என் நெய்தல் நில பரத உறவுகளுக்கு வணக்கம்.
கடந்த மூன்று வருடங்களாக நம் இன இளைஞர்களிடத்தில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏதோ ஒன்று பின்னால் சுற்றி திரிந்த காளை கூட்டம் இன்று ஒரு சேர சமுதாயம் என்னும் உணர்வை மனதில் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது.
சினிமா நடிகர்களை தலையில் தூக்கி திரிந்த காலம் சற்று மாறி நம் இன வீழ்ச்சியை உணர்ந்து வரலாற்றை கையில் ஏந்தி நான் பாண்டியன் என உறும ஆரம்பித்துவிட்டது !
சமுதாய இளைஞர்கள் , இளம் பெண்கள் சமுதாயம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இனி கவலையில்லை இழந்த வரலாற்றை நிச்சயம் மீட்டெடுப்போம் அது உறுதி நாங்கள் மீண்டும் எடுத்தே தீருவோம் இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தியே தீருவோம் அடுத்து என்ன செய்வது ?
வரலாற்றை பற்றி பேசியது நமது நிலமையை உணர , நம் இழப்புகளை உணர , சமுதாய உணர்வு பெற ! அதுவும் இன்று நடந்தேறிக்கொண்டிருக்கிறது சில பேர் யோசிக்கலாம் அப்படியா என்று. ஆம் அப்படிதான் நாங்கள் இங்கே கூறுவது 100% இளைஞர் , இளம்பெண்களை பற்றி
ஆம் எம் இளைஞர்களே உங்களைப்பற்றிதான். உணர்வு ஒட்டுமொத்தமும் பெறாவிட்டாலும் கடந்த மூன்று வருடத்தில் பெற்றவர் ஏராளம் !
இன உணர்வோடு கிளர்வுற்று என் இனத்திற்கு என்ன செய்யப்போகிறேன் என சிந்தித்து கொண்டிருக்கும் சகோதரர் சகோரிகள் ஏராளம்.
இதைப்பற்றி சமுதாய பெரியவர்கள் பலரோடு உரையாடி சில வழிகள் கிடைத்தது. நம் சமுதாயத்தின் நாளைய மாற்றத்திற்கானதாக உள்ளது ! இதை என் இளைஞர், இளம் பெண்களிடம் ஒப்படைக்கிறேன். நாம் தான் இதை செய்ய வேண்டும் செய்ய போகிறோம்.
நமது முயற்சி பல முற்போக்கு சிந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில்
1. சமுதாய உணர்வின் படி ஒருங்கினைதல் , 2. சமுதாயத்தின் கல்வி வழிகாட்டல் , 3. வேலைவாயப்பு வழிகாட்டல்
இந்த மூன்றும் தான் ஓர் இனத்தின் மிக தெளிவான கட்டுமானம். அதை நம் இனத்தில் கட்ட வேண்டும்.இதை இன்றைய இளைஞர்கள் நாமே செய்திட வேண்டும்.
ஒவ்வொரு ஊர்களிலும் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் , படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் மாணவர்கள், வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் என இந்த மூவரும் ஓர் குழுவாக இணைதல் வேண்டும்.
குழு என்றதும் என்னதோ ஏதோ? என நினைத்துவிட வேண்டாம். நாம் நமக்கு தெரிந்தவற்றை நம் உறவுகளுக்கு பகிர்வது போதும். அது ஒரு குழுவாக இருப்பது பலம் !
ஊதாரணமாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் ஒர் கல்லூரியில் படிக்கலாம்
ஊதாரணமாக Law படிக்கிறார்கள் என்றால் அவர் கல்லூரி அவர் படிப்பு அவர் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் அவர் மூலம் அப்படிப்பு பற்றிய தகவல்களை சேகரித்து குழுவில் படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பகிர்தல் வேண்டும். அப்போது கல்லூரி படிப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு அது ஒரு வழிகாட்டுதலாகவும் ஒரு வேளை அந்ந கல்லூரியில் படிக்கும் வேளையில் அந்த மாணவர் உதவி பெறலாம். இது ஒரு குழுவாக அமைந்து இப்பணி தொடர்ந்தால்
அடுத்த அடுத்த மாணவர்களின் பயணம் சமுதாய வழியில் ஒரு நல்ல சிந்தனை நோக்கிய பயணமாக அமையும்.
அடுத்து படித்து முடித்த இளைஞர்களும் வேலையின்றி இருக்கும் இளைஞர்களும்.
உதாரணமாக நம் குழுவில் ஒரு இளைஞர் அரசு துறையில் ஓர் உயரிய இடத்தில் அமரலாம் அப்போது அது பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட வேண்டும் அப்போது அந்த படிப்பு படித்து அந்த வேலை தேடும் மற்றும் அந்த படிப்பு படித்து கொண்டிருப்போர்களுக்கு அந்ந நபரின் உதவி ஒரு வழிகாட்டிதலாக அமையும் !
இது தொடர்ந்தால் நம் சமுதாயத்தில் நாளை சிறந்த ஆட்சி பீடங்களில் நிச்சயம் அமர முடியும் நம் குழுவில் சில மாணவர்கள் அரசு தேர்வுக்கு பயிற்சி எடுக்கலாம். அந்த புத்தகங்களை குழுவில் அதே பயிற்சி எடுப்போருக்கு கொடுக்கலாம் இது தொடர்ந்தால் ஒரு பெரும் மாற்றமே உண்டாகும்.
இப்படி ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு குழுவாக இருக்கும் அனைத்து குழுக்களும் ஒன்றாக இனைத்துவிடலாம். முறையாக அந்த சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டால்.
குழு என்றதும் எங்கோ எண்ணத்தை செலுத்த வேண்டாம் மேற்கூறப்பட்ட மூன்று திட்டங்களை கொண்டு இளைஞர்கள் நாம் இனைவதே இந்த குழு !
இப்படி அனைத்து ஊர் குழுக்களையும் இணைக்கும் வேலையில் ஓர் பெரும் மாற்றம் அப்போது தெரியும் !
இது நமது சமுதாய உணர்வில் ஒருங்கினைப்பு , சிறந்த கல்வி வழிகாட்டல், நல்ல ஆட்சி அமர்வு ,நல்ல வேலை
என எண்ணங்களை நிறைவேற்றும் வழியாக அமையும்.
எ.டு இராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் ஊரை சேர்ந்த இளைஞர்கள் இதை கையில் எடுத்து கடந்த மூன்று வருடங்களாக Fisherman HUP என்ற குழுவாக இனைந்து பல நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர்
அதை போல் நம் சமுதாயமே அதை கையில் எடுக்கலாமே !
என் இன இளைஞர்களே !
எம் சகோதரிகளே ! ஒரு தாய் மக்கள் தான் நாம் ! என்ற உணர்வோடு இனணவோம் !
ஒற்றை குறிக்கோளை கொண்டு பயணிப்போம் !
நல்ல கல்வி ! நல்ல ஆட்சி அதிகாரம் !
நல்ல வேலைவாப்பு !
இந்த மூன்றையும் அமைக்க சமுதாய உணர்வை கொண்டு இளைஞர்கள் நாம் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் !
இதை பதிவாக எண்ணிவிடாதீர்கள்
இதை செயலாக்க ஆசைப்படுகிறோம் !
எங்களுடன் கைகோர்த்து ஓர் குழுவாய் இனைய வாருங்கள் !
ஒவ்வொரு ஊரிலும் இக்குழு உருவாக்கப்பட வேண்டும் !
சும்மா கமெண்டு போட்டு கடந்து சென்றுவிடாதீர்கள்...
இன்றே தொடங்க முயற்சிப்போம் ஓர் குழுவாக இணைய !
உங்கள் பதிலை( கமெண்ட்) ஏதிர்பார்த்து அல்ல !
உங்கள் செயலை எதிர்ப்பார்த்து அன்பு சகோதரன் !