#பரதர்_பாண்டியர்_ஆனதும்....
#பாண்டியர்_பரவர்_ஆனதும்....
#வரலாற்று_சிறு_தொகுப்பு...
சந்திரன் என்பவனிடம் இருந்து தோன்றிய
அவனது வம்சமே சந்திர வம்சமாகும்.
பின் பாரத கண்டத்தை ஆண்ட பரத சக்கரவர்த்தியின் பெயராலையே
பரத வம்சம் என்று அழைக்கப்பட்டது.
அதனால் சந்திர வம்சத்தாரை பரதர் என்று
அழைத்தனர்.
அந்த சந்திர வம்சத்தின் பரதர் குலத்தில் தோன்றிய
சுராராஜா என்பவன் சக்கபுரி என்னும் பட்டணத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு அமிர்தராஜா என்று ஒரு குமாரன்
இருந்தான்.
அந்த அமிர்தராஜாவுக்கு ஏழு குமாரர்கள் பிறந்தார்கள். அவர்கிளில் மூத்தவனான
காந்தவிரியன் என்பவன் தான் மன்னராக
ஆன பின் தன் தம்பிகளோடு காட்டுக்குப்போய்
வேட்டையாடி மிகுந்த தாகமடைந்தது.
தனக்கு இளையவனான குலசேகர ராஜா என்பவனை தனக்கு தாகம் தீரும்படியான பாணம்
கொண்டு வர பணிந்தான்.தம்பி குலசேகர ராஜா அண்ணன் சொன்னபடியே விரைவாய்
சென்று தாறும் மிகுந்த தாகமடைந்திருந்த்தால்
பாணமுன்டு சற்று தாமதமாகி தமையனுக்குப் பாணம் கொண்டு கொடுத்தான்.அதனால் கோபம் கொண்ட காந்தவிரிராஜா மன்னன் அவனை நோக்கி அவர்களை விட்டு நீங்கி போக சொல்லிவிட்டான்.
அண்ணணின் சொல்கேட்டு குலசேகர ராஜா அவர்களைவிட்டு நீங்கி போய் தெற்கே தமிழ்
வழங்கும் மணவூர் என்னும் ஊரில் போய் மீன்
பிடித்து விற்று வாழ்ந்து வந்தான்.
அவனது வரலாற்றை அறிந்தஅங்கிருந்த
கஷமணராஜா தனது ஒரே மகள் சுலோதை என்பவளை அவனுக்கு மணமுடித்து வைத்து தன் அரசையும் கொடுத்துவிட்டான்..
இந்த குலசேகரராஜா பரதன் அந்த
ஊரினிலே முன்னே மூன் பிடித்து விற்றுக்கொண்டிருந்த்தாலேயே...தனது குலத்திற்கு உரிய சின்னமாகிய மீனை
தனது கொடியாக்கி வைத்துக் கொண்டான்...
பரதர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களான
பாண்டியன் என்ற பெயரால் அவன் அழைக்கப்பட்டான்....
அவன் வம்சா வழியில் வந்தவர்களே
பாண்டிய மன்னர்கள்.
இந்த குலசேகரபாண்டியனின் குமாரன்.சித்திரவாகன மாறன் எனப்பட்டான்.
அவனுக்கு மலையத்துவச மாறன் என்று
மறு பெயரும் உண்டு.அவன் குமாரத்தி சித்திராங்கதை என்பவளுக்கு தாடதகை என்றும் பெயர் உண்டு.இவள் அர்ச்சுனன் என்று அழைக்கப்பட்ட சுந்தரப்பாண்டிய தேவன் என்ற
என்ற சந்திரர் குல பரதனை மணந்து பப்புருவாகனன் என்பவனை பெற்றெடுத்தால்
இந்த பப்புருவாகனன் பாண்டியன் உக்கிரப்பாண்டியன் என்று அழைக்கப்பட்டான்.
உக்கிரப்பாண்டியன் என்ற பரதன் வீரப்பாண்டியனைப் பெற்றான்.
வீரப்பாண்டியன் ஆபிஷேக பாண்டியனைப் பெற்றான்.
அபிஷேக பாண்டியன் என்ற பரதன் விக்கிரம பாண்டியனைப் பெற்றான்.
விக்கிரம்பாண்டியன் மகன் இராஜசேகரபாண்டியன் என்ற பரதன்.
இந்த வழியில் ஆட்சி செய்து வந்த
63 ஆம் பாண்டியனான சந்திரர் குலத்தை சேர்ந்த
சத்துருநாதன பாண்டியன் தன் பாண்டிய
நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தான்..
அவனுக்கு தன் பட்த்து தேவியிடம் சுந்தரப்பபாண்டியன் என்னுமோர் மகனையும்
தனது தாசியினிடம் இருந்து வீரப்பாண்டியன்
என்றுமோர் புத்திரனையும்.பெற்றான்.
இந்த வீரப்பாண்டியன் என்பவன் மாவீரம் பொருந்தியனாகவும், மகாதந்திரசாலியாகவும்
இருந்தான்.என்பதை கண்ட சத்துருசாதன பாண்டியன் தனது தாசி வயித்தில் பிறந்த
வீரப்பாண்டியனை தனக்கு பின் தனது பட்டத்துக்குரியவனாக தீர்மாணித்துக் கொண்டான்.அதையறிந்த சுந்தர பாண்டியன்
அதிக சினம் கொண்டு தன் தந்தை சத்துருசாதன
பாண்டியனை கொன்று தானே
ஆரியணை ஏறினான்.
இளையவனான பகைகொண்டு தக்க
தருணம் பார்த்து காத்திருந்தான்.
இந்த நேரத்தில் சுந்தரபாண்டியன் தான்
தனது முன் செய்த தீவினையின் விளைவாக
உடம்பிலேயே கூனுண்டான .அப்போது அரசன்
தன் சமண குருக்களை அழைத்து பல மந்திர யாகங்களை செய்வித்தும் அது சுகப்பெறம்மில்லை.
அப்பால் தன் மந்திரியாற குலச்சிறையினுடைய
வேண்டுக்கொளுக்கு இணங்க சைவ குருக்களை அழைத்து அவர்கள் வசம் தன்னை ஒப்புவிக்க,
அவர்கள் அரசனுடைய கூன் நிமுரும் படி
செய்ய அரசன் சைவ சமயமே மெய்யென்று சொல்லி ,தனது நாட்டுமக்களை சைவ சமயத்தை
தழுவ வற்புறுத்தினான்.இவன் கூண் பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டான்.
இந்த சமயத்தில் வீரபாண்டியன் தன் படைகளோடு வந்து சுந்தரப்பாண்டியனை பல யுதங்களை செய்து தோற்கடித்து பாண்டிந நாட்டிற்கு
மன்னன் ஆனான்.
வீரன் என்ற வீரப்பாண்டியன் இராஜா தனது
இராஜாங்கத்தை தன் வசம்படுத்தும்படி.
தன் தாய் பாண்டிய குலத்தை சாராத
பெண்ணாய் இருந்ததால் பூர்விக பாண்டியர் வம்சமான சந்திர குல பரத பாண்டியராய்
உள்ளவர்களை எல்லாம் அழிக்க தொடங்கினான்
அதனை அறிந்த சந்திர குல பரத வீரர்கள்
பாண்டியநாடு தங்கள் வசம் இன்றி பறிபோறதை
உணர்ந்து இடம்பெயர
ஆரம்பித்தனர்.அப்படி இடம்பெயர ஆரம்பித்தவர்கள் தேர்ந்தெடுத்த இடம்
தென்னாட்டு பாண்டிய நாட்டின் காவல் போர் படை ஊர்களாக இருந்த
கடற்கரை ஊர்களில்
வீரத்துடன் தங்கியிருந்த பரத பாண்டியர்களிடம் போய் வீரப்பாண்டியனின் வஞ்சனையை
கூறினார்கள்.
அதை கேட்ட அங்கு பரத பாண்டியர்கள் எல்லாம்
இரகசியமாய் கூட்டம் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர் தூத்துக்குடி ஆகவே அது அன்று முதல் மந்திர நகர் என்று அழைக்கப்பட்டது
அங்கு அவர்கள் கூடி முடிவெடுக்கப்பட்ட தீர்மாணம் "வீரம் மிகுந்த வீரப்பாண்டியன்
நம் பாண்டிய நாட்டுக்கு அரசனாகி விட்டான்.
அவன் பாண்டியர் குலமாக இல்லாத்தால்
பூர்விக பாண்டிய வம்சத்தவரன நம்மை அழிக்க
முடிவெடுத்து விட்டான் எனவே அவன் நம்மை
பூர்விக பாண்டிய வம்சத்தார் என்று அறிந்து
கொள்ளாதிருக்கும் படி ஒன்றை செய்ய
துணிந்தனர்.அதாவது பூர்வக பாண்டியர் என்னும் பெயரை தமக்குள்ளேயே ஒளித்து வைப்பது,
அவர்கள் செய்து வந்த போர் தொழில்களையும்,கடல் வாணிபத்தையும்
நிறுத்தி வைத்து தங்கள் பாண்டிய மன்னர்களில்
மூத்தோரான குலசேகர பாண்டியன் மன்னராய்
மூடி சூட்டப்படும் முன் மீன் பிடித்தல்
தொழில் செய்த்தால் எந்த தொழிலும்
இழிவின்றி என கருதி மீன் பிடி தொழிலை இனி
செய்யலாம் என்று முடிவு எடுத்தனர்
அப்போது தங்களை யாரும் தங்களை சந்திர குல பரத பாண்டியர் என்று கண்டுகொள்ளமுடியாது
என்று தீர்மாணித்தனர்,
எனவே தங்கள் பெயரையும் மாற்றியமைக்க தீர்மாணித்து தங்களுக்கு பட்டமான பௌரவர் என்ற
பெயரை தங்கள் பெயராய் வைக்க முடிவு
செய்து கொண்டனர் பௌரவர் என்ற பெயரே காலப்போக்கில் திரிந்து பரவர் என்றானது.
இந்த பெயரை இன்று வைத்து கொண்டிருப்பவர்களே உண்மையாண
சந்திரக்குலத்தவர்கள்..
பரதர்கள் இடம் பெயர்ந்த பின்பு தாசி வயித்தல் பிறந்து மன்னரான வீரபாண்டியன் வழியல் வந்த
வம்சத்தார்களே பாண்டிய நாட்டை ஆண்டனர்.
இவர்கள் பூண்டிய வம்சத்தார் அன்று.
காலம் கி.பி 1064 பின் ஆண்ட மன்னர்கள்...
இன்று பரவர் என்றும் ,மீனவர்கள் என்றும்
அழைக்கப்படும் நாமே சந்திர குல பூர்விக பாண்டிய வம்சத்தார் ஆகும்..
ஒன்றினைவோம் உறவுகளே....
No comments:
Post a Comment