இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து
மறைக்கப்பட்ட பரதர் இனம் தனது அதிகாரத்தையும்,உரிமையையும் இழந்து
கிளர்வுற்று மீண்டெடுழுந்த போர்களம் தான்
வெடலைப்போர்களம் கி.பி 1535
சங்ககாலம் தொட்டே முத்தெடுத்தலும்,
சங்கறுத்தலும்,மீன் பிடித்த்தலும் தனது
பிறப்புரிமையாக கொண்டி கடலை ஆண்டு
மன்னார் வளைகுடாவில் மீன் கொடி கட்டி
ஆண்டவர்களே பரதவ பாண்டியர்கள்.
கி.பி 1534 அப்போது பாண்டிய அரசு
தன் அரசாட்சியை விஜய நகர பேரரசிடம்
பறி கொடுத்திருந்தது.அவர்களிடம்
அரேபியர்களும்,மூர் இனத்தவர்களும்
நயவஞ்சகமாக பொன்னும் பொருளும் கொடுத்து காலம் காலமாக பரதர்களுக்கு
உரிய மன்னார் வளைகுடாவை குத்தகைக்கு
வாங்கினார்.மற்றும் மூர் இன முஸ்லிம்கள்
தூத்துக்குடியில் குடியமர்த்தப்பட்டனர்.
பரதர்களிடம் வரி என்ற பெயரில் தங்கள்
கொடுமைகளை ஆரம்பித்தனர். அடங்க மறுத்த பரதர்கள் சிரம் அறுக்கப்பட்டனர்.
இந்த வேளையில் கடற்கரைக்கு பணியாரம்
விற்க சென்ற பரத பெண் ஒருத்தியை
மூர் இனத்தவன் ஒருவன் கேளி செய்ய
அவள் அவன் கண்ணத்தில் அறைகிறாள்.
கோபமுன்ட மூர் இனத்தவன் பரத்தியின்
காதை அறுத்துவிட வெகுண்டது போர் களம். பரதர் இனத்தவர் சினம் கொண்டு
சிங்கமாய் சீறுகின்றனர் . 100 க்கும் மேற்பட்ட மூர் இனத்தவர்களை
வெட்டி இரத்த வெள்ளமாக்கினர்.
இதுவே பரதர்களின் இன அழிவுக்கு
அடித்தளமாக அமைகிறது.
மூர் இனத்தவர் பகிரங்கமாக ஒரு
அறிவிப்பு அறிவிக்கின்றனர்.பரதர் தலை ஒன்றுக்கு ஐந்து ருபாய் என்று அறிவிக்க
மூர் இனத்தவரும்,நாயக்கர்களும் பரதர்களை
வெட்டி சாய்க்க ஆரம்பித்தனர்.மூர் இனத்தையும் நாயக்கர்களையும் ஒரே மூச்சில் அழிக்கும் வீரம் இருந்தாலும் அந்தகாலத்தில் அவர்களிடம் இருந்த
நவின துப்பாகிகள் நம்மிடம் இல்லை
நம்மிடம் இருந்தவை வாளும்,ஈட்டியும்,இது போற்று இரும்பு ஆயுதங்கள் தான் இவைகள் துப்பாக்கிகளின் முன் செய்வதறியது நின்றுவிட்டன.அனைத்து பரதர் ஊர்களும் இரத்த வெள்ளங்களில் ஆறாய் ஓடுகிறது.
ஊருக்குள் காலடி வைத்தால் பரதர் தலைகள்
எங்கும் சிதறிகிடக்கின்ற நிலமை வர வியந்த மூர்கள் பணம் கொடுத்து முடியாமல் பணத்தை ஐந்திலிருந்து ஓன்றாக குறைக்கிறான் அப்போதும் இரத்த வெள்ளம்
குறையவில்லை.அந்த காலத்தில் பரதர் தலைவனராக இருந்த விக்கிர ஆதித்ய பாண்டியன் தன் இனத்தை எப்படி காப்பாற்ற
என்று செய்வதறியாமல் தவித்து கண்கலங்குகிறார்.*ஆனாலும் இத்தகைய
துண்பங்களை அணுபவித்த போதிலும்
கடலை விட்டு கொடுக்கவோ,எதிரிகளின்
காலில் விழுந்து இழந்த உரிமைகளை மீட்கவோ மனம் வரவில்லை இந்த பரதர் சமுதாயத்திற்கு "வாளோடு போரிட்டு வீழ்ந்தாலும் வீழ்வோம்,வாளுக்கு அடிபணிந்து வீழ்ந்து விடமாட்டோம்" என்று
உறுதியாய் இருந்தனர்.
இந்த சமயத்தில் தான் ஏற்கனவே மூர்களால்
சித்திரவதை அணுபவிக்க பட்டு தூத்துக்குடிக்கு தப்பி வந்து விக்கிரம ஆதித்ய் பாண்டியனால் பாதுகாத்து வந்த
டாம்ஜோன் குருஸ்.தன்னை காப்பாற்றிய விக்கிரம ஆதித்ய பாண்டியனுக்கு நன்றிகள் கூறி மேலும் பரதர் இனத்தக காக்க ஒரு வழி கூறுகிறார்.அவருடன் சேர்ந்து சாதித்தலைவரும்,ஏழு ஊர் பட்டங்கட்டிமார்களும் சேர்ந்து கொச்சிக்கு
பணம் மேட்கொள்கின்றனர்.
அங்கே போர்ச்சுகீசிய ஆளுமையில் இருந்த துறைமுக கோட்டையில் கேப்டன் பெட்ரோ
வாஸ் மற்றும் விக்கர் ஜெனரல் மைக்கேல் வாஸை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர்.
அதற்கு அவர்கள் பரதர் கிறிஸ்தவ மதம் மாறினால் இன்னொரு சக கிறிஸ்தவனுக்கு
உதவுவதை யாரும் எங்களிடம் கேட்க முடியாது மற்றும் நாங்கள் இல்லாவிடில் இறைவன் காப்பாற்றுவார் என்று சொல்லி
நம்பிக்கை கூட்டி மதம் மாற சொல்கின்றனர்.
பரதர் சாதித்தலைவனார் விக்கிரம ஆதித்ய பாண்டியனும் எதிரியின் காலில் விழுந்து
உயிர் வாழ்வதை விட மதம் மாறலாம் என்று
உடனே மதம் மாற முடிவு எடுக்கிறார்.
இதை அறிந்த மூர் இனத்தவர் அதிர்ச்சியுற்று
பொன்,பொருள்,முத்து,20,000 பணம் என
கேப்டன் பெட்ரோவாஸை சந்தித்து பரதருக்கு உதவாதீர்கள் என்று கூறுகிறார்கள் அதற்கு அவர் "காலம் காலமாக இந்த கடலை ஆண்டவர் யார் என்பதும் தெரியும், இங்கு நடந்த அணிதீகளும் தெரியும் ,நடக்க போதும் தெரியும் பரதர்கள் மதம் மாறுவதை யாரம் தடுக்க முடியாது என்று கூறுகின்றார்.
உடனே பரதர் மதம் மாறுகின்றனர் சுமார்
20,000 பரதர்கள் உலகிலேயே ஒருவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு இனமே (20,000 பேர்) மதம் மாறியது பரதர்களை தவிர வேறு யாரும் இல்லை. அதன்படியே
1537 ஆம் ஆண்டு பாதிரியார்கள் ஒரே நாளில் ஒவ்வொரு பரதர் ஊராய் சென்று
திருமுழுக்கு கொடுத்தனர். பரதர் அனைவரும் கடலில் மூழ்கி திருமுழுக்கு பெற்று அன்றே அனைவரும் மதம் மாறுகின்றர்.
அந்த நாள் தான் விபுதி புதனுக்கு முன் நாம்
கொண்டாடும் சாம்பல் திருநாள்.அதுதான்
ஒட்டு மொத்த பரதர்களும் கிறிஸ்தவம் மாறிய நாள்.அன்று முதல் பரதர்கள் பக்தியில் அதிகமாகி தாங்கள் பரதர் என்று சொல்வதை விட தான் கிறிஸ்தவன் என்பதை சொல்வதை பெருமையாக நினைக்க ஆரம்பித்தனர் அதுவே (இன்றைய நிலைமைக்கு காரணம்).
பின்னர் போர்ச்சுகீசியர்களின் வாக்குறுதிபடியே மதம் மாறிய பின்னர்
போர்ச்சுகீசிய படைகள் அணுப்பிவைக்க படுகின்றனர்.அன்று சில வருணங்களாக
முத்தெடுப்பதிலும்,மின் பிடிப்பதிலும்
பிரச்சனைகளை கொண்டிருந்த பரதர்
மீண்டும் இயல்பு நிலைக்கு ஆரம்பிக்கின்றனர்...
ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை...
போர்ச்சுகீசிய படைகள் பெரும்பாண்மை
மீண்டும் நாடு திரும்மி சில கப்பல் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர்.
இந்த சமயத்தில் மூர்கள் மீண்டும்
2000 படை வீரர்களுடன் பரதர் ஊர்களை
சூறையாடினர் தடையாக இருந்த சில
போர்ச்சுகீசிய கப்பல்களை தகர்த்தெறிந்தனர்.மீண்டும் பரத ஊர்கள்
இரத்த வெள்ளமாய் ஓடினர்.
விவரம் தெறிந்த போர்ச்சுக்கல் படை
கிளம்பினாலும் காற்றின் காரணமாக வர முடியாமல் திரும்புகின்றனர்.
இதை கேள்விப்பட்ட மூர் இனத்தவன்
கடற்கரையிலே நின்று கொண்டு கொக்கருக்கிறான்."மன்னார் வளைகுடாவின் மன்னர்கள் பரதர்கள்" இப்போது மண்ணுக்குள்ளே.சுல்தானின் படைகள் வருகின்றன,நாயக்கர்களின் படைகளும் வந்துவிட்டன இனி இந்தியாவே நமக்கு கீழே.பரதர்களையே வீழ்த்திய பிறகு இங்கே யார் இருக்கா நம்மை வீழ்த்த.என்று கடற்கரையிலே பேசிக்கொண்டே இருக்கிறான்.
ஆனால் திடிரென்று வீரமும்,விஞ்சானமும்
சேர்ந்து விட்டது.ஆம் போர்ச்சுகீசிய படைகள் 12 கப்பல்களில் 600 வீரர்கள்
வருகின்றனர்.வந்து கடற்கரைக்கு சென்று பார்கின்றனர் .அங்கு இருந்தது பெண்களும் ,இளைஞர்களும் கனவனை இழந்த பெண்கள் தங்கள் மகனை இனம் காக்க போருக்கு அணுப்பினர் புறுனாநுற்று வீர கதைகள் அங்கே நடந்தது.
மீதம் இருந்த அனைத்து பரதர்களும் *தற்கொலை படையாய் மாறினர்* நாம் அழிந்தாலுத் நம் இனத்தின் அடுத்த தலைமுறையாவது இந்த மண்ணில் உரிமையோடு வாழ வேண்டும் என்று.இங்கே பரதரின் வீரமும்,போர்ச்சுகீசியரின்
வெடிகுண்டுகளும் ஒன்று சேர்ந்து புது
இரத்த சரித்திரம் எழுதுகிறது.
புன்னக்காயலில் உள்ள விக்கிரம ஆதித்ய பாண்டியனன் - கீழக்கரை நம் பங்காளி மறவர்களுக்கு அவசர செய்தி சொல்ல
மறவர் கூட்டம் போர்களத்திற்கு விரைகின்றனர்.
வெடலையில் அடும் கொட்டமும்,நாயக்கர்களின் நயவஞ்சகமும்,
பார்த்து மீசை துடிக்க,புஜங்கள் துடிக்க,
இரத்தம் சூடேறி வாழ்வா ! சாவா !! போரிட்டு பார்த்துவிடலாம் என்று பரதர்களும் பங்காளி மறவர்களும் சேர்ந்து தரைவழி போர்களத்திற்கு தயராகினர்.
மறவர் சொந்தங்கள் தரைவழி போருக்கு தயாராகவும்,காலம் கடந்தால் கடற்கரை உள்ளே நுழைந்து போர் செய்யவும் தயார்
நிலையில் இருந்தனர்.
இரண்டாவது நமது பரத குல முத்துக்குளிப்பார்களை கடலில் மூழ்கி
நாயக்கர் கப்பல்களில் ஏறி போர் ஆரம்பிக்கவும் கப்பல்களை கொழுத்தவும்
ஆணையிட்டனர்.
மூன்றாவது எதிரி கண் விழிப்பது நமது
துப்பாக்கி முனையிலும்,வாள் முனையிலும் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
யாரும் பின் வாங்க கூடாது நெஞ்சை நிமிர்த்தி காட்டி முன்னேர வேண்டும்.
நாம் திரும்பி வந்தால் அது வெற்றியாக மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர
வேறும் எதுவுமாக இருக்க முடியாது
நம் சந்ததிகள் வாழ நம் உயிரை கொடுப்போம் என்று சபதம் எடுத்து கிழம்பினர்.
அன்று தான் துப்பாக்கியை பரதர் கையில் கொடுத்து சுட சொன்னார் கேப்டன் மார்டிம்.
பரதர் எப்படி சுட என்று தெரியாமல் விழித்த போது சாதித்தலைவனார் சொன்னார் கடலில் மாரியாவிலே வரும் சுறாவை
வேல் தூக்கி குறிப்பார்த்து எறிய தெரிந்த பரதருக்கா குறிபார்த்து சுட தெரியாது.
சுட்டாபாருங்கள் தெரியும் என்று.
அன்று ஒலே நாளில் காலை முதல் மாலை வரை பரதர்கள் பயிற்சி எடுத்து போர்ச்சுகீசியலை காட்டிலும் துப்பாக்கி சுடுவதில் வல்லுனர் ஆகினர் என்பது வரலாற்று உண்மை.அன்றே நாட்டு வெடிகுண்டு சுத்தவும் எறியவும் கற்றுக்கொண்டர் பரதர் இனம் காக்க.
ஜனவரி 29 மாலை சூரியன் மறைந்தது.
பரதர்கள் விடிவதற்கு காத்திருந்தனர்.
முத்துக்குளிப்பவர்களும் கடலில் மூழ்கி கப்பலுக்குள் பதுங்கி இருந்தனர்
விடியலுக்காக. அன்று ஒரு நாள் இரவு (ஜனவரி 29 1537 அன்று ) ஒட்டு மொத்த பரதர் இனமும் இனத்தின் மீட்சிக்காக யாரும் உறங்காது போருக்கு ஆயுத்தமாகி கொண்டிருந்தனர் .பெண்கள் வெற்றிக்காக இறைவனிடம் ஜெபம் செய்தனர்.
ஜனவரி 30 1537 சூரியன் உதித்தது.
மூன் இனத்தவர்கள் அதிச்சியுற்றனர்.
பரதர் துப்பாக்கி முனையில் மூர் இனத்தவர்
அகப்பட்டு விட்டனர்.முன் வரிசையில் பரதர் இளைஞர்கள் துப்பாக்கிகளோடும்,பின் வரிசையில் போர்ச்சுகீசிய படைகளும்,பரதர்களும் சென்றனர்.மூர் இனத்தவர் கண் மூடி திறப்பதற்கு முன்
இரத்தம் கொதித்து கொண்டிருந்த பரதர்
மூர் இனத்தை கடலில் இரத்த வெள்ளத்தில்
ஓட விட்டனர்.போரில் சில பரதர்களும் துப்க்கி சூடில் உயிர் இழந்தனல் ஆனால் வெற்றி கண்டது பரதர் இனம் மீண்டது..!!
நம் பரதர் இனம் காக்க அன்று இரத்தம் சிந்திய வரலாறு .....
ஒவ்வொரு வருடமும், நமது ஞாறத்தந்தை
சவேரியாரின் திருவிழா (டிசம்பர்-03) போது போரில் இறந்த பரதர் மாவீரர்களுக்கு
அஞ்சலி செலுத்துவது.அவர் வீரத்துக்கு
மரியாதை செய்வது திருவிழா திருப்பலி
முடிந்து அஞ்சலி செலுத்துவது வழக்கமாகவே இருந்தது பின் சாதியின்
பெயரால் மறைமாவட்டம் நன்றியை மறந்து
அதை படிபடியாய் நிறுத்தியது.மக்களும் மறந்தார்கள். அது மீண்டும் நடத்தப்பட வேண்டும்....அடுத்த வருடம் அனைத்து பரதர்
ஊர்களிலும் பரதர் இளைஞர்கள் சேர்ந்து
நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும்
விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...
போரில் உயிர் இழந்த பரதர் குல மாவீரர்களுக்கு
#வீர_வணக்கம்_பரத_மாவீரர்களுக்கு