Thursday, 29 December 2016

சி.சி.தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவி ஆட்சி செய்த காலம்( கி.பி.1562-1565)

ஏழுகடற்துறை வேந்தனாகிய சி.சி தொன் மிக்கேல் ஜொவாம் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியனுக்கு  (ஆட்சி செய்த காலம்
கி.பி 1553- 1562 ) ஒரே மகளாகிய சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவி . சி.சி தொன் மிக்கேல் ஜொவாம் தெக்ருஸ் பரதவர்ம பாண்டினுக்கு மகன் இல்லாதமையால் ஏழுகடற்துறைப் பாண்டிய அரசியாய் இக்கோமகள் 1562  ஆம் ஆண்டு அரியனை ஏறுகிறாள். நம் பரத குல அரசி.தன் மகனாகிய அர்சுனனுக்காய் பாரதப் போர்களத்தில் நின்று போர் செய்த சித்திரவாகனனின் மகளாகிய "அல்லிராணி" போன்றவளாய் மாவீரம் பொருந்தி ஆட்சி செய்கிறாள் பாண்டியதேவி.வீரம் மட்டும் கொண்டவளாக இல்லாமல் பார்ப்போர் எல்லாம் வியங்கும் வண்ணம் விண்ணில் வாய்ந்த மின்னலுக்கு உருவம் கொடுத்து இம்மண்ணில் பெண்ணாய் படைத்துவிட்டனரோ என்று அனைவரும் வியக்கும் வண்ணம் அழகெல்லாம் ஒன்றாய் அமைந்த குமரி குல மகளாய் ஒளிர்கிறாள்.

" உட்கட்டுத்தாலி உருக்குமணி ஆபரணம்
கைகட்டுப் பவளம் கரண்டைக்காய் சீதனங்கள் "

எனப் புகழேந்தி புலவர் புகழ்ந்திருக்கிறார்.
மஞ்சுதருப் பரவர் மகளிர் மீன் வணக்கமுடையவரானதுபற்றி மீன் வடிவமுள்ள ஆபரணங்களையும் அணிந்து வந்தனர்.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மஞ்சுதருப் பண்டைப்பரவர் மகளிர் அணிந்திருந்த உருக்குமணியின் ஓர் பாகமாகிய தங்கவளையங்கள் சிந்துவெளிப் புதை பொருளிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இத்தங்க வளையங்களைத் தமிழ்நாட்டு மகளீர் வடிகாதுகளில் அணிந்து கொள்ளும் வளையங்கள் என்கின்றனர் வித்வான் திரு.இராச மாணிக்கம் பிள்ளை , பி.ஓ.எல் ;எல்.டி.., எம்.ஓ.எல் அவர்கள்  ஆனால் அத்தங்க வளையங்கள் உருக்குமணியின் ஓர் பாகமாக இருக்கின்றன.உருக்குமணி என்பது ஓர் சுவர்ணக் காதணி, சுறாவின் வடிவம், சந்திரனின் சொருபமும் அதிற் பொருந்தியிருக்கும் எனகிறார் பரத குல பழமை நூலாசிரியர். ஆசிரியர் ஜே.பி இரட்லர் உருக்குமணியை மகர குண்டலம் என்பர்.மகர குண்டலம் என்பது ஓர் சுறாவின் சொருபத்தைக்கொண்ட காதணி என அவரது அகராதியில் தீட்டி வைத்தார்.
இவ்வாறு எழில்வாய்ந்த பைம்பொண்ணால் இழைத்த சுறாவின் வடிவங்கொண்ட இந்த உருக்குமணியின் தோற்றம் கலைபதினாறு கொண்ட சந்திரனை மின்னுகின்ற இருமீன்கள் தொழுதுகொண்டிருந்த பான்மையை நிகர்க்கு கூறியிருந்திருப்பாரோ புலவர் புகழேந்தி. இவ்வரசியின் அணிகலன்களில் இவள் சந்திரகுலத்திற்கான அணிகலன்கள் என எடுத்துரைக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டு காலத்தில் சந்திரகுல பரதர் பாண்டியரின் 62 ஆம் வாரிசான சத்துருனாத பாண்டியனின் தாசி வயிற்றிலிருந்து பிறந்த வீர பாண்டியன் பூர்விக பாண்டிய வம்சத்தாரை அழிக்க தொடங்க பூர்விக பாண்டிய வம்சத்தார் பரத குல பாண்டியர் தென்பாண்டி நாட்டின் கடலோரத்தில் குடிபெயர்கின்றனர் மதுரைவிட்டு தங்களு பூர்விக பாண்டிய குடிபெருமையை இழந்தாலும் தென்பாண்டி நாட்டில் தனியாட்சி நடத்த ஆரம்பிக்கின்றனர்.பின் தாசி வயிற்றிலிருந்து பிறந்த பாண்டிய அரசனான வீரப்பாண்டியனை பரதர் குலத்தவர் எதிரியாகவே பார்க்கின்றனர் அவன் தலைமுறையையும் அரசனாக மதிக்கவில்லை இதுவே  "தென் பரதர் போரேறே "  என்று பாண்டியன் நெடுஞ்செழியனை புலவர் புகழ்வது. பரதர் பாண்டியரை எதிர்ப்பதும் பாண்டியருக்கு
கோபம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் பரதரை போரிட்டு வெல்வதும் அதற்கு சினம் கொண்ட சிங்கங்களை போன்ற பரதர்களை எவருக்கும் அடங்காத பரதர்களை அடக்கிய மாவீரன் பாண்டியன் என்று நெடுஞ்செழியனை புகழ்கின்றனர் புலவர்.இதுவே வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகிறது... பூர்விக பாண்டிய வம்சத்தார் பரதர் பாண்டியருக்கு எதிரிகள் ஆனது இப்படித்தான்.அந்த வீரப்பாண்டியன்  முதல் 12 ஆம் நூற்றாண்டு முதல் பரதர் குலத்தவர் பாண்டிய ஆட்சிக்கு உட்படாது தனி ஆட்சிக்குட்படுகின்றனர்.

இந்த வரிசையில் சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவியின் 15 ஆம் நூற்றாண்டு ஆட்சிக்காலத்தில் மதுரை ஆண்ட விசுவநாத நாயக்கன் பரதர் மீது படையெடுக்கிறான்.இவன் படையெடுப்பதற்கு காரணம் பூர்விக பாண்டிய குலத்தாரான பரதர் வீரப்பாண்டியன் ஆட்சி முதலே தனியாட்சி மேற்கொண்டு பாண்டிய ஆட்சிக்கு உட்படாது இருக்கின்றனர் இது தொடரவே
விசுவநாத நாயக்கனையும் இவர்கள் மதிக்கவில்லை இதுவே போருக்கு காரணமாகிறது. இப்போரில்  ஏழுகடற்துறையின் பரத குல போர்படை சேனைகளும், பரத கப்பற்படைகளும் ,போர்ச்சுக்கல் நாட்டு சேனைகளும் போருக்கு ஆயுத்தமாகின்றன. காலம் காலமாக பரதரின் பங்காளிகளான மறவர் செம்பொண்ணுட்டு தேவர் எனும் ஆப்பனூர்
மறவர் சேனைகளும் ஆயுதங்களோடு பங்காளிகளுடன் (பரதர்) ஆர்பரித்து போருக்கு ஆயுத்தமாகின்றன.மீனவன் நெடுஞ்செழியன் படைவீரர்களான நாகை பரதவர் படைகளும் கப்பற்படைகளோடு இனைந்து கர்ஜிக்கின்றன.பாண்டியதேவியும் போருக்கு ஆயுத்தமாகிறாள் பரத குலம் காக்க ! இப்பெருஞ்சேனை படைகளுக்கு தலைவனாய் மாறகுல சேகரன் லூயிஸ் எஸ்தோவான்பீரிஸ் என்ற மாவீரன் போர் முன் நின்று தலைமை தாங்குகிறான். பாண்டியாபதி என்ற இராச அரண்மனை பாண்டியாபதி தீவுக்கு மாற்றப்படுகிறது.யுத்தம் ஆரம்பிக்கிறது பரத குல சேனைகளும் விசுவநாத நாயக்கனின் சேனைகளும் மோதுகின்றன. போர்களம் இரத்த களமாய் மாறுகிறது. மாறகுல சேகரன் வழியில் பரத சேனைகள் நாயக்க படைகளை இரத்த வெள்ளத்தில் ஓட செய்கின்றன. நாயக்கர் படைகள் தோல்வியை தழுவுகிறது. மீண்டும் விசுவநாத நாயக்கன் பரதர்களை எப்படியேனும் வென்றாக வேண்டும் என்ற தீர்மானத்தோடு
அப்போதைய விஜயநகர அரசிடம் உதவி கோர்கிறான். பின் விஜயநகர போர் படைகளோடு மீண்டும் பரதர்களோடு போர் புரிய வருகிறான் இங்கோ பரதர் சேனைகளும் பங்காளி மறவர் சேனைகளும்
போர்களத்தில் வெற்றி வாகை சூடி மீண்டும் வாகை சூட ஆர்பரிக்கின்றன.மீண்டும் விசயநாத நாயக்கன் விஜயநகர போர்படைகளுக்கும் பரத சேனைகளுக்கும் போர் மூள்கிறது. பரத கப்பல் படைகளுடன் மோதிய விஜய நகர போர் படைகள் போர் புரிய வலிமையற்றவர்களாகவே பின் வாங்குகின்றனர் மீண்டும் விசுவநாத நாயக்கன் தோல்வியை தழுவுகிறான். மிஞ்சிய சேனைகளோடு ( போரில் பரத படையோடு போரிட்டு மாண்டு)  மதுரைக்கு ஓடி உயிர் பிழக்கிறான். வெற்றி!  வெற்றி !!
என்று பரத சேனைகள்  சிங்கத்தின் உருவம் கொண்டு கர்ஜிக்கின்றன.
போரில் வென்ற பாண்டியதேவி போரில் தலைமை தாங்கிய தன் தாயின் உடன்பிறந்தவன் மகனை ( தாய் மாமா மகன்)  மாற குல சேகரன் லூயிஸ் எஸ்தோவான்பிரிஸ் என்ற மாவீரனை மணந்து அம்மாவிரனை அரசனாக்கிறாள்.

"யுத்தத்தில் திறமையுள்ளோர் வெற்றியும் திறமையில்லாதவர் தோல்வியுமுறுதல் இயற்கையே "

ஆனால் ஒரு பெண் ஆளுகையின் போது மதுரை நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கன் படையெடுப்பு அரசநீதிக்கு முறையன்று.ஆனாலும் எதிர்த்து போராடி போர்களத்தில் வென்றிகண்ட வீர மறத்தி பரத குல பாண்டியதேவியின் வீரம்  தமிழக வரலாற்றில் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆனால் ஏனோ அவை பொண் எழுத்துக்களால் அல்ல வரலாற்றிலே மறைக்கப்பட்டது.

அது மட்டுமின்றி பரதர் இனம் கூட மறந்தது.
இப்படி 15 ஆம் நூண்றாண்டிலே போர்களம் கண்டு வென்றி கொண்ட நம் பரத குலகுமாரி நம் முப்பாட்டி சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவியின் உருவம் கூட முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பது மிக வருத்தமலிக்கிறது.... காலம் வெனற நம் முப்பாட்டி வீர மறத்தி பரத குர பேரரசியின் வரலாறுகளை மீண்டும் எழுதுவோம் பொண் எழுத்துகளால் மட்டும் அல்ல நம் இரத்த எழுத்துகளால் இனம் காக்க போரிடிய நம்
ஆத்தாளின் வீரத்துக்கு மரியாதை செய்வோம் நம் ஆத்தாளின் படத்தை சீராய் உருவாக்கி நம் அரசியின் விரத்தை ஓர் நாளில் நினைவு கூறி வீர வணக்கம் செலுத்துவோம்....

வரலாற்றை இழந்த இனத்தால்
வரலாற்றில் வாழ முடியாது !
மீட்டெடுப்போம் நம் வரலாறை !!
சங்கே முழங்கு எம் பரத குல பெருமைகளை கொண்டு !!!
                      - இருதய ஆஸ்ட்ரோ பரதர்.த
                                           கூத்தன்குழி