Sunday, 16 October 2016

சாதனை பரத்தி

கனடாவில் சாதித்த #வீரபாண்டிய_பட்டின #பரத்தி மென்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள்.

மாவீரம் கொண்ட பரதர் குலத்தவர்

#பரதர்குல_சத்திரியர்

பார்ப்பனியத்தால் மதுரையை ஆண்ட பாண்டியர்கள்
மட்டும் அல்ல,கடற்க்கரை #பரதவர்களும்
உள்வாங்கப்பட்டனர்.பழைய திருவான்கூர்
சென்சஸ் ஆவணங்களில் # பரதவர்கள்
சத்திரியர்கள்,பிராமணர் வீடுகளில் தான்
உணவருந்துவார்கள் என்று உள்ளது.நாயக்கர்
வருகைக்கு முன்னர் ஆண்ட பாண்டியர்கள்,
#பரதவர்களே .மதுரையில் பாண்டியன்
மறைந்ததும்,கொற்கை பாண்டியர் அங்கு
சென்று பதவி ஏற்றதாக பதிவு உள்ளது.மதுரை
காஞ்சியில், #பரதவர் , #மறவர் ஆகிய இரு குடிகளையும்
பற்றியே அதிகம் பாடப்படுகிறது.அதில்,போரில்
வெற்றி கொண்டு திரும்பும்
நெடுசெழியனை "பரதவ மகளிர் குரவையோலித்து"
வரவேற்கின்றனர்." #தென்பரதவர் போரேறே " என்று
அழைக்கபடுகிறான்.சோழன் இளஞ்சேட்சென்னியின்
மெய்கீர்த்தியில் "தென் #பரதவர் மிடல்
சாய,வடவடுகர் வாளோட்டிய" என்ற வரிகளையும்
ஆழ்ந்து பார்க்கவேண்டும்.சோழனும் பாண்டியனும்
பரம எதிரிகள்,பாண்டியன் தான் சோழனுக்கு
தெற்க்கே ஆண்டவன்,வடக்கில் வடுகரும்
தெற்கில் #பரதவரும் என்று கூறுவதன்
மூலம்,தெற்க்கே பாண்டியரை வென்றமையையே
தென் #பரதவர் மிடல் சாய என்று
கூறுகின்றார்.சேரன் செங்குட்டுவனும் "பணித்துறை
பரதவன்" என்று அழைக்கப்படுகிறான்.சிலப்பதிகாரம
்,"அரசகுமரரும்,பரதகுமரரும்","அரசர் முறையோ, #பரதர்முறையோ
",பரதவ குமரன் என்று கோவலன் அழைக்கப்படுகிறான்.
கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியது மருத நிலத்தில்
என்றும்,பள்ளர்களே பாண்டியர்கள் என்று சிலர்
கூறுகிறார்கள்..கழார் பெருந்துறையை,#பரதவர்
கோன் மத்தி என்பவன் ஆள்கிறான் (புகாருக்கு
அருகில் அமைந்த பகுதி ),அவன் எழினி என்ற குறுநில
மன்னனை வென்று அவனது பற்களை தனது
வெண்மணி கோட்டை சுவற்றில் பதிக்கிறான்..ஆக
நெய்தல் நிலத்தில் கோட்டையமைத்து #பரதவர் ஆட்சி
செய்தது உறுதியாகிறது.பாண்டியகளின் முதல்
இரண்டு சங்ககால தலைநகரங்களும் நெய்தல்
நகரங்களே தென்மதுரை ,கபாடபுரம் (கபாடம்-
முத்து)...இரு நகரங்களையும் கடற்கோளால் இழந்த
பாண்டியன் மூன்றாம் தலை நகரை அன்றைய கூடல்
நகர்,இன்றைய மதுரையில் நிறுவினான்..தனது முத்துகுழி
தொழிலையும் காக்க கொற்கையில்
தங்கினான்.நிர்வாக தலைநகரம்,வர்த்தக தலைநகரம்
என்ற யுக்தியை கையாண்டான்.#பரதவர் வரலாறு
மிக தொன்மையானது,மிக
நெடியது..இன்று அரசாண்ட பரமபரை என்று
சொல்லிகொள்ளும் எவராலும்
இத்தகைய தொன்மையான
ஆதாரங்களையோ,வரலாற்று ஆதரங்கலையோ
கொடுக்க முடியாது..நமக்கு இணையாக
வரலாற்றில் அதிகம் பேசப்படும் இனம் மறவர்
என்னும் இனம்,அவர்கள் கூட நமது போர்
தளபதிகளும்,போர் வீரர்களும்,சிற்றரசர்களும்
தான்.இன்னும் சொல்லப்போனால்,ம
றவர்களும்,உள்நாட்டு # பரதவர்களின் (பாண்டிய
அரசவம்சம் நீங்கலாக) மணஉறவு கூட
கொண்டிருந்தனர்.பந்தளம்,பரவூர்
மகாராஜாக்கள் கூட பாண்டியகளிடம் தான்
மணஉறவு கொண்டிருந்தனர்.அவர்களும் மீன்
சின்னத்தை தங்கள் அரச முத்திரைகளில் பயன்படுத்தி
உள்ளார்கள்.மண்டைக்காடு கலவரம் நடந்ததே,அந்த
பகவதி அம்மன் கோயில் மீனவர் கோயில்,மீனபரணி நாள்
தான் அங்கே விசேஷம்.ஐயப்ப பக்தர்கள்
#பரவர்களுடன் மோதினார்களே.அந்த
ஐயப்பன்,பந்தளம் மகாராஜாவின் மகன்..சுற்றி
சுற்றி,ஒரே முடிச்சை தான் அவிழ்க்க சொல்கிறது
இந்த நிகழ்வுகள்.மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ
வீதி, # பரதர்களுக்கானது,கன்னியாகுமரி பகவதியின்
கிழக்கு வாசல் #பரதவர் வாசல்..இவை இன்று
நமக்காக காத்திருந்து அடைக்கப்பட்டுள்
ளது.திருசெந்தூர் முருகனுக்கு தேர்வட உரிமை
நம்முடையது..இன்று அது சிவந்தி ஆதித்தனாரின்
முன்னோர் கட்டியதாக நம்மிடமே கதையளக்க
படுகிறது.பழனி முருகனின் பத்தாம் நாள்
மண்டகப்படி # பரதவருடயது ..இதெல்லாம்
நான் சொல்லவில்லை இந்து மக்கள் கட்சி
தலைவரே ஒப்புக்கொள்கிறார்.கன்னியாகுமரி
பகவதி நம் #பரதவர் தெய்வம்,அந்த கோயில்
#வில்லவராயர்களுக்கு
சொந்தமானதென்று திருவாங்கூர்
செசன்ஸ் சொல்கிறது.கன்னியாகுமரி
#வில்லவராயனை "தம்பி" என்று மார்த்தாண்ட
வர்மா அழைக்கிறார்." # பரத வர்மா" என்ற
பெயர்களும் நம்மவர்கள் பயன்படுத்தி
உள்ளார்கள்."வர்மா" என்ற பெயர்
பார்பனிய வழக்கப்படி சத்திரியர்களுக்கு
சொந்தமான பெயர்.மார்தண்ட
வர்மாவின் ஆட்சிகுட்பட்ட பகுதியில், #பரதவர்மா
என்ற பெயர் கொண்டு சத்திரியன்
அல்லாதோர் வாழ்திருக்கவே முடியாது.குமரி மண்ணில்
ஏகப்பட்ட வரலாறு புதைந்திருக்கின்றது..நம் வரலாற்றை
யார் யாரிடமோ விட்டுகொடுத்து விட்டு
தாழ்ந்தோர் என்று நம்மை நாமே
நினைத்துகொண்டிருகிறோம்."குல தாழ்ச்சி,உயர்ச்
சி சொல்லல் பாவம்" ஆனால்,நம் சுயத்தை
இழந்து நம்மை நாமே தாழ்த்திக் கொள்வது
மூடத்தனம்.

மாபரத்தி டான்_மரிய_மார்கரிட்_டிக்ரூஸ்_பரதவர்ம_பாண்டியமாதேவி

#மாப்பரத்தி,#போர்_மறத்தி,பெரும்படை கொண்ட
பெண்ணாத்தாள்.
#டான்_மரிய_மார்கரிட்_டிக்ரூஸ்_பரதவர்ம_பாண்டியமாதேவி (1562-1565)
வடநாட்டு ஜான்சி
ராணிக்கும்,தென்னாட்டு வீரமங்கை
வேலுநாச்சியாருக்கும்
முன்னரே,கன்னிப்பெண்ணாய் படை
நடத்தியவர் இந்த பாண்டியமாதேவி..
கொற்கை #பரதவர்_படை,ஆப்பநாடு
கொண்டயம்கொட்டை #மறவர்_படை,நாகப்பட்டினம் #பரதவர்_படை
என்று மூன்று படைகளை
வழிநடத்தி மாப்பரத்தி,போர்
மறத்தி,பெரும்படை கொண்ட
பெண்ணாத்தாள் என்று பெயர்
பெற்ற நாயகி இவர்..
1562 ஆம் ஆண்டு பாண்டியபதி
மறைவிற்கு பின்,ஆண்
வாரிசில்லாத
கொற்கையையும்,ஏழ
ு கடற்துறையையும் விசுவநாத
நாயக்கன்,கைப்பற்ற படையெடுத்த
போது ஆட்சியை ஏற்று,
பெண்ணென்று துச்சமென
எண்ணிய நாயக்கனை
மதுரைவரையில் துரத்தி
தாக்கவல்ல ஒரு மாபெரும் படையை
உருவாக்கி வென்றவர்.
வரலாற்றில் விடுபட்டு
போனவர்,இந்திய சுதந்திர
வரலாற்றுக்கு முந்தைய வீர
வரலாற்றின் வீரப்பெண்மணி..இது
ஒரு பெண்ணின் வரலாறல்ல,தமிழ்
மன்னர் குல மகளிரின் வீர
வரலாற்றுக்கு சான்று.இவர்
மட்டுமல்ல,இன்னும் பற்பல
வரலாறுகள் இம்மண்ணில்
மறைந்துள்ளது,வெ
ளிக்கொணர்வோம்..

மாமன்னர் வணங்காமுடி பரவன்

#வணங்காமுடிப்_பரவன்_கிமு_320:

    மாவீரம் கொண்டவணங்காமுடிப் பரவன் என்ற இத்தமிழ் வேந்தன்  கிறிஸ்து பிறப்பதற்கு 320 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றரசர்கள் அஞ்சும் வகையில் சிந்துக்கரையில் வாழ்ந்து வந்தான். இவன் முப்பதாயிரம் தரைப்படையும், நாலாயிரம் குதிரைப்படை, ஐந்நூறு தேர்ப்படையும், யானைப்படையுடன் பலமுள்ள தமிழ் பேரரசனாய் விளங்கினான்.

           மாசிடோனியாவை ஆண்ட கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் பதினேழாயிரம் சேனைகளுடன் கீழ்த்திசை நோக்கி புறப்பட்டான். அவன் கைபர் கணவாயின் வழியாக நாவலந் தீவினுள் நுழைந்து சிந்துக்கரை வந்தடைந்தான். அப்பொழுது, காந்தார அரசனாகிய குறுநில மன்னன் 'ஆம்பி' என்பவனுக்கும் பெருநில மன்னனான "வணங்காமுடிப்  பரவனுக்கும்" பகைமூன்டு இருந்தது.

          ஆம்பி மன்னன் பரவ மன்னனை அழிக்க இதுவே காலமென எண்ணி, கிரேக்க மன்னனுக்கு துணையாகி பரவ மன்னனை வீழ்த்தும் வழிகளையெல்லாம் கூறினான். கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் தமிழ் மன்னன் பரவனுக்கும் கடும்போர் நடந்தது.

      தமிழர் படை வேங்கையாய் புறப்பட்டு கிரேக்கப் படையுடன் சண்டையிட்டது. தேர்ப்படையின் அம்பால் அலெக்சாண்டரின் மாபெரும் போர்க்குதிரை மண்ணில் வீழ்ந்து இறந்தது. குதிரை இறந்த துயரத்தால்  மனமுடைந்த மன்னர் அலெக்சாண்டர் , தமிழ் மன்னர் தனக்கு தலை வணங்கினால்  போரை நிறுத்தி விடுவதாக அறிவித்தான்.
  
       "எம்முடி எவரையும் வணங்காத முடி
         தலைவணங்கு வோமாகில் யாம் பாலுண்டு
         வளர்தற்கு காரணமாயிருந்த குருதி
         கொப்பளிக்கும் வாளையுடைய எம்
          வீரத்தாயின் இரு முலைகளுக்கும்
           பகைவன் ஆவேம்: வெற்றியின்றேல்
           போர்க் களத்தில்  உயிர் விடலே மேன்மை"

          என சிங்கம் போல கர்ச்சித்து, போர் முரசு கொட்டி, பகைவரின் குருதி வழிந்தோடும் அப்போர்களத்தில் நாற்படைகள் கொண்டு பரவர்  மன்னன் போர் செய்தான்.
    
          சிற்றரசன் ஆம்பி வகுத்த சூழ்ச்சியால், வீரக்கழல் அணிந்த தமிழ் வேந்தனாகிய பரவர் மன்னர் சிறைப்பட்டான். தான் பிடிபட்டபோதும், தன்னை அரசனைப்போல நடத்த வேண்டும் என அஞ்சாது வீரமுழக்கமிட்டான். இதைக்கேட்ட போர்க்கள மாண்புகளை மதிக்கும் மகா அலெக்சாண்டர் ,பரவ மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து அவனுக்கு  சில பகுதிகளை அரசாளும் உரிமையை வழங்கிச் சென்றான். இந்நிலா பரவன் என்ற மாமன்னனை புரூரவன்,புரூரவஸ், பரவாஸ்,போரஸ்,புருசோத்தமன் எனப் பல்வேறு மொழிகளின் உச்சரிப்பு வேறுபாட்டால் திரிந்த பெயர்களாக  அழைப்பர் வரலாற்று ஆசிரியர்.

பரதர் தொன்மை _ 3

சிறப்பிக்கப்படுகிறான்.புதிய நிலப்பகுதிகளைத் தன்னுடன் இணைத்த என்ற பொருளைக் குறிக்கும். கடற்கோளால் தென்பகுதியை இழந்து அதற்கீடாக வட பகுதியை வென்று தனது அரசைப் பெருக்கினான் என்பதாகும். இவன் சாவா, சுமத்ரா,போர்னியோ போன்ற நாடுகளை வென்றுள்ளான். இவையனைத்திலும் பாண்டியர் ஆட்சி நடைபெற்றது என்பதற்குச் சான்றாக போர்னியோத் தீவில் ஆறு ஒன்றுக்கு, "கடுங்கோன்" எனப் பெயரிட்டிருப்பதையும் ம.இராசசேகர் தன்னுடைய 'பாண்டியர் வரலாறு' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கடல் கடந்த இந்த ஆதி படைகள் வன்மை வாய்ந்த நெய்தல் நிலத்தில் நடத்தப் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் நாம் உணரலாம். இவனுடைய காலத்தில் கடல் பொங்கி வந்ததாகக் கூறப்படுவது முதற் கடற்கோளாக இருக்கக் கூடும். இவன் 'கடல் சுவற வேலெறிந்தான்' என்பது கடல் கடந்து பல நாடுகளை வென்றான் என்பதாகவும், கடல் வடிவம்பலம்ப நின்றது என்பது இவன் கடலில் கப்பலைச் செலுத்திய திறனைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். கடற்கோளால் உலகம் அழியப் பாண்டிய வேந்தன் ஒருவன் மட்டும் தப்பி உயிர் வாழ்ந்திருந்த செய்தி வேள்விக்குடிச் செப்பேட்டில் குறிக்கப்படுகிறது.
இதே போன்று "கடலுள் மாய்ந்த இளம் வழுதி" என்ற தொடர் கடல் போரில் உயிரிழந்த அல்லது கடலில் மீன் வேட்டைக்குச் சென்ற பாண்டிய இளவலைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
மன்னர்கள் காடுகளில் வேட்டைக்குச் செல்வதைப் போலப் பாண்டிய மன்னர்கள் கடலில் வேட்டைக்குச் சென்றனரோ என்று எண்ண இடமளிக்கின்றது. இதே போன்ற ஒரு நிகழ்ச்சி 'வலை வீசும் புராணத்திலும்'கூறப்படுவது சிந்திக்கத் தக்கது.
குறுநில மன்னர்கள் ஆட்சியும் இனக்குழுக்களின் அரசும்:
பெரும் மன்னர்களும், அரசுகளும் திடீரென்று தோன்றி இருக்க முடியாது. இவர்களின் தோற்றத்திற்குத் தெய்வீகக் கதைகள் புனையப் பட்டிருந்தாலும் ஆதியில் இவர்கள் வலிமை வாய்ந்த இனக்குழுவின் தலைவர்களாகவோ அல்லது வலிமையும் பொருளாதார பலமும் பெற்றவர்களாகவோ இருந்திருக்க வேண்டும். இவர்களே மெல்ல மெல்ல தம்முடைய ஆற்றல், அறிவு பல நாட்டு மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு போன்றவற்றால் பல்துறைப்பட்ட அனுபவ அறிவைப் பெருக்கிக் கொண்டு அதனடிப்படையில் அரசுகளையும் ஆட்சி முறையையும் தோற்றுவித்திருக்க இயலும்.
எளிமையான அமைப்புக்களிலிருந்து சிக்கலான அமைப்புகள் தோன்றுவது அறிவியல் பூர்வமானது. இந்த வளர்ச்சிப்படி அமைப்பினை இலங்கைக் கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. (புஷ்பரத்தினம், 1999: 153)
இந்தப் பண்புகள் அனைத்தும் அமையப் பெற்ற இவர்களைப் பற்றி மதுரையை அடுத்த அரிட்டாப்பட்டி கிராமத்தில் உள்ள சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் செய்தி இவ்வாறு கூறுகிறது.
"இலஞ்சி வேள் மாப்பரவன் மகன்
எமயவன் நல்முடிவுகை கொடுப்பித்தவன்"
(தம்பி ஐயா பர்னாந்து, The Hindu, 15--9--20
இதற்கு இலஞ்சியின் அரசன் மாப்பரச எமயவான் இந்தக் குகை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தான் என்பது பொருள். இதில் மாப்பரசன் என்றால் அறிவுடைய பரவன், பெரிய பரவன், பெருமையுடைய பரவன் என்று பொருள்படும். இதனை பரதவ குமார என்ற சிலப்பதிகார சொல்லாட்சியோடு ஒப்பு நோக்கத்தக்கது.
"தென் பரதவர் போர் ஏறே", "பரதவர் தலைவன்" எனப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றிய சங்க இலக்கியங்களின் சொல்லாட்சி ஒப்பு நோக்கத்தக்கது. அதாவது வரலாற்றின் தொடக்கத்தில் வலிமை, அறி செல்வம் நிரம்பப் பெற்ற நெய்தல் நில மக்களுள் ஒருவன் தலைவனாக எற்றுக் கொள்ளப்பட்டு ஆட்சி அமைக்கத் தலைப்பட்டிருக்கலாம் என்பதும், தங்கள் அடையாளமாக மீன், படகு, கப்பல் போன்றவற்றைப் பயன்படுத்தியதும் இலங்கையில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுச் செய்திகளால் உறுதி செய்யப்படுகின்றது.
இலங்கையில் இது வரை கிடைத்த கல்வெட்டுக்களில் வரும் குலம், சமூகம், தொழில் பிரிவுகள் பற்றிய செய்திகளையும், இதற்குச் சம காலத் தமிழ்நாட்டு இலக்கியங்களில் வரும் செய்திகளின் ஒற்றுமையையும் சுட்டிக்காட்டுபவையாக இவை அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தில் வரும் பரதவ சமூகத்திற்கும் இலங்கை பிராமிக் கல்வெட்டுகக்ளில் வரும், 'பரத' என்ற பெயருக்கும் இடையிலான பெயர் சமூக அந்தஸ்து, தொழில் வாழ்விடங்களில் காணப்படும் ஒற்றுமை இவ்வாய்வுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகும். இலங்கையில் கிடைத்த கி.மு. 1--ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுக்கள் பெளத்த சங்கத்திற்கு சமூகத்தின் உயர்நிலைகளில் இருந்த பலதரப்பட்ட பிரிவினர் அளித்த குளம், கால்வாய், குகை, கற்படுக்கை,நாணயங்கள், உணவு, தானியம் என்பன பற்றிக் கூறுகின்றன.
இவற்றைப் பிற மதத்தவரும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு வர்த்தகம், பொருளாதார நடவடிக்கைகளுக்காகச் சென்றவர்களும் அவதானித்துள்ளனர். இவ்வாறு தானமளித்தோரில் பலர் தமது பெயருடன் தமது மூதாதையினர் பட்டம், பதவி, தொழில், வாழுமிடம் போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். இவை சுருக்கமான தகவல்களாக இருப்பினும் அக்காலத்தில் எவ்வாறு சமூக, தலைமை அமைப்பானது உருவாக்கப்பட்டது என்பதை விளக்கிக் கொள்ள உதவுகின்றன.
இதுவரைக்கும் இலங்கை நாட்டின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த கல்வெட்டுக்களில் 155-க்கும் மேற்பட்டவற்றில் 'பத' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 'பரத' என்ற சொல்லின் இன்னொரு வடிவமாகக் கருதப்படுகிறது. இதன் பெண்பாற் சொல்லாக 'பதி' என்ற பெயர் காணப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கல்வெட்டுக்களில் ராஜா, பருமக போன்று ஒரு பட்டப் பெயருக்குரிய நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (புஷ்பரத்தினம்--தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு)
தோலமி சோழ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை 'பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம். (டி.கே.வேலுப்பிள்ளை, 1980, புஷ்பரத்தினம், பக்கம்:62)
திராவிட சொல்லகராதியில் 'பரத' என்ற சொல்லுக்குச் சமமாகப் பரதவர், பரதர், பரவர் என்ற சொல் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மலோனி என்ற அறிஞர் தென் தமிழ் நாட்டிலும் வடமேற்கு இலங்கையிலும் தற்காலத்தில் வாழ்ந்து வரும் பரதவ சமூகத்தின் தோற்றத்தைச் சங்க இலக்கியங்களில் வரும் பரவர், பரதவர் சமூகத்துடன் தொடர்பு படுத்தி இரு பெயர்களும் ஒன்றென்கிறார். (புஷ்பரத்தினம், 1999:61).  இலங்கைத் தமிழகப் பண்பாட்டுத் தொடர்பின் பின்னணியில் நோக்கும்போது இது பொருத்தமுடையதாகத் தெரிகிறது.
மேலும் பாண்டி நாட்டுச் செல்வமாக இருந்த நெய்தல் நிலத்து முத்து பற்றிச் சங்க இலக்கியங்களிலும் வடமொழி இலக்கியங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. பாண்டியர்களின் செல்வச் செழிப்பிற்குக் காரணமாகக் கடல்படு திரவியங்களே கூறப்படுவதும் இங்கு சிந்திக்கத் தக்கது. முத்து, பாண்டியரின் சொத்தாகவும், மீன் பாண்டியரின் பிரதான உணவாகவும் விளங்கியது. சங்க இலக்கியத்தில் மீன் என்ற சொல் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகத்தில் குதிரை வெளிநாட்டு வர்த்தகப் பொருளாகவும், உப்பு உள்நாட்டு வர்த்தகப் பொருளாகவும் திகழ்ந்தன. பட்டினப்பாலையும் மதுரைக் காஞ்சியும் மேலைநாட்டுக் குதிரைகள் தென்பாண்டித் துறைமுகங்களுக்குக் கொண்டுவரப் பட்டதைக் கூறுகின்றன. பாண்டி நாடு நெடுகிலும் கடற்கரையை ஒட்டிய நெய்தல் நிலத்தில் குதிரை வர்த்தகம் நடந்ததாகத் தெரிகிறது. பாலி நூல்கள் தமிழ்நாட்டு பரதவ வணிகர்கள் குதிரை வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறுகின்றன. இவ்வாறு பலதரப்பட்டப் பொருளாதார நடவடிக்கையில் நெய்தல் நில மக்கள் ஈடுபட்டதனால் செல்வம் குவிந்தது. இவர்களின் மாளிகைகள் கப்பல்கள், அலங்கார வண்டிகள், வாகனங்கள் பற்றி வரும் குறிப்புகள் இவர்களின் செல்வ நிலையைக் காட்டுகின்றன. பாண்டிய நெடுஞ்செழியனைக் 'கொற்றவன் காவலன்,' "பரதவத் தலைவன்",எனக் கூறுவது அரசியலிலும், சமூகத்திலும் பாண்டிய மன்னர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்கும் இடையேயான மிக நெருங்கிய தொடர்பைக் காட்டுகிறது.
பாண்டிய நாட்டிலுள்ள தாமிரபரணியாற்றங்கரை பரதவர் வாழும் இடமாக அடையாளம் காணப்படுகிறது. இதே பெயர் முழு இலங்கையையும் குறிக்கும் பெயராக மாறியது. இச்சமூகத்தினரின் வர்த்தக அரசியல் பண்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது.
"பரதர்" பற்றி வரும் கல்வெட்டுக்களில், பொல நறுவை மாவட்டத்தில் உள்ள தூவகெல என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில், 'பரதஸஹகிதஸ" என்பவன் கொடுத்த குகை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.
இதில் 'பரத' என்ற பெயருக்கு முன்னால் கப்பலின் உருவம் வரையப்பட்டுள்ளது. இது 'பரத' என்பவனைக் கப்பல் தலைவனாகவோ அல்லது வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டவனாகவோ கருத இடமளிக்கிறது.
குரு நாகல் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் தலைவன் என்ற பட்டயத்துக்கு உரிய 'பரத' என்பவன் அரச தூதுவனாகக் கடமையாற்றியமை கூறப்பட்டுள்ளது.
கி.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உதிரன், தசபிடன், மகாசாத்தன், கபதி கடலன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்களோடு 'பரத திஸ" என்ற பெயர் பொறித்த நாணயமும் கிடைத்துள்ளன. இதன் சிறப்பு என்னவெனில் பின்புறத்தில் "பரத திஸ" என்றும் முன்புறத்தில் இரு மீன் கோட்டுருவமும் இடம் பெற்றிருப்பதாகும். இதைப் பாண்டியர்களின் தொடக்கமாகக் கருத இடமுண்டு. இதில் பரத என்ற பெயர் "பரதவ" சமூகத்தையும் 'திஸ' என்ற சொல்லானது 'திரையர்' என்ற பொருளையும் தரும். திரை என்ற சொல்லுக்குக் கடல், கடலலை, குளம் என்ற பல பொருள்கள் உள்ளன.
கி.மு. 2 ஆம் நூற்றாண்டிற்குரிய நாணயம் ஒன்று மீன் அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. அதன் மத்தியில்'திஸஹ' என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை 'திஸ' அல்லது 'திரையன்' என்பானின் வணிக முத்திரை எனலாம். முதலில் பெரும் பரதவ வணிகர்கள் தஙக்ள் வியாபார அடையாளமாகப் பயன்படுத்திய சின்னம் பின்பு படிப்படியாகப் பாண்டியர்களின் கொடியாகவும், அரசச் சின்னமாகவும் உருமாறியிருக்கக் கூடும்.
கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையில், ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்களான 'சேன, குத்தக' என்போரின் பெற்றோர் வெளி நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்து இலங்கையில் விற்பனை செய்த குதிரை வணிகனின் பிள்ளைகள் என மகாவம்சம் கூறுகிறது. குதிரை வியாபாரத்தில் தென்பாண்டி நாட்டு பரதவ வணிகர்கள் ஈடுபட்டனர் எனப் பாலி நூல்கள் கூறுவதன் அடிப்படையில் இலங்கையிலும் தமிழகத்திலும் ஏற்பட்ட குறுநில மன்னர்களின் ஆட்சியையும் தொடர்பு படுத்திப் பார்க்கலாம். மெல்ல மெல்ல வலிமை வாய்ந்த நெய்தல் நிலத் தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், முடியுடைய வேந்தர்களாகவும் உருமாற்றம் அடைந்துள்ளதைப் பார்க்கும்போது நெய்தல் நில மக்களுக்கும், பாண்டியர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தெளிவாக விளங்குகிறது. அதாவது இருவரும் ஒருவரே அல்லது ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களே என்ற முடிவுக்கு நம்மை இட்டுச் செல்கின்றது.
குமரி முனையில் அரசனாகவிருந்த வில்லவராயன் என்பான் பகவதி அம்மன் ஆலயத்திற்குத் திருப்பணி செய்ததாக ஆலயத்தின் ஒரு கல்வெட்டுச் சான்று பகருகிறது. இதைத் திருவிதாங்கூர் மக்கள் தொகை ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. பாண்டிய மன்னர்கள் 'குமரிச் சேர்ப்பன்' என்று குறிக்கப்படுவது இங்கு நமக்கு புதிய வரலாற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறது. மேலும் இலங்கையை ஆண்ட பராக்கிரம பாகுவுக்கும் 91153--1186) குலசேகர பாண்டியனுக்கும் நடந்த போரில் வில்லவராயன் கொல்லப்பட்டான் என்று அத்தியாயம் 76 பாடல் வரி 163 சூள வம்சம் என்ற பாலி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது. இருவரும் ஒருவரா அல்லது ஒரே குலத்தில் உதித்தவர்களா என்பது ஆய்வுக்குரியது.
இதே போன்று ஐவர் ராஜாக்கள் கதையில் குலசேகர பாண்டியனுக்காகக் கன்னடியனுடன் வில்லவராயனும்,வில்லவராயக் கூட்டங்களும் போரிட்டு மாண்டதையும், மற்றொரு மந்திரி காலிங்கராயன் பெண்களையும்,குழந்தைகளையும் பாதுகாப்பாகக் கடற்துறைக்கு அழைத்துச் சென்று பாதுகாத்ததையும் மிக விரிவாகச் சொல்கிறது.
செண்பகராமன் பள்ளுவின் தலைவன், காலிங்கராயன் என அழைக்கப்படுவதும் நமக்கு நெய்தல் நில பரதவர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இருந்த உறவினைக் காட்டுகிறது. இவையனைத்தும் பரதவ குலத்தினரிடம் வழங்கப்பட்ட பட்டங்களாகும். இவர்களில் சிறந்தோரே குறுநில மன்னர்களாகவும்,தளபதிகளாகவும் விளங்கினர் என்பது மேற்கூறியவற்றால் புலனாகும்.
"ஒன்று மொழி" பரதவர் என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளுக்கேற்ப இவர்களுக்குள் நிலவிய அசாதாரணமான ஒற்றுமை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாண்டியர்களின் வலிமையான ஆட்சிக்கு அடிகோலியது. இவர்களே முதன்மையான பாண்டியர்களின் தளபதிகளாகவும், மந்திரிகளாகவும் கடற்துறைகளிலும் போர் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் இருந்து ஆட்சி செய்தனர். இடைக்காலங்களில் முதன்மைப் பாண்டிய மன்னனுக்காக போரில் உயிர் துறந்ததையும் வரலாற்றின் மூலமாகவும், நாட்டார் இலக்கியங்கள் வாயிலாகவும் அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் இறந்த பிறகு கோநகர் கொற்கையிலிருந்த வெற்றி வேல் செழியன் மன்னரானது, காலம் காலமாக நடந்து வந்த பரம்பரைப் பழக்கம் என்பதற்கு வலிமையான சான்றாகும்.
மேற்கூறிய செய்திகளிலிருந்து பாண்டியர்களுக்கும் நெய்தல் நில மக்களுக்குமான தொடர்பு அவர்கள் இருவரும் வெவ்வேறானவர்களாக இருக்க முடியாது என்பதையும் அவர்களுக்கு இடையிலான மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதையும் இருவரும் ஒருவரே என்பதையும் பாண்டியர்கள் நெய்தல் நிலத் தலை மக்கள் தாம் என்ற புதிய முடிவுக்கு நம்மை இட்டுச் செல்வதையும் உணரலாம்.’’
- ச.சகாயராஜ்,  ஆசிரியர், கார்மல் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்