Tuesday, 25 October 2016

கொற்கைப் பாண்டியர் "பரதர்"

"செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயம் கண்டுபிடிப்பு By DIN | Last Updated on : 13th October 2016 03:59 AM | அ+அ அ- | கொற்கை பாண்டியரின் 'செழியன்' பெயர் பொறித்த வெள்ளி நாணயம். கொற்கை பாண்டியரின் செழியன் பெயர் பொறித்த வெள்ளி நாணயத்தை தென்னிந்திய நாணயவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்துள்ளார். இது குறித்து இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியது: நான் அண்மையில் மதுரை சென்றிருந்த போது, எனது நண்பர் ஒருவர் தான் பாதுகாப்பாக வைத்திருந்த இரண்டு சிறிய வெள்ளித் தகடுகளை என்னிடம் கொடுத்தார். அவற்றை சென்னைக்கு கொண்டு வந்து சுத்தம் செய்து, புகைப்படம் எடுத்து பல நாள்கள் ஆய்வு செய்தபின், இரண்டு தகடுகளில் ஒன்று, சங்க கால வெள்ளி நாணயம் என்பது உறுதியானது. அந்த நாணயத்தை பற்றிய விளக்கம்: முன்புறம்: நாணயத்தின் முன்புறத்தில் வலப்பக்கம் நோக்கி, மன்னரின் தலை உள்ளது. தலையின் மேல் ஒரு கிரீடம் உள்ளது. அந்த கிரீடத்தை அழகு செய்யும் ஒரு நீண்ட குஞ்சம், நெற்றியிலிருந்து பின் நோக்கி, பின்புறம் கழுத்து வரையில் உள்ளது. முகத்துக்கு எதிரே, மேலிருந்து கீழாக நான்கு எழுத்துக்கள், தமிழ்பிராமி எழுத்து முறையில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் எழுத்து, "செ' இரண்டாவது எழுத்து, "ழி' மூன்றாவது எழுத்து, "ய' நான்காவது எழுத்து, "ன்' சேர்த்து படிக்கும்போது, செழியன் என்ற பெயர் வருகிறது. "ய' எழுத்து முழுமையாக இல்லை. வலதுபக்கம் அடிப்பகுதியில் உள்ள வளைவு தெளிவில்லாமல் உள்ளது. அந்தப் பகுதியில் வட்ட வடிவிலான ஒரு பள்ளம் இருக்கிறது. பின்புறம்: எளிதில் படிக்க முடியவில்லை. நாணயத்தின் நடுவில் ஒரு மனிதன் தலையை குனிந்து கொண்டு நிற்கிறான். அவன் முன் காலுக்கு அருகே பானை போன்ற ஒரு சின்னம் உள்ளது. அந்த மனிதனின் இடுப்பிலிருந்தும், தோள் பட்டையின் கீழ் இரண்டு கைகளுக்கிடையிலிருந்தும் கயிறுகள் மேல் நோக்கி செல்வது போல் அச்சாகியுள்ளது. 2,300 ஆண்டுகளுக்கு முன், கொற்கைப் பாண்டியர்கள் தங்கள் கடற்பகுதியில் விளைந்த முத்தை, போர் கைதிகளைப் பயன்படுத்தி முத்துச் சிப்பிகளை அறுவடை செய்ததாக, நுôலில் படித்த நினைவு இருக்கிறது. உலகின் சிறந்த முத்துக்கள் இங்கு விளைந்ததால், கிரேக்கர்களும், ரோமானியர்களும், வெள்ளிக் கட்டிகளையும், தங்கக் கட்டிகளையும் கொடுத்து முத்துக்களை வாங்கி சென்றதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, மாறன் மற்றும் செழியன் பெயர் பொறித்த நாணயங்கள் வெளிவருவது கண்டு, வரலாற்று ஆய்வாளர்களுக்கு திகைப்பு ஏற்படுகிறது. அசோக பேரரசர் தன் கல்வெட்டில் கூறியுள்ள, தம்பிரபருணி நாடு, கொற்கைப் பாண்டியர்களது நாடுதான் என்பதை, வருங்கால கண்டுபிடிப்புகள் உறுதி செய்யும் காலம் வருகிறதோ எனக் கருதுகிறேன் என்றார் இரா.கிருஷ்ணமூர்த்தி.

No comments:

Post a Comment