#வணங்காமுடிப்_பரவன்_கிமு_320:
மாவீரம் கொண்டவணங்காமுடிப் பரவன் என்ற இத்தமிழ் வேந்தன் கிறிஸ்து பிறப்பதற்கு 320 ஆண்டுகளுக்கு முன்னர் மாற்றரசர்கள் அஞ்சும் வகையில் சிந்துக்கரையில் வாழ்ந்து வந்தான். இவன் முப்பதாயிரம் தரைப்படையும், நாலாயிரம் குதிரைப்படை, ஐந்நூறு தேர்ப்படையும், யானைப்படையுடன் பலமுள்ள தமிழ் பேரரசனாய் விளங்கினான்.
மாசிடோனியாவை ஆண்ட கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் பதினேழாயிரம் சேனைகளுடன் கீழ்த்திசை நோக்கி புறப்பட்டான். அவன் கைபர் கணவாயின் வழியாக நாவலந் தீவினுள் நுழைந்து சிந்துக்கரை வந்தடைந்தான். அப்பொழுது, காந்தார அரசனாகிய குறுநில மன்னன் 'ஆம்பி' என்பவனுக்கும் பெருநில மன்னனான "வணங்காமுடிப் பரவனுக்கும்" பகைமூன்டு இருந்தது.
ஆம்பி மன்னன் பரவ மன்னனை அழிக்க இதுவே காலமென எண்ணி, கிரேக்க மன்னனுக்கு துணையாகி பரவ மன்னனை வீழ்த்தும் வழிகளையெல்லாம் கூறினான். கிரேக்க மன்னன் அலெக்சாண்டருக்கும் தமிழ் மன்னன் பரவனுக்கும் கடும்போர் நடந்தது.
தமிழர் படை வேங்கையாய் புறப்பட்டு கிரேக்கப் படையுடன் சண்டையிட்டது. தேர்ப்படையின் அம்பால் அலெக்சாண்டரின் மாபெரும் போர்க்குதிரை மண்ணில் வீழ்ந்து இறந்தது. குதிரை இறந்த துயரத்தால் மனமுடைந்த மன்னர் அலெக்சாண்டர் , தமிழ் மன்னர் தனக்கு தலை வணங்கினால் போரை நிறுத்தி விடுவதாக அறிவித்தான்.
"எம்முடி எவரையும் வணங்காத முடி
தலைவணங்கு வோமாகில் யாம் பாலுண்டு
வளர்தற்கு காரணமாயிருந்த குருதி
கொப்பளிக்கும் வாளையுடைய எம்
வீரத்தாயின் இரு முலைகளுக்கும்
பகைவன் ஆவேம்: வெற்றியின்றேல்
போர்க் களத்தில் உயிர் விடலே மேன்மை"
என சிங்கம் போல கர்ச்சித்து, போர் முரசு கொட்டி, பகைவரின் குருதி வழிந்தோடும் அப்போர்களத்தில் நாற்படைகள் கொண்டு பரவர் மன்னன் போர் செய்தான்.
சிற்றரசன் ஆம்பி வகுத்த சூழ்ச்சியால், வீரக்கழல் அணிந்த தமிழ் வேந்தனாகிய பரவர் மன்னர் சிறைப்பட்டான். தான் பிடிபட்டபோதும், தன்னை அரசனைப்போல நடத்த வேண்டும் என அஞ்சாது வீரமுழக்கமிட்டான். இதைக்கேட்ட போர்க்கள மாண்புகளை மதிக்கும் மகா அலெக்சாண்டர் ,பரவ மன்னனின் வீரத்தைப் புகழ்ந்து அவனுக்கு சில பகுதிகளை அரசாளும் உரிமையை வழங்கிச் சென்றான். இந்நிலா பரவன் என்ற மாமன்னனை புரூரவன்,புரூரவஸ், பரவாஸ்,போரஸ்,புருசோத்தமன் எனப் பல்வேறு மொழிகளின் உச்சரிப்பு வேறுபாட்டால் திரிந்த பெயர்களாக அழைப்பர் வரலாற்று ஆசிரியர்.
No comments:
Post a Comment