உரிய விதிகளின்படி மறைமாவட்டத்திற்கு நிலங்களை வழங்கினார்.
#பொதுக்கல்லறைத்_தோட்டம்
தூத்துக்குடி கிழக்கு பகுதி மக்களின் தண்ணீர் தேவைக்கு சிலுவை கோவில் அருகே இருந்த இரண்டு கிணறுகளில்
இருந்து நீரை எடுத்து மக்கள் பயண்படுத்தி
வந்தனர்.அக்கின்ற்றிலொன்று இரட்டைக்களம் என்றழக்க்கப்பட்ட
பகுதியிலும் மற்றொன்று சிலுவைக்கோவிலின் தென்புரத்திலும் அமைந்திருந்தது.இவ்விரு கின்றுகளுக்கு
இடையில் கல்லறைத்தோட்டம் (இன்றைய லாசால் பள்ளி வளாகம்) இருந்தது.
கல்லறைத்தோட்டத்தினால் இக்கின்றுகளில்
நீர் மாசுப்பட்டு வந்தது. இக்கின்ற்று நீரை மக்கள் பயண்படுத்தியதால் நோய்களுக்கு உள்ளாயினர்.நகரத்திலுள்ள கிணறுகளில்
இவ்விறு கிணறுகளும் மிகப் பழமையானவை
மக்களின் தண்ணீர் தேவைக்காக கல்லறையை வேறு இடத்திற்கு மாற்றுவதா
இல்லை கிணற்றை மூடி வேறு இடத்தில்
கிணற்றை மாற்றுவதா என்று சிந்தித்தார்
குருஸ்பர்னாந்து.உயிரோடுள்ள மக்களுக்கு
தூய்மையான தண்ணீர் கிடைத்துவிட்டாள்
மக்களை நோயிலிருந்து காப்பாற்ற முடியும்
என்று கல்லறையை மாற்ற முடிவுடுத்தார்.
தூத்துக்குடியின் கிழக்கு பகுதியிலிருத்து மூன்று மைல் தொலைவில் முப்பது ஏக்கர்
நிலப்பரப்பில் அனைத்து சமுதாய மக்களுக்கென பொது கல்லறையை
ஏற்படுத்த திட்டம் தீட்டினார்.
புதைக்கப்பட்ட இடத்தை தரைமட்டமாக்கினால் இறந்தோருக்கான
நினைவு நாளை எப்படி கடைபிடிப்பது
என கிறிஸ்தவ மக்களிடத்தில் பல எதிர்ப்புகள் எழுந்தன...
இறுதியில் பல எதிர்புகளையும்
தாண்டி பொது கல்லறை தோட்டம்
ஒன்றை ஏற்படுத்தினார்.
#நகர_மன்ற_கட்டிடம்
தூத்துக்குடி நகர மன்ற கூட்டம்
பழைய துறைமுகம் அருகேயுள்ள
கட்ட்டத்திலும் ,பிற்காலத்தில்
சத்திரம் தெருவில் உள்ள நகராட்சி கட்டிடத்திலும் ,பின்னர் சிவன் கோவில்
அருகேயும் நடைப்பெற்றது.
மேற்படி இடங்கள் நகர மன்றக் கூட்டம்.
நடத்துவதற்கு வசதியற்ற நிலையிலேயே
இருந்தது..
தான் தலைவராக இருக்கும் போதுதான்
இது நிறைவேற்றப்பட்டது என்றும்
தம்பம்டம் அடித்துக் கொள்ளும் இன்றைய
அரசியல்வாதிகள் இருக்கும் காலக்கட்டத்தில். தான் பொறுப்பில் இல்லாத காலக்கட்டத்திலும்
மாநகராட்சிக்கு நிலத்தை வழங்கிய
இவர் உள்ளமும் சிந்தனையும்
யாருக்கு வரும்...
நகர மன்ற அலுவலகத்திற்கான இடத்தை
வாங்கிய பின் இருமுறை தலைவராக இருந்துள்ளார்.இருந்தும் குருஸ்பர்னாந்து
அதில் கட்டடம் கட்ட எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை
மக்களுக்கு குடிக்க தண்ணீர் தட்டுபாட்டில்
இருக்க தண்ணீர் திட்டத்தை கொண்டு
வந்தபின் இதை செய்யவேண்டும் என்று
இருந்தார் குருஸ்பர்னாந்து.
#குடிநீர்_தந்த_கோமாண்
தூத்துக்குடியில் கடும் தண்ணீர்
பஞ்சம் நிலவிய காலக்கட்டத்தில்...
மக்களன் துயர் நீக்க தாமிரபரணியில்
இருந்து தண்ணீர் 1927 ஆம் ஆண்டு
தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது...
இந்த திட்டத்துக்காக குரஸ்பர்னாந்து
பட்ட இடையூறுகளும் ,துன்பங்களும்,நகையாடல்களையும் தாங்கி
மக்களுக்கு தண்ணீர் தந்தார் ஐயா
இராவ் பகதூர் குருஸ்பர்னாந்து.
தன் திட்டம் நிறைவேறும் வரை நோய்
வாய்பட்ட போதும் துன்பத்தை தாங்கி கொண்டு குருஸ்பர்னாந்து இம்மண்ணில்
வாழ்ந்தார்.மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி
தண்ணீர் கொடுத்தார்.
#மக்களை_நேசித்தவர்_இறந்தார்
முப்பது ஆண்டுகள் நகரமன்ற உறுப்பினராகவும்,இதில் ஐந்து
முறை நகர மன்ற தலைவராகவும் இருந்துள்ளார்.இம்மாநகராட்சிக்கு என்னென்ன தேவை என்று நினைத்தாரோ அவை அனைத்தையும் செய்து முடித்தார்.
தான் செய்ய நினைத்த மக்கள் நலப்பணிகளை செய்து முடித்த மனநிறைவுடன் 29-03-1930 உயிர் நீத்தார். தூத்துக்குடி நகரமே அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீருடன் வழியனுப்பியது..
அவரது உடல் பொதுக் கல்லறைத்தோட்டத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது...
தூத்துக்குடி மக்களுக்காகவே வாழ்நது
நலன்களை செய்த ஐயா இராவ் பகதூர்
குருஸ்பர்னாந்து அவர்கள் புகழ் அனைவருக்கும் தெரியவேண்டும்...அவரின்
சிலை தூத்துக்குடி ஊரில் மட்டுமில்லாது
அனைத்து ஊர்களிலும் வைக்கப்பட வேண்டும்... இப்படிபட்ட ஒர் மனிதர்
தம் இனத்தில் பிறந்தது இந்த
இனத்துக்கே பெருமையே !!!
வரலாற்று தகவல்களுக்கு நன்றி...
எழுத்தாளர்.
நெய்தல்.யூ.அன்டோ( குருஸ்பர்னாந்து வரலாற்று புத்தகம்)
இவன்- இருதய ஆஸ்ட்ரோ பரதர்.த
பரதர் கூத்தன்குழி
ஒன்றுபடுவோம் !!! வெற்றிப்பெருவோம் !!!