Thursday, 20 October 2016

நமது பாண்டிய தொன்டி துறைமுகம்

https://youtu.be/EoegyxWI2TU

பாஞ்சாலக்குறிச்சி போரின் வரலாற்று போராளி பரத மன்னர்...

கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கெதிராய் வெகுண்டெழுந்தபோது வெடிமருந்துகளைக் கட்டபொம்மனுக்குக் கொடுத்து உதவி இருக்கிறார். ஏனெனில், வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுவதில் இருவருக்கும் ஒன்றுபட்ட கருத்துக்கள் இருந்தன. 1799-ஆம் ஆண்டு கட்டபொம்மனைக் கயத்தாறில் ஒரு புளிய மரத்தில் ஆங்கிலேயர் தூக்கிலிட்டுக் கொன்றபின், கோபமுற்ற மக்கள் அவர் தம்பி ஊமைத்துரையை ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுவித்தனர். பின்னர் தொன் காபிரியேல், ஊமைத்துரைக்கும், மருது சகோதரர்களுக்கும் வெடி மருந்து, துப்பாக்கி முதலிய ஆயுதங்கள் வரவழைத்துக் கொடுத்திருக்கிறார். (தினமலர் 23-11-1999) ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் புதிதாக ஒரு கோட்டையைக் கட்டினான். அடுத்து நிகழ்ந்த போரில், கோட்டையைத் தகர்த்தெறிந்து உள்ளே சென்று பார்த்த ஆங்கிலத் தளபதி கர்னல் 'வெல்ஷ்' என்பவன், அங்கே இருந்த நவீன ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், கண்டு இவையெல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன என்று வியந்துள்ளான்.

மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. ராஜய்யன் தனது ஆய்வு நூலில் "பரத ஜாதித் தலைவரால் வழி நடத்தப்பட்ட பரதர் எனும் மீனவர் சமுதாயம் சுதந்திரக் கிளர்ச்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி பீரங்கிகளும் வெடிமருந்துகளும் கொடுத்து உதவி ஒரு பயங்கரப் புரட்சிக்கு வித்திட்டனர்." என்று எழுதியுள்ளார். (The Paravas. The Fisheermen Community led by Jathi Thalaivan, not only joined the Rebellion, but supplied guns and Gun Powder for the Promotion of the Struggle.) மேலும், காடல்குடி எனும் சிற்றூரில் இரகசியமான வெள்ளையர் எதிர்ப்புக் கூட்டம் திருநெல்வேலி, இராமநாதபுரம் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த தன் கீழுள்ள சிற்றரசர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  பிறகு ஆங்கிலேயர், ஊமைத்துரையைத் தூக்கிலிட்டுக் கொன்றபின், அவருக்கு வெடிமருந்துகள் கொடுத்து உதவியதாகத் தொன் கபிரியேலையும் தேடினார்கள். ஆனால் இவர் மாறுவேடம் போட்டுக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். (தினமலர் 28-11--99) அந்த நேரத்தில் இவர் பிடிபட்டிருந்தால் இவரையும் தூக்கிலிட்டிருப்பார்கள்.

தூத்துக்குடியிலுள்ள இவரது தலைமை இல்லமாகிய "பாண்டியபதி" யில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களின்படி, கோவிலில் உள்ள ஆசந்தி சுருபம், பிடிபட்ட ஆண்டவர் சுருபம், உயிர்த்த ஆண்டவர் சுருபம், தந்தத்தினால் ஆன சிலுவைகளும், தந்தத்தினால் ஆன குடில் சுரூபங்களும் அன்னை பக்தர்களின் விசேஷ வணக்கத்திற்காக தேவ அன்னையின் திருத்தலைமுடிகளில் ஒன்றும், இவருடைய காலத்தில் தான் அன்னையின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. நமது அன்னையின் திருச்சடங்கிற்குப் பொன் மகுடம், வைர டோலக், முத்துமாலைகள் அணிவித்து, அலங்கரித்தவரும் இவரே. அன்னையின் திருத்தலைமுடி வந்து மேல் விபரம், 24-04--1790--இல் கொச்சி மறைமலை ஆயர், அஞ்சங்கோ என்ற ஊரில் இருந்த இம்மன்னனுக்கு எழுதிய கடிதங்கள் காணக்கிடைக்கிறது.  1792-ஆம் ஆண்டு கால்வீனிய பிரிவின் சபையின் டச்சுப் பாதிரியார், ஜான் டேனியல் ஜெனிக்கே என்பவர் மே மாதம் 4-ஆம் தேதி இத்தலைவனைச் சந்தித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளதாவது: "On May 4th, I with the Chief of Paravas Caste, whom the Call Prince and conversed with him along time. He lives in European manners, reads his Bible assiduously and his knowledge excellent." என்று கூறியுள்ளார்.

தன் வாழ்வில் இடைவிடாப் போராட்டங்களை முடித்துக்கொண்டு 180? ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் தேதி தனது -- வது வயதில் கர்த்தரில் நித்திரையடையச் சென்றார். இவரது சடலம், புனித இராயப்பர் ஆலயத்திற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர் கல்லறை மீது சித்திர வேலைப்பாடுகளுடன் சிறு கருங்கல் மண்டபம் இருந்தது. பரதவர்களின் பெருமைக்குச் சான்றாய்ப் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த அழகிய மண்டபம், புனித தெலச பள்ளிக்கூடம் கட்டும் சாக்கில் இடித்துத் தள்ளப்பட்டது. போர்த்துக்கீசிய மொழியிலும், பழந்தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டு அரச முத்திரையுடன் கூடிய இவரது கல்லறைக்கல், இன்னும் தெலசா பள்ளி மைதானத்தில் நடைபாதைக்கல்லை ஒதுக்கித் தள்ளப்பட்டிருப்பதைப் பல நாளிதழ்கள் கவலை தெரிவித்து எழுதியும் கூட இதைப் பாதுகாக்க ஒருவரும் முன்வரவில்லையே! இம்மன்னன் புதையுண்ட இடத்தில் தான் இவரது பெற்றோரும் மனைவியும் இவர் பின்னர் வந்த குலாதிபர்களும் 1914-ஆம் ஆண்டு வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  சிறப்புகள் பல வாய்ந்த இம்மன்னன், முன் உலவி வந்த இப்பகுதியில் இன்று நாம் வாழ்வதே பெருமையளிப்பதாகும். நாட்டுப் பற்றோடும் இறை பக்தியுடனும் உலா வந்த இம்மன்னனை இந்த இனிய நாட்களில் நினைவு கொள்வோமாக...

நம் மன்னர் தொன்கபிரியேல் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியரின் கேட்பாரற்று கிடக்கும் இவரது
கல்லறையை பாதுகாக்கவேண்டும்...
இதற்கு அனைவரும் முன் வரவேண்டும்...

தகவல்களுக்கு நன்றி...
Reigenr Fernendo