இன்றைய நம் சமுதாய இளைஞர்கள், இளம்பெண்கள் என ஒவ்வொருவர் மனதிலும் எரிந்து கொண்டிருக்கும் கேள்வி ?
நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும்.
நம் இனம் யார் ? அன்டை நாட்டுக்காரன்(சிங்களவன்) நம் உறவுகளை சுட்டுவீழ்துகின்ற போதிலும் சொந்த நாட்டில் கூட கேட்பாரற்ற ஓர் இனமாக ஆகி விட்டோமே ! நமக்கென்ற விடிவு காலம் தான் எப்போது ? நம் அனைவரின் கேள்விக்கான பதில் இன்றைய இளைஞர்களின் எழுச்சியில் தான் பிறக்கும்.இன்றைய இளைஞர்கள் (நாளைய சமுதாயம்) தன் இனத்தின் மீதுள்ள பற்றை வெளிக்கொணர வேண்டும்.அந்த ஆர்வம் நம் மதிக்கொண்டு அறிவின் வழியில் செயலாக மாற வேண்டும்.காலம் காலமாக கடலையும் நிலத்தையும் ஆண்ட இனத்தின் இன்றைய நிலைக்கு நம் சமுதாயத்தவர் அரசாங்க உயர் பதவிகளில் அமர நாட்டம் கொள்ளாமையும் ஓர் காரணம் !
படித்து முடித்த இளைஞர்கள் வெளிநாடு மோகத்தில் இனத்தை மறந்து குடும்பத்தை மறந்து படித்த கல்விக்கும் பலனின்றி எங்கோ கப்பல் வேலை என்று செல்வதும் !
படித்தி முடித்த பெண்கள் ஆசிரியர் என்ற வட்டத்தில் சுன்றி திருமணம் என்பதற்குள் நின்று விடுவதும் நமது சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியும் உருவாக்கிகொண்டும் உள்ளது !
நம் சமுதாய உறவுகள் இனி அரசாங்க பதவிகளிள் அமர முயற்சி செய்ய வேண்டும் !
உலகில் முடியாதது என்பது முயற்சி செய்யாத ஒன்றாகத்தான் இருக்கும்...
முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் முடியும் நமதாலும் ! நாளைய நம் சமுதாயத்தின் அடையாளத்தை மாற்றி அமைக்க அது காலத்தின் கட்டாயம் அது நடந்தே ஆக வேண்டும்.
நம் சமுதாய பெண்களும் நம் சமுதாய முன்னேற்றத்தில் தங்களுக்கும் பெரும் பொறுப்பும்,கடமையும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் ஓர் ஆணிண் விழிப்புணர்வை விட ஓர் பெண்ணின் விழிப்புணர்வும் எழுச்சியும் அச்சமுகத்தில் பெரும் மாற்றம் உண்டாக்கும் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் !
வரலாறு என்பது அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஓர் இனம் அதன் வரலாற்றை இழந்தும் மறந்தும் கொண்டிருக்கிறது என்றால் அவ்வினம் அழிந்தும் தன்னைத்தானே வதைத்து கொண்டிருக்கிறது. கடந்தால வரலாற்றை இழந்த இனம் நிகழ்காலத்தில் சிதைவடையும் எதிர்காலத்தில் அது தகர்த்தெறியப்படும். அது நம்மினத்திற்கு கண்கூடாக நடந்து கொண்டிருக்கிறது.
சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்,அகநாணுறு,புறாநணுறு,நற்கினை,மதுரை காஞ்சி என பல நூல்களால் புகழப்பெற்ற இனம் ! தமிழை உயிராக வளர்த்த பாண்டிய இனத்தின் குலம் இன்று ஏதோ மீன் பிடித்து வாழும் சமுகமாக மட்டும் தாழ்த்தி சினிமாக்களில் சித்தரிக்கப்பட்டு
இன்று இதர சமுகங்களின் மட்டுமல்லாமல்
நம் சமுகத்திடம் கூட ஓர் சித்திரத்தை உருவாக்கி தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி கொண்டிருக்கிறது ! அதை முதல் தகர்த்தெறிய வேண்டும் ! அறிந்து பாருங்கள் நம் வரலாற்றை பின் தெரியும் நம் இனத்தின் பெருமை ! நமது வரலாற்றை நாம் மீட்டெடுக்கவோ, நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லவோ தவறிவிட்டால் காலத்தின் கட்டாயத்தால் எதிர்காலத்தில் நீ யார் என்று நம் இனத்தின் மீது உருவாகும் கேள்விக்கு அதற்கு நம்மிடத்தில் இருந்து எழும் பதில் வெற்றிடமாகவே மாறி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை ! இளைஞர்கள் ஒவ்வொருவரும் வரலாற்றை படிப்பது கொள்ள என்று உணர்வோடு நமது அடுத்த தலைமுறைக்கு அவ்வரலாற்றை எடுத்து சொல்லவேண்டும் !
மதம் என்ற போர்வையில் மடிந்து நம் பலமும் நம் கண்களுக்கு தெரியாமல் போய்விட்டது.
நம் சமுகம் கிறிஸ்தவம்,இந்து,முஸ்லீம்
என பல மதங்களில் வாழ்கிறது.இந்த முன்று மதங்களும் தனி தனியாகவும்,எந்த ஒரு தொடர்பும் இன்றி இருப்பது மிகப்பெரிய பலவீனமாகவே அமைந்திருக்கிறது.
மதம் என்பது இறைவழிபாடு, இனம் என்பது
குடும்பம். பிற சமுதாயங்களை பாருங்கள்
இந்து,கிறஸ்தவம் என்று ஒரே சமுகத்தில் உறவுகளாக ஒரே இடத்தில் வாழ்கின்றனர்.நாமோ மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கிறோம்.நம் இனம் மீண்டும் தன் அடையாளத்தை பெற்று தன் பழைய நிலமைக்கு வர மதம் கடந்து இனமாக ஒன்றினைவது காலத்தின் கட்டயம் !
மன்னர் காலம் மட்டுமல்லாமல் இன்றைய காலத்திலும் அனைத்து சமுதாயத்தவரும் போற்றும் வண்ணம் வாழ்ந்த சமத்துவ தலைவர்கள் ஐயா குருஸ்பர்னாந்து,சிந்தனை சிற்பி சிங்காரவேலர்,ரோச்.விக்டோரியா.
சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேய இராணுவமே வியந்த பாஞ்சாலக்குறிச்சி போருக்கு மிக பக்கபலமாய் இருந்த
வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்
தொன் கபிரியேல் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியன், சுதந்திர போராட்ட தியாகிகள்
ஐயா தென்னாட்டு வேங்கை தியாகி பெஞ்சமின்,ஜே.பி ரொட்ரிக்ஸ் என என்ன்ற்ற தலைவர்கள் பிறந்த இனம்.ஆனால் அந்த தலைவர்களை தியாகிகளை மறந்த இனமாக நாம் இன்று !
இவை எல்லாத்திற்கும் மேல் தலை தூங்கி நிற்கும் பிரச்சனை கலப்பு திருமணம் நம் சமுதாய பெண்கள் பிற சமுதாய இளைஞர்களிடம் காதல் எனும் வலையில் வீழ்ந்து தன் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர்.மீளமுடியா கண்ணீரில் மூழ்கி கிடக்கின்றனர்.இனி நம் இனத்தில் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை சீரழிவதை ஒரு போதும் நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது !
இனி ஒரு முடிவெடுப்போம் இளைஞர்களே !
இளம்பெண்களே " ஒருவனுக்கு ஒருத்தி பரதனுக்கு பரத்தி " என்றவாரு நம் இனத்தை காற்போம் ! ஆனால் இது இன்றைய இளைஞர்கள் ,இளம்பெண்கள் உதவின்றி நிகழாது !
" ஆயோத்தி ஆண்ட பரதா !
மீன் கொடி கட்டி ஆண்ட பாண்டியா !
உத்திரகோசமங்கையில் கல் தேர்
ஓட்டிய மன்னவா "
வழி வந்த இனமே ! ஒன்றுபடுவோம் !
இளைஞர்களர நாம் ஒன்றினைந்தால் முடியாது என்று ஒன்று இனி இல்லை !
நம் இனம் வென்றாக வேண்டும் !
அதறகு நாம் ஒன்றாக வேண்டும் !