Saturday, 24 June 2017

முகப்புத்தகத்தில் உங்கள் புகைப்படம் பதிவிடும் பெண்களா நீங்கள் ? கட்டாயம் படியுங்கள்...

"பெண்கள் நம் கண்கள்"
இப்பழமொழிகள் பாதி இறந்துவிட்டது
என்பதை இன்னும் சகோதரிகள் உணராமல் இருந்தால் பாதிப்பு உங்களுக்கு !

தினம்  முகப்புத்தகங்களில் பெண்கள் அவர்களது சுயப்படங்களை பதிவிடுவது. நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது.இதை நாம் தவறு என்றால் . ஏன் எங்களுக்கு உரிமை இல்லையா ? ஆணாதிக்கமா என்கிறார்கள்.

இது ஆணாதிக்கமும் அல்ல , பெண் உரிமை பறித்தலும் அல்ல ! "பெண்களின் பாதுகாப்பு" பற்றியது. ஆம் இன்றைய சூழ்நிலையில் ஓர் பெண் தனது புகைப்படத்தை  சமூக இனையதளங்களில் வெளியிடுவதால். அது சில ஓநாய்களிடத்தில்  கிடைப்பதால் நடக்கும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா ?

முகப்புத்தகத்தில் பெண்கள்(Female) முகப்புத்தக கணக்கில் 100 இல் 60 சதவீதம் பொய் கணக்குகள் (Fake accounts) பெண்களின் பெயரில் ஆண்கள் உபயோகிக்கும் கணக்குள். அந்த 60 சதவீத முகப்புத்தக கணக்குகளில் குறைந்தத பட்சம் 35 சதவீத கணக்குகள் பெண்களின் கணக்குகளைப்போலவே உபயோகிக்கின்றனர்.அவர் உண்மை கணக்குகளாக உபயோகிக்கும் அந்த கணக்கிற்கு படங்கள் எங்கே  இருந்து வருகிறது தெரியுமா ?   மீதி இருக்கும் 40 சதவீத முகப்புத்தக (பெண்)  கணக்குகளில் 25 சதவீத கணக்குகள் இன்றளவும் தங்கள் புகைப்படத்தை வெளியிடாமல் நடிகைகள் படம் , வேறு எதாவது என்று உபயோகிக்கின்றனர். மீதி 15 சதவீத கணக்குகள் தங்கள் புகைப்படங்களை  தாறுமாறாக பதிவேற்றுகின்றனர். அந்த 15 சதவீத கணக்குகள் தான் . அந்த 35 சதவீத  பொய் கணக்குகளுக்கு ( Fake accounts)  உயிர் கொடுக்கின்றது. ஆம்
முகப்புத்தகத்தில் உங்கள் படங்களை பதிவிடுபவரா நீங்கள் அப்போது உங்கள் படம் ஏதேனும் ஓர் கணக்கில் இருக்கும் எதாவது ஒர் பெயரில்... எதாவது ஒர் தவறான காரியத்திற்கு உபயோகிக்கப்பட்டு கொண்டிருக்கும்... இதை தெரிந்தும் உங்கள் படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவீர்கள் என்றால் பதிவிடுங்கள்...

#இன்ஸ்டாகிராம் (Instagram)  முகப்புத்தகத்தில் தங்கள் படங்களை பதிவிட தயங்குபவர்கள் அதிவேகமாக தங்கள் படங்களை களம் இறக்குவது இங்கே தான். இது அந்த பெண் படம் திருடர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போல !
பட திருடர்கள் அதிகம் திருடுவது இங்கேத்தான்.

பெண்களின் படங்கள் திருடப்படுவது
முகப்புத்தகங்களில் சுயவிவரப்படங்களாக வைப்பதற்கும்  (Fake accounts)  உபயோகிப்பதற்கும் மட்டுமல்ல ஆபாச இனையதளங்கள், ஆபாச முகப்புத்தக கணக்குகள், ஆபாச முகப்புத்தக  பக்கங்கள் என இன்றைய இளம் சமுதாயத்தையே சீரழித்துக்கொண்டிருக்கிறதே ! அவைகள் அனைத்து படங்களும் ஆபாச பெண்களின்(தவறான வழி சென்ற)  படங்கள் மட்டுமல்ல !
இப்படி முகப்புத்தகத்தில் பதிவேற்றும் அப்பாவி  பெண்களின் படங்களும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் இப்படி பதிவேற்றும் அப்பாவி பெண்களின் படங்களும் அவர்களின் உடல்களையும், முகங்களையும் வைத்து எடிட்டிங் செய்யப்பட்டவைகளே ஆபாச இனையதளங்களில் 70 சதவீத படங்கள்.

இதில் பிரச்சனைகளில் சிக்கி தன் படங்களை ஏதேனும் ஓர் தவறான ஆபாச பக்கங்களில் கண்ட பின்பு தான் இந்த உண்மையே அவர்களுக்கு தெரிய வருகிறது.
ஆனால் பிரச்சனை வந்த பின்பு அழுது என்ன பயன் ?

இதில் நான் தவறானவர்கள் (அனைவரும்)
என்றோ ! இல்லை சிலர் தான் கெட்டவர்கள் என்றொ எந்த நியாயம் பேச விரும்பவில்லை ! உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் சில சகோதரிகளின் புகைப்படங்களை சிலர் தவறான பக்கங்களில் பதிவிட்டு அதை நீக்க பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்.சில உறவுகளின் துனையாலே அந்த பக்கம் நீக்கப்பட்டது !

தங்கள் படங்களை சமுக இனையதளங்களில் பதிவிடுதால் மட்டுமல்ல எச்சரிக்கையோடு பாதுகாப்பின்றி இருந்தாலும். இதே நிலமைத்தான்.

கவனமோடு இருங்கள். நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களும் சில நேரத்தில் எதிரியாக வரும் வேளையில் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகிக்கொண்டிருக்கிறது...

எவராக இருந்தாலும் உங்கள் பாதுகாப்பு உங்களிடம் தான் உள்ளது !

ஏதோ எல்லா ஆண்களையும் குற்றாவாளி என சொல்லி என்னை நல்லவன் என சொல்லவில்லை ! சொல்வும் மாட்டேன்...
எல்லோரும் எதாவதொரு சூழ்நிலையில் தவறு செய்திருக்கலாம்... நான் சொல்லவருவது இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்கிறது உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்....

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல நீங்கள் நினைக்கலாம்  நண்பர்களாக இருக்கும் படம் தானே ! கணவரோடு இருக்கும் படம் தானே ! அண்ணனோடு இருக்கும் படம் தானே ! குடும்பத்தோடு இருக்கும் படம் தானே ! என்று நினைக்காதீர்கள் உங்கள் முகம் மட்டும் கிடைத்தாலே போதும் அதை எடிட்டிங் செய்து ஆபாச படமாக்கி பணம் சம்பாதிக்கும் கேடுக்கட்டவர்களோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

ஏன் உங்கள் முகம் கூட வேண்டாம். உங்கள் கண்,மூக்கு ,வாய் இருந்தாலே போதும் உங்கள் உருவத்தை உருவாக்க முடியும்...
இப்படி ஓர் பேர் ஆபாத்தான சூழ்நிலையில் தான் உள்ளோம்.

இவற்றை கேட்கும் போது ஏன் பெண்கள் வாழத்தகுதியற்றவர்களா என்று கூட மனம் ஏங்கும். ஆனால் அந்த நிலமைக்கு சில ஓநாய்களால் இன்று ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதே உண்மை ! ஆபாசம் என்பதே இங்கு வியாபாரம் ஆகிவிட்டது ! இவற்றை புரிந்து உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளுங்கள் !

அப்பாவி பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கும் மானம் கெட்டவர்களே !
உன்னை பெற்றடுத்தவளும் ஓர் பெண் தான் என்பதை மட்டும் நினைவில் கொள் !

இனியும் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டுத்தான் இருப்பீர்கள் என்றால். ஓர் நாள் உங்கள் படம் ஏதேனும் ஓர் ஆபாச இனையதளத்தில் ஆபாசமாக  , ஆபாசமான பதிவுகளோடு பதிவேற்றப்பட்டிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள் நன்றி !

#உங்கள்_பாதுகாப்பு_உங்கள்_கையில்

       - நெய்தல் தமிழன்