Friday, 21 October 2016

விடுதலைப் போராளி ஜே.பி.ரொட்ரிக்ஸ்

இந்தியவெங்கும் சுதந்தரப்போராட்டம் மிக தீவரமாக நடந்து கொண்டிருந்த காலம்
அது.தென்தமிழகத்திலும்_அறவழியிலும் ,வன்முறையிலும் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

ராஜாஜியின் தலைமையில் சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோருடன்
உப்பு சத்தியாகிகரகத்தில் முனைப்புடன் கலந்துகொண்டார் ஜே.பி.ரொட்ரிக்ஸ்.ஆகஸ்ட் புரட்சுயிலும்
கலந்து கொண்ட காங்கிரஸ்வாதி ஆவார்.
தென் தமிழகத்தில் போராட்னத்தக்கு ராஜாஜி தலைமையேற்க வ.உ.சிதம்பரம் பிள்ளையும்,ரொட்ரிக்ஸ்சும் தொண்டர் படை தலைவர்களாக பதவியேற்றனர்.ரொட்ரிக்ஸ் அதோடு விட்டு விடாமல் "சுதந்திர வீரன்" என்ற பத்திரிக்கையையும் தொடங்கினார்.அந்த பத்திரிக்கை தென் தமிழக மக்களிடையே சுதந்திர வேட்கையை விதைத்ததுடன் ,பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைகளுக்கு தீவிரமாக குரல் கொடுத்தது.

ஆகவே சுதந்த வீரனுக்கு சோதனை வந்தது.
பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த பத்திரிக்கையை
பறிமுதல் செய்ததுடன் ,சுமார் இரண்டரை
இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களையும்
பறிமுதல் செய்தது.ரொட்ரிக்ஸ் ஓய்ந்து போகவில்லை.முன்னைவிட போராட்டத்தில்
தீவிர ஈடுபாட்டை காட்ட தொடங்கினார்

அவர் அடைந்த போராட்ட தியாகங்கள்...

* உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஒரு ஆண்டுகளுக்கும் மேல் சிறையிலடைக்கப்பட்டார்.

*தூத்துக்குடி இந்தி விடுதலைக்காக ரொட்ரிக்ஸ் நடத்திய சுதந்திர வீரன்
பத்திரிக்கை தடை செய்யப்பட்டு இரண்டரை இலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை வெள்ளையர் அரசு பறிமுதல் செய்தது.

*கள்ளுக்கடை மறியல் மறியல் தீ வைப்பு போராட்டத்தில் ஈடுபட்டராக ரொட்ரிக்ஸசும் அவர் மனைவி ரொஸலின் கொரைராவும் ஒரு வருடம் சிறையிலடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடியில் நடந்த முதல் கள்ளுக்கடை
மறியிலின் போது "அந்நிய தேசத்துக் கடைகளைக் கொள்ளுத்துங்கள்" எனக் கூக்குரலிட்டவர் ரோஸலின்.

சுதந்திர போராட்டத் தியாகியான ஜே.பி ரொட்ரிக்ஸ் _ரோஸலின் தம்பதியினருக்கு
1-கிளாஸ்டன்
2-மாணிக்கம்மாள்
3-சத்யா
4-நெப்போலியன்
5-துரைராஜ்வ
6-பனிமய தாசன்
7-ஏஞ்சலின்
8-ராஜம்
9-ஜவஹர்
10-ஜோதி
11-நோபிள்
12-ரவி
13-பெஞ்சமின்
என்று பதிமூன்று குழந்தைகள்.

1927 , ஆகஸ்ட் 5 ஆம் தேதி,ரொட்ரிக்ஸ் குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்த
பனிமயதாசன் தான் பின்னாளில் தன் பெயரை சந்திரபாபு என்று மாற்றிக்வைத்துக்
கொண்டார்.பிறந்த சில நாட்களிலேயே பனிமயதாசனை கடுமையான விஷக்காய்ச்சல் தாக்கியது.குழந்தை பிழைக்குமோ பிழைக்காதா என்ற நிலை.
ரொட்ரிக்ஸும் - ரோஸலினும் ,தூத்துக்குடியில் கடற்கரையோரம் அமைந்துள்ள பனிமய மாதா தேவாலயத்திற்குச் சென்று குழந்தையைப் பிழைக்க வைக்கும்படியும்,குழந்தைக்கு மாதாவின் பெயரை வைப்பதாகவும் மனமுருக
வேண்டினர்.குழந்தை பிழைத்துக் கொண்டது.

குடும்பத்தில் எல்லோராலும் "பாபு" என்று
அழைக்கப்பட்டு,எந்த கவலையும்
இன்றி "சுதந்திர வீரனாக" வளர்ந்தான்
சந்திரபாபு.முழுப் பெயர் பனிமயதாசன்
இவர் பரதர் இனத்தை சேர்ந்தவர் என்பதால் ,பரதர் சந்திரகுலம்
என்பதால் இனத்தின் மீதுள்ள பற்றால்
தனது பெயரை சந்திரபாபு என மாற்றிக்கொண்டார்.சிறுவயதிலிருந்தே
ஏழுகடற்துறையிற் ஏக அடைக்கலமாம்
பரதர் மாதா என்றழைக்கப்படும் பனிமய மாதாவின் தீவிர பக்தனாகவே வளர்ந்தார்
இவர்.

சிறுவன் சந்திரபாபு மிக அழகாக இருப்பார்
அண்டைய வீட்டாளர்களிடம் சகஜமாக பழகுவார்.நவராத்திரி நாட்களில் ,கொலு வைத்திருக்கும் வீடுகளுக்கு வேஷம் போட்டு
சென்று பாடல் பாடுவார்.

படிப்பில் சுத்தமாக ஆர்வம் இல்லை.அந்த சிறுவயதிலேயே சினிமா ஆர்வம் கொண்டார்..

1939 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம்
செய்ததற்காக சிறை சென்றார் ரொட்ரிக்ஸ்

சிறுவன் பாபுவோ ,இந்த கவலைகள் இன்றி
குற்றாலத்தில் தீரர் சத்தியமூர்த்தியின்
குடும்பத்துடன் ஆனந்தமாக இருந்தான்.அப்போது அவனுக்கு வயது
11 ,சந்திரபாபுவையும்,சத்தியமூர்த்தி மகள்
லட்சுமியையும் கவனித்து கொண்டவர் காமாரஜ். ஆம் முதலமைச்சர் காமாராஜர் தான்.காமராஜர் சத்தியமூர்த்தியின்
தொண்டராக இருந்தவர்.
சந்திரபாபுவையும்,லட்சுமியையும்
கவனிக்கும் பணி காமாரஜருக்கு கொடுக்கப்பட்டிருந்து...
.ரொட்ரிக்ஸ் விடுதலை அடைந்ததும் அவர்
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்டார் கடத்தப்பட்ட நாடு
இலங்கை.

சத்தியமூர்த்திக்கு ரொட்ரிக்ஸ்சிடம் இருந்து கடிதம் வந்தது...அதில் தன் மகன் சந்திராபுவை இலங்கைக்கு  அணுப்பி வைக்கும் படி கேட்டிருந்தார் ரொட்ரிக்‌ஸ்.
சத்தியமூர்த்தியும் ரொட்ரிக்ஸின் வேண்டுகொளுக்கு இணங்க சந்திரபாபுவை இலங்கைக்கு அணுப்பி வைத்தார்.

இலங்கைக்கு கடத்தப்பட்ட போதும்
அங்கேயும் ரொட்ரிக்ஸின் சுதந்திர உணர்வு தூங்கவில்லை அங்கேயும் ஆரம்பித்தார்
காலச்சக்கரம் என்ற வாரப்பத்திரிக்கை

1942 ஆம் ஆண்டு உலகப்போரின் கைகளில் கொழும்பு சிக்கிக்கொண்டது.
ஈஸ்டர் தினத்தன்று,கொழும்பில் ஜப்பானியர்கள் குண்டு போட்டனர்.இதையெடுத்து அங்கிருந்த
மக்கள் பாதுகாப்புக்கு வேறு இடம் தேடினர்.ரொட்ரிக்ஸ் குடும்பமும் வேறு இடம் தேடி ஹட்டன் நகரை நோக்கி இடம் பெயர்ந்தனர்.ஆனால் ஹிட்டனிலும் அவர்களை விதி விடவில்லை,அங்கே பிழைப்புக்காக கடை ஒன்றை நடத்தினார்
ரொட்ரிக்ஸ் அதிலம் நஷடம் ஏற்பட்டது.
இலங்கையில் இனிகாலம் தள்ள முடியாது
என்ற நிலையில் இந்தியாவுக்கு திரும்பிவிடலாம் என்று முடிவு எடுத்த்து..
ஆனால் அவர்கள் தங்கள் சொந்த ஊரான
தூத்துக்குடிக்கு செல்லாமல்..சென்னைக்கு வந்தது.

1943 இல் சந்திரபாபுவின் சினாமா கனவுகளோடு சென்னையில் காலடி எடுத்து வைத்தார்....

இது விடுதலைப்போராட்ட வீரரின்
சிறு தொகுப்பே தவிர முழு வரலாற்று தொகுப்பு  அல்ல....
வரலாறில் மறைக்கப்பட்ட
சுதந்திர வீரர் ஐயா ரொட்ரிக்ஸ் அவர்களுக்கு சிலை ஒன்று வைக்கப்பட வேண்டும்....
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில்...

7 comments:

  1. அப்பாவின் பெயர் ஜே.பி.ரொட்ரிக்ஸ், அம்மாவின் பெயர் ரொஸலின் கொரைரா என்றால் அவர்களின் குழந்தைக்கு எப்படி சந்திரபாபுவின் முழுப் பெயர் பனிமயதாசன் பர்னான்டோவாக எப்படி இருக்க முடியும்? இது தவறு என்று இதை எழுதியவருக்கு தெரியவில்லையா? இந்த கட்டுரையை எழுதியவர் நிச்சயம் ஒரு பராவாராக இருக்க முடியாது!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. மண்ணிக்கவும் சிறிய எழுத்துப்பிழை இப்போது மாற்றிவிட்டோம்...

      Delete
  2. மேலும் "ரொட்ரிக்ஸும் - ரோஸலினும் , தூத்துக்குடியில் கடற்கரையோரம் அமைந்துள்ள பனிமயதாசனின் தேவாலயத்திற்குச் சென்று குழந்தையைப் பிழைக்க வைக்கும்படியும்,குழந்தைக்கு மாதாவின் பெயரை வைப்பதாகவும் மனமுருக வேண்டினர்." என்று எழுதியவர் தூத்துக்குடிக்கு சென்றிருப்பாரா? அவர் உண்மையான கத்தோலிக்கராக இருந்தால் "பனிமயதாசனின் தேவாலயத்திற்குச் சென்று" என்று எழுதியிருப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மண்ணிக்கவும் சிறிய எழுத்துப்பிழை இப்போது மாற்றிவிட்டோம்...

      Delete