#பரத_குல வம்சாவழியினருக்கு மட்டுமே உரிமையான கௌரவக் கட்டயங்கள்
பண்டைய காலத்தில் மன்னர் நகர்வலம் மற்றும் அரசவைக்கு வரும்போதும், போகும்போதும் அடுக்கு மொழியில் அமைந்த சில சொற்றொடர்களை உயர்தொனியில் கூறுவர். இதனை கட்டயம் கூறுதல், ஸ்துதி பாடுதல் அல்லது கீர்த்தி கூறுதல் என்பர். இதற்கு ‘பாரக்’ என்று மக்கள் கூறுவது பதிலாக அமையும். அவ்வாறே மன்னனின் வெற்றிகளை, புகழ்ச்சிகளை கல்வெட்டுகளில் பொறிக்கும் போது மெய்கீர்த்தி என்பது முதலாவதாக அமையும். மன்னனின் பெருமைகளை அவனுக்குக் கூறப்படும் மெய்கீர்த்திகள் மூலம் அறியலாம். அதனடிப்படையில் பரதவக் கடலோர கிராமங்களில் சமீப காலம் வரை திருமணம், பட்டின பிரவேசம் மற்றும் பற்பல சுற்றுப்பிரகாரங்களில் இவ்வாறு கட்டயம் கூறுவது என்பது வழக்கமாக இருந்தது. அவ்வாறே வேம்பாற்றில் கூறப்படும் கட்டயங்கள் சில ....
1. ஆனாள் சேயே, அன்னை தஸ்நேவிஸ் மரியே, அமல உற்பவியே, அருள் மழை பொழியும் அம்மா......
2. திருமந்திரநகர் சேகரம், பாண்டிய நாட்டில் திடமுடன் அரசு புரிகின்ற துறையே......
3. தொன் கஸ்பார் அந்தோணி தெக்குருஸ், வாள் ஏந்தும் மன்னா......
4. மண்ணால் படகு வைத்து, அந்நாள் இவனுக்கு முப்பூசை பாடி வைத்த துரையே ......
5. பொன்னால் மின் அமைத்து, அந்நாள் இவனுக்கு மாலை அணிவித்த மணியே.....
6. வங்காளம், டில்லி, மதுராபுரி, யாழ்ப்பாணம் சங்கம் மகிழ்ந்த துரையே.....
7. அந்நாளில் அயோத்தி விட்டு, பாதி நாளில் பாண்டி வந்த பங்கமில்லா தங்கமே....
8. காட்டைக் கலக்கி, கடிநாயை ஏவி விட்டு, கடலுக்கு அரசனான பரதகுல பாண்டியன் திருமுடி சூடி பவனி வருகிறார்....
9. உத்திரகோசமங்கையில் கல் தேர் ஓட்டிய ஜெயவீரா.......
10. எட்டுகுடையும், பதினாறு கோணமும், எழுகடலும் வெற்றி கொண்ட தீரா......
11. சிங்கக்கொடி, சேவற்கொடி, அன்னக்கொடி கொண்ட சுமூகா.......
12. முத்து மாலை கழுத்தில் அணிந்து, தங்க மகுடம் தலையில் தரித்து, சங்கையுடன் பவனி வரும் ராஜ கெம்பீரா .......
13. சீரான வாத்தியம் ஒலிக்கின்ற ஒலி திடீர் திடீரென வருதேவே.......
14. செம்பொன் இங்கிலீஸ் கொம்பன் துன் கபிரியேல் லாசரஸ் மோத்தா வாஸ் புதல்வா ..................
No comments:
Post a Comment