Showing posts with label பரதர் தொலைக்காட்சி. Show all posts
Showing posts with label பரதர் தொலைக்காட்சி. Show all posts

Thursday, 31 August 2017

எம் பரத்திக்கு

நெய்தல் நில பரத்திக்கு நெய்தல் தமிழன்
சகோதரனின அன்பு வேண்டுகோள்.

உப்புக்காற்றில் என்னோடு வளர்ந்தவளே
                                              - நலமா ?
வீரத்தை என்னோடு குருதியில் பகிர்ந்தவளே
                                              - நலமா ?

வான் திமிர் கொண்ட ஆணையும் மதி
                              - கொண்டு வெல்பவள் நீ
உன் கைவிரல் பிடித்ததால் ஓடிய குருதி
                                  -ஆறும் அறியனும் நீ

கற்புக்கரசி கண்ணகி வழி வந்தவள் தான்
                          -  அதுவும் நினைவு கொள் நீ
உலகமே வியந்த தமிழ்  தேசியதலைவரின்
                                            - சகோதரி நீ

கிறிஸ்தவ கத்தோலிக்கத்தின் வேறூண்றிய
                                          - ஆணி வேர் நீ
பார் ஆண்ட பரத இனத்தின் வலிகளையும்
                                            - அறிவாயா நீ

உன் இனத்தை தாங்கி பிடிப்பாயா ! தூக்கி
                                             - நிற்பாயா ?
பிளவுண்ட இனத்தின் விரிசல்களை பூசி
                                             - காற்பாயா ?

உனக்கு அறிவுறை கூற நான் அறிவாளி
                                   -  உன்னை விட அல்ல
உன்னிடத்தில் கெஞ்சி கேட்கிறேன் நீ
                              - என் இனத்தின் தாயல்ல

கல்வியின்  சிகரம் தொடு...
அதிகாரத்தில் ஆணி வேர் தொடு....
வீரம் கொண்டாலும் மதியை எடு...
வீழ்ந்த இனத்திற்கு எழுச்சி கொடு....

குறிப்பு...

பரத ஆண்களே கொஞ்சம் வழி விடுங்கள்
உங்கள் ஆணாதிக்கத்தை மீண்டும் திணிக்காதீர்கள்.

என் இனம் என உன்னோடு அவள் பேசுகிறாள் என்றால்  நீ அவள் அரண் என நினைத்து... அதை சிதைத்துவிடாதே...

நாளைய இனத்தின் விடியலை இருளில் கிடத்திவிடாதே...

    என்றும் நெய்தல் தமிழன் ✍🏻
         

Friday, 11 August 2017

எம் நெய்தல் பரதா !

என் நெய்தல் நில பரத உறவுகளுக்கு வணக்கம்.

கடந்த மூன்று வருடங்களாக நம் இன இளைஞர்களிடத்தில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஏதோ ஒன்று பின்னால் சுற்றி திரிந்த காளை கூட்டம் இன்று ஒரு சேர சமுதாயம் என்னும் உணர்வை மனதில் கொண்டு பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

சினிமா நடிகர்களை தலையில் தூக்கி திரிந்த காலம் சற்று மாறி நம் இன வீழ்ச்சியை உணர்ந்து வரலாற்றை கையில் ஏந்தி நான் பாண்டியன் என உறும ஆரம்பித்துவிட்டது  !

சமுதாய இளைஞர்கள் , இளம் பெண்கள் சமுதாயம் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இனி கவலையில்லை இழந்த வரலாற்றை நிச்சயம் மீட்டெடுப்போம் அது உறுதி நாங்கள் மீண்டும் எடுத்தே தீருவோம் இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தியே தீருவோம் அடுத்து என்ன செய்வது ?

வரலாற்றை பற்றி பேசியது நமது நிலமையை உணர , நம் இழப்புகளை உணர , சமுதாய உணர்வு பெற ! அதுவும் இன்று நடந்தேறிக்கொண்டிருக்கிறது சில பேர் யோசிக்கலாம் அப்படியா என்று. ஆம் அப்படிதான் நாங்கள் இங்கே கூறுவது 100% இளைஞர்  , இளம்பெண்களை பற்றி
ஆம் எம் இளைஞர்களே உங்களைப்பற்றிதான். உணர்வு ஒட்டுமொத்தமும் பெறாவிட்டாலும் கடந்த மூன்று வருடத்தில் பெற்றவர் ஏராளம் !

இன உணர்வோடு கிளர்வுற்று என் இனத்திற்கு என்ன செய்யப்போகிறேன் என சிந்தித்து கொண்டிருக்கும் சகோதரர் சகோரிகள் ஏராளம்.

இதைப்பற்றி சமுதாய பெரியவர்கள் பலரோடு உரையாடி சில வழிகள் கிடைத்தது. நம் சமுதாயத்தின் நாளைய மாற்றத்திற்கானதாக உள்ளது ! இதை என் இளைஞர், இளம் பெண்களிடம் ஒப்படைக்கிறேன். நாம் தான் இதை செய்ய வேண்டும் செய்ய போகிறோம்.

நமது முயற்சி பல முற்போக்கு சிந்தனைகளை கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படையில்

1. சமுதாய உணர்வின் படி ஒருங்கினைதல் , 2. சமுதாயத்தின் கல்வி வழிகாட்டல் , 3. வேலைவாயப்பு வழிகாட்டல்

இந்த மூன்றும் தான் ஓர் இனத்தின் மிக தெளிவான கட்டுமானம். அதை நம் இனத்தில் கட்ட வேண்டும்.இதை இன்றைய இளைஞர்கள் நாமே செய்திட வேண்டும்.

ஒவ்வொரு ஊர்களிலும் படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் , படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் மாணவர்கள், வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் என இந்த மூவரும் ஓர் குழுவாக இணைதல் வேண்டும்.

குழு என்றதும் என்னதோ ஏதோ? என நினைத்துவிட வேண்டாம். நாம் நமக்கு தெரிந்தவற்றை நம் உறவுகளுக்கு பகிர்வது போதும். அது ஒரு குழுவாக இருப்பது பலம் !

ஊதாரணமாக படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் ஒர் கல்லூரியில் படிக்கலாம்
ஊதாரணமாக Law  படிக்கிறார்கள் என்றால் அவர் கல்லூரி அவர் படிப்பு அவர் விவரங்களை பதிவு செய்திட வேண்டும் அவர் மூலம் அப்படிப்பு பற்றிய தகவல்களை சேகரித்து குழுவில் படித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பகிர்தல் வேண்டும். அப்போது கல்லூரி படிப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு அது ஒரு வழிகாட்டுதலாகவும் ஒரு வேளை அந்ந கல்லூரியில் படிக்கும் வேளையில் அந்த மாணவர் உதவி பெறலாம். இது ஒரு குழுவாக அமைந்து இப்பணி தொடர்ந்தால்

அடுத்த அடுத்த மாணவர்களின் பயணம் சமுதாய வழியில் ஒரு நல்ல சிந்தனை நோக்கிய பயணமாக அமையும்.

அடுத்து படித்து முடித்த இளைஞர்களும் வேலையின்றி இருக்கும் இளைஞர்களும்.

உதாரணமாக நம் குழுவில் ஒரு இளைஞர் அரசு துறையில் ஓர் உயரிய இடத்தில் அமரலாம் அப்போது அது பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட வேண்டும் அப்போது அந்த படிப்பு படித்து அந்த வேலை தேடும் மற்றும் அந்த படிப்பு படித்து கொண்டிருப்போர்களுக்கு அந்ந நபரின் உதவி ஒரு வழிகாட்டிதலாக அமையும் !
இது தொடர்ந்தால்  நம் சமுதாயத்தில் நாளை சிறந்த ஆட்சி பீடங்களில் நிச்சயம் அமர முடியும் நம் குழுவில் சில மாணவர்கள் அரசு தேர்வுக்கு பயிற்சி எடுக்கலாம். அந்த புத்தகங்களை குழுவில் அதே பயிற்சி எடுப்போருக்கு கொடுக்கலாம் இது தொடர்ந்தால் ஒரு பெரும் மாற்றமே உண்டாகும்.

இப்படி ஒவ்வொரு ஊரிலும் சிறு சிறு குழுவாக இருக்கும் அனைத்து குழுக்களும் ஒன்றாக இனைத்துவிடலாம். முறையாக அந்த சிறு குழுக்கள் உருவாக்கப்பட்டால்.

குழு என்றதும் எங்கோ எண்ணத்தை செலுத்த வேண்டாம் மேற்கூறப்பட்ட மூன்று திட்டங்களை கொண்டு இளைஞர்கள் நாம் இனைவதே இந்த குழு  !

இப்படி அனைத்து ஊர் குழுக்களையும் இணைக்கும் வேலையில் ஓர் பெரும் மாற்றம் அப்போது தெரியும் !

இது நமது சமுதாய உணர்வில் ஒருங்கினைப்பு , சிறந்த கல்வி வழிகாட்டல், நல்ல ஆட்சி அமர்வு ,நல்ல வேலை

என எண்ணங்களை நிறைவேற்றும் வழியாக அமையும்.

எ.டு இராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் ஊரை சேர்ந்த இளைஞர்கள் இதை கையில் எடுத்து கடந்த மூன்று வருடங்களாக Fisherman HUP  என்ற குழுவாக இனைந்து பல நல்ல காரியங்கள் செய்து வருகின்றனர்
அதை போல் நம் சமுதாயமே அதை கையில் எடுக்கலாமே !

என் இன இளைஞர்களே !
எம் சகோதரிகளே !  ஒரு தாய் மக்கள் தான் நாம்  ! என்ற உணர்வோடு இனணவோம் !

ஒற்றை குறிக்கோளை கொண்டு பயணிப்போம் !

நல்ல கல்வி  !  நல்ல ஆட்சி அதிகாரம் !
நல்ல வேலைவாப்பு !

இந்த மூன்றையும் அமைக்க சமுதாய உணர்வை கொண்டு இளைஞர்கள் நாம் ஒன்றினைவது காலத்தின் கட்டாயம் !

இதை பதிவாக எண்ணிவிடாதீர்கள்

இதை செயலாக்க ஆசைப்படுகிறோம் !
எங்களுடன் கைகோர்த்து ஓர் குழுவாய் இனைய வாருங்கள் !

ஒவ்வொரு ஊரிலும் இக்குழு உருவாக்கப்பட வேண்டும் !

சும்மா கமெண்டு போட்டு கடந்து சென்றுவிடாதீர்கள்...

இன்றே தொடங்க முயற்சிப்போம் ஓர் குழுவாக இணைய !

உங்கள் பதிலை( கமெண்ட்)  ஏதிர்பார்த்து அல்ல !
உங்கள் செயலை எதிர்ப்பார்த்து அன்பு சகோதரன் !

Sunday, 2 July 2017

துரோகியின் உண்மை முகம் !

இனத்துரோகியின் கதை !

இவர் யார் என்பது நிச்சயம் அனைவரும் அறிந்திருப்பீர்கள் பெயர்: அமல் அரசு
சொந்த ஊர் "ஆறுமுகநேரி" இருப்பது தூத்துக்குடி. இவர் கடந்த வருடங்களாக "பரதர் சமூக வழிகாட்டி " என்ற அமைப்பை நடத்தி வந்ததும். பரதர் சமூக வழிகாட்டி என்ற இதழ் 5 வரை வெளியிட்டு பின் நிறுத்தப்பட்டதும். பின் "தமிழ் சமூக கூட்ம்மைப்பு" என்ற அமைப்பை இப்போது தலைமையேற்று மண்ணிக்கவும் அவரே உருவாக்கி நடத்துகிறார். என்பதும் அனைவரும் அறிந்திருக்க கூடும். அறிந்திருக்காவிடிலும் அறிந்து கொள்ளுங்கள். தன்னைப்பற்றி தெரிநவதைக்காட்டிலும் தன் எதிரி பற்றியும் துரோகி பற்றியும் அறிவது முக்கியம் !

ஒன்றரை வருடங்களுக்கு முன் ஒரு நபர் என்னிடப் தொடர்பு கொண்டு மிக சமுதாய உணர்வோடும் சமுதாயத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்றும் கூறிக்கொண்னிருப்பார். அவர் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் நேரடியாக எந்த செயலும் செய்ய முடியாமல் யார் மூலமாவது செய்யலாமா என்று  ஏங்கி கொண்டிருந்தார்.அவர் ஏற்ப்பாட்டில் கன்னியாகுமரியில்  முதல் கருத்து கூட்டம் நடைப்பெற்றது.அதில் தான் அமல் அரசு அவர்களுடன் சந்தீப்பு ஏற்பட்டது அப்போதே பல சமுதாய உணர்வாளர்கள் எச்சரித்தார்கள் தம்பி அவரை நம்பாதே என்று. இருந்தாலும் அவரை நம்பினேன். நம்பும்படி பேசினார். பின் அந்த நபரின் முயற்சில் சில கூட்டங்கள் நடைப்பெற்றது.பின் அவரது சில வேளைகளின் காரணமாக தொடர்ந்து செயல் பட முடியவில்லை பின் கூட்டங்களும் நடைபெறுவது நின்றுவிட்டது. பின் சில மாதங்கள் கழித்து அந்த நபர் என்னை தொடர்பு கொண்டி தம்பி தூத்துக்குடியில் என் செலவில் அமல் அரசுவை வைத்து 'பரதர் சமூக வழிகாட்டி" என்பதை உருவாக்கியுள்ளேன். நீ அவர்களுடன் இனைந்து செயல்படு என்று கேட்டுக்கொண்டார். ஆனால் சிரிய பிரச்சனைகளால் என்னால் செயல்படவில்லை. வெளிநாட்டில் உள்ள அந்த நபரும் 50,000 க்கும் மேல் பணம் உதவி அமல் அரசுவிற்கு கொடுத்து அந்த அமைப்பு உருவாவதற்கும் மிக  தூணாக இருந்தார். பின் இதழ் வெளியீட்டீற்கு சந்தா பணம், விளம்பரம் பணம் என இதழுக்காக என்று அனைவரிடமும் வாங்க ஆரம்பித்தார்.

ஒரு முறை சமுதாய உணர்வுடைய சில இளைஞர்களிடத்தில் உதவி கேட்டு அவர்களும் இவருக்காக சில சந்தாக்களும் பல தொழிழதிபர்கள் தொலைபேசி எண்களையும் நன்கொடை வாங்க வாங்கி கொண்டு சென்றார்.

பின் அந்த  அமைப்பு சில தனிபட்ட அவரது வழியில் சென்றது.வெளிநாட்டில் இருந்து சமுதாய உணர்வோடு உதவி செய்ய அந்த நபரை  தேவை முடிந்ததும் தூக்கி எறிந்துவிட்டார்.பின் புத்தகமும் நின்று விட்டது. இவருக்காக சந்தா வாங்கி கொடுத்த்தற்கு தம்பி அந்ந நபருக்கு சந்தா வாங்கி கொடுத்தீர்களே புத்தகமும் காணோம் , அதற்கும் பதிலும் வரல அப்போம் சந்தாவ திருப்பி தாங்க என்று வீட்டிற்கு பணம் கேட்டு ஆள் வந்த நிலமையையும் சமுதாய உணர்வு கொண்டதால் சந்தித்தோம்...

இவரால் சமுதாய உணர்வு கொண்ட நபர் பலர் சமுதாயமே வேண்டாம் என்று விலகி விட்டனர். ஆனால் இவரோ மிக அழகாக பரதர் சமூக வழிகாட்டியை  தமிழ் சமூக கூட்டமைப்பாக  அழகாக நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி விட்டார்.

இவரை நம்பி சமுதாய வேலை செய்த இளைஞர்களுக்கு இவர் தந்த பரிசு மிக பெரியது துரோகம் இன்று இவரிடத்தில்
இதை தட்டி கேட்டதற்கு எங்களைப்பற்றியே தவறாக பரப்பி கொண்டு உள்ளார். என்ன செய்ய இந்த சமுதாயம் அதையும் நம்பத்தான் செய்யும்.

இவரிடம் புத்தகம் வாங்கி படித்து விட்டு இவரையே எதிர்க்கும் துரோகிகள் என்று எங்களைப்பற்றி பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் புத்தகத்தை வீற்றீர்கள் வியாபாரமாக அதை எங்கள் பணம் கொடுத்து வாங்கினோம்.படித்தோம் இன்று நீங்கள் தூரோகம் செய்தீர்கள் தட்டி கேட்டோம். உங்களிடத்தில் இலவசமாக வாங்கிவர் என்பதுபோல் கூறுகின்றீரே !
புத்தகத்திற்கு மட்டுமல்ல சிறு சமுதாய வரலாற்று பேப்பர்களுக்கு கூட ஒரு ருபாய் என்று சரியாக விலைப்போட்டு சரியாக  வசூலித்து வியாபரம் தான் செய்தீர்கள் எங்களுக்கு தானம் செய்ததைப்போல் குலைக்காதீர்கள். உங்களைப்போல் அல்ல.

சமுதாய பெயரில் ஒரு ருபாய் எவரிமாவது வாங்கினேன் என்றோ யாரையாவது ஏமாற்றினேன் என்றோ ! ஒருவரையாவது சொல்ல வைக்க முடியுமா உங்களால்.

உனக்கு யார் தருவார் என்று கேட்காதீர்கள் வரலாற்று புத்தகம் வாங்கி பிறருக்கு படிக்க கொடுப்பதற்கோ அதை நகல் எடுத்து கொடுப்பதற்கொ செலவுக்கு தம்பி எவ்ளோ வேண்டுமென்றாலும் தாரேன் என்று மட்டுமல்லாமல் தந்த்தையும் வேண்டாம் என்கு திருப்பி கொடுத்துள்ளேன். இன்று மட்டுமல்ல எப்போதும் வாங்க மாட்டேன் என்னால் இயன்றதை செய்வேன்.

உங்களிடம் புத்தகம் வாங்கிய அந்த ஆயிரம் ருபாய் கூட எனது பெற்றொர் எனக்கு கல்லூரிக்கு தினம் செலவுக்கு தரும் பனத்தை சேகரித்த பணம் தான் அந்த ரூபாய் ! 

சமுதாய உறவுகளே நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இதுபோன்வர்களிடத்தில் ஏமாந்து சமுதாயம் சீரழித்தது என்ற நிலைக்கு தள்ளாதீர்கள்.

நிச்சயம் இவரைப்பற்றி கூறியதிற்கு என்னையும் இவரை எதிர்த்த சமுதாய உணர்வுடைய எம் தோழர்களை பற்றியும் நிச்சயம் தவறான தகவல்களை கூறுவார்.ஆனால் நிறுபிக்க முடியாது. ஆனால் நாங்க நிறுப்பிக்க முடியும் இவருக்கி பல்லாயிரம் கொடுத்து இன்று ஏமாந்து சமுதாயமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களை !

இவரால் எங்களுக்கு பிரச்சனைகளும் வரலாம். பணத்திற்காக சமுதாயத்தை விற்க துனிந்தவர். இந்த உண்மையை சொன்ன எங்களை சும்மாவா விடுவார்.நடப்படு நடக்கட்டும்...நன்றி

மீண்டும் யாரும் இவரைப்போன்றோர்களிடத்தில் ஏமாறாதீர்கள்...

இப்படிக்கு அவரால் ஏமாற்றம் அடைந்த
சமுதாய உணர்வுடைய இளைஞர்கள்...

Tuesday, 27 June 2017

மத்திய அரசே !

இலங்கை கடற்படை அப்பாவி இந்திய மீனவர்களை #கைவிலங்கிட்டு அழைத்து செல்வதை இந்திய அரசு கண்டிக்கவேண்டும்....
#கச்சதீவு_மீட்பே_தீர்வு

மணப்பாடு இளைஞர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

தொடர் விபத்துக்களை சந்தித்து வரும் மணப்பாடு கடற்கரையில் , இனிமேல் தங்கள் ஊர்  கடலில் முழ்கி யாரும் உயிர் பலி  ஆகக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இன்று மணப்பாடு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் பாதுகாப்பு வளையம் ஒன்றை ஏற்படுத்தினர்.
வாழ்த்துக்கள் மீனவ உறவுகளே !

Saturday, 24 June 2017

முகப்புத்தகத்தில் உங்கள் புகைப்படம் பதிவிடும் பெண்களா நீங்கள் ? கட்டாயம் படியுங்கள்...

"பெண்கள் நம் கண்கள்"
இப்பழமொழிகள் பாதி இறந்துவிட்டது
என்பதை இன்னும் சகோதரிகள் உணராமல் இருந்தால் பாதிப்பு உங்களுக்கு !

தினம்  முகப்புத்தகங்களில் பெண்கள் அவர்களது சுயப்படங்களை பதிவிடுவது. நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது.இதை நாம் தவறு என்றால் . ஏன் எங்களுக்கு உரிமை இல்லையா ? ஆணாதிக்கமா என்கிறார்கள்.

இது ஆணாதிக்கமும் அல்ல , பெண் உரிமை பறித்தலும் அல்ல ! "பெண்களின் பாதுகாப்பு" பற்றியது. ஆம் இன்றைய சூழ்நிலையில் ஓர் பெண் தனது புகைப்படத்தை  சமூக இனையதளங்களில் வெளியிடுவதால். அது சில ஓநாய்களிடத்தில்  கிடைப்பதால் நடக்கும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா ?

முகப்புத்தகத்தில் பெண்கள்(Female) முகப்புத்தக கணக்கில் 100 இல் 60 சதவீதம் பொய் கணக்குகள் (Fake accounts) பெண்களின் பெயரில் ஆண்கள் உபயோகிக்கும் கணக்குள். அந்த 60 சதவீத முகப்புத்தக கணக்குகளில் குறைந்தத பட்சம் 35 சதவீத கணக்குகள் பெண்களின் கணக்குகளைப்போலவே உபயோகிக்கின்றனர்.அவர் உண்மை கணக்குகளாக உபயோகிக்கும் அந்த கணக்கிற்கு படங்கள் எங்கே  இருந்து வருகிறது தெரியுமா ?   மீதி இருக்கும் 40 சதவீத முகப்புத்தக (பெண்)  கணக்குகளில் 25 சதவீத கணக்குகள் இன்றளவும் தங்கள் புகைப்படத்தை வெளியிடாமல் நடிகைகள் படம் , வேறு எதாவது என்று உபயோகிக்கின்றனர். மீதி 15 சதவீத கணக்குகள் தங்கள் புகைப்படங்களை  தாறுமாறாக பதிவேற்றுகின்றனர். அந்த 15 சதவீத கணக்குகள் தான் . அந்த 35 சதவீத  பொய் கணக்குகளுக்கு ( Fake accounts)  உயிர் கொடுக்கின்றது. ஆம்
முகப்புத்தகத்தில் உங்கள் படங்களை பதிவிடுபவரா நீங்கள் அப்போது உங்கள் படம் ஏதேனும் ஓர் கணக்கில் இருக்கும் எதாவது ஒர் பெயரில்... எதாவது ஒர் தவறான காரியத்திற்கு உபயோகிக்கப்பட்டு கொண்டிருக்கும்... இதை தெரிந்தும் உங்கள் படங்களை முகப்புத்தகத்தில் பதிவிடுவீர்கள் என்றால் பதிவிடுங்கள்...

#இன்ஸ்டாகிராம் (Instagram)  முகப்புத்தகத்தில் தங்கள் படங்களை பதிவிட தயங்குபவர்கள் அதிவேகமாக தங்கள் படங்களை களம் இறக்குவது இங்கே தான். இது அந்த பெண் படம் திருடர்களுக்கு தெரியாது என்று நினைக்கிறார்கள் போல !
பட திருடர்கள் அதிகம் திருடுவது இங்கேத்தான்.

பெண்களின் படங்கள் திருடப்படுவது
முகப்புத்தகங்களில் சுயவிவரப்படங்களாக வைப்பதற்கும்  (Fake accounts)  உபயோகிப்பதற்கும் மட்டுமல்ல ஆபாச இனையதளங்கள், ஆபாச முகப்புத்தக கணக்குகள், ஆபாச முகப்புத்தக  பக்கங்கள் என இன்றைய இளம் சமுதாயத்தையே சீரழித்துக்கொண்டிருக்கிறதே ! அவைகள் அனைத்து படங்களும் ஆபாச பெண்களின்(தவறான வழி சென்ற)  படங்கள் மட்டுமல்ல !
இப்படி முகப்புத்தகத்தில் பதிவேற்றும் அப்பாவி  பெண்களின் படங்களும் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் இப்படி பதிவேற்றும் அப்பாவி பெண்களின் படங்களும் அவர்களின் உடல்களையும், முகங்களையும் வைத்து எடிட்டிங் செய்யப்பட்டவைகளே ஆபாச இனையதளங்களில் 70 சதவீத படங்கள்.

இதில் பிரச்சனைகளில் சிக்கி தன் படங்களை ஏதேனும் ஓர் தவறான ஆபாச பக்கங்களில் கண்ட பின்பு தான் இந்த உண்மையே அவர்களுக்கு தெரிய வருகிறது.
ஆனால் பிரச்சனை வந்த பின்பு அழுது என்ன பயன் ?

இதில் நான் தவறானவர்கள் (அனைவரும்)
என்றோ ! இல்லை சிலர் தான் கெட்டவர்கள் என்றொ எந்த நியாயம் பேச விரும்பவில்லை ! உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் சில சகோதரிகளின் புகைப்படங்களை சிலர் தவறான பக்கங்களில் பதிவிட்டு அதை நீக்க பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்.சில உறவுகளின் துனையாலே அந்த பக்கம் நீக்கப்பட்டது !

தங்கள் படங்களை சமுக இனையதளங்களில் பதிவிடுதால் மட்டுமல்ல எச்சரிக்கையோடு பாதுகாப்பின்றி இருந்தாலும். இதே நிலமைத்தான்.

கவனமோடு இருங்கள். நண்பர்களாக இருக்கலாம் ஆனால் அவர்களும் சில நேரத்தில் எதிரியாக வரும் வேளையில் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகிக்கொண்டிருக்கிறது...

எவராக இருந்தாலும் உங்கள் பாதுகாப்பு உங்களிடம் தான் உள்ளது !

ஏதோ எல்லா ஆண்களையும் குற்றாவாளி என சொல்லி என்னை நல்லவன் என சொல்லவில்லை ! சொல்வும் மாட்டேன்...
எல்லோரும் எதாவதொரு சூழ்நிலையில் தவறு செய்திருக்கலாம்... நான் சொல்லவருவது இப்படி எல்லாம் பிரச்சனைகள் இருக்கிறது உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்....

உங்கள் புகைப்படம் மட்டுமல்ல நீங்கள் நினைக்கலாம்  நண்பர்களாக இருக்கும் படம் தானே ! கணவரோடு இருக்கும் படம் தானே ! அண்ணனோடு இருக்கும் படம் தானே ! குடும்பத்தோடு இருக்கும் படம் தானே ! என்று நினைக்காதீர்கள் உங்கள் முகம் மட்டும் கிடைத்தாலே போதும் அதை எடிட்டிங் செய்து ஆபாச படமாக்கி பணம் சம்பாதிக்கும் கேடுக்கட்டவர்களோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

ஏன் உங்கள் முகம் கூட வேண்டாம். உங்கள் கண்,மூக்கு ,வாய் இருந்தாலே போதும் உங்கள் உருவத்தை உருவாக்க முடியும்...
இப்படி ஓர் பேர் ஆபாத்தான சூழ்நிலையில் தான் உள்ளோம்.

இவற்றை கேட்கும் போது ஏன் பெண்கள் வாழத்தகுதியற்றவர்களா என்று கூட மனம் ஏங்கும். ஆனால் அந்த நிலமைக்கு சில ஓநாய்களால் இன்று ஆக்கப்பட்டுவிட்டனர் என்பதே உண்மை ! ஆபாசம் என்பதே இங்கு வியாபாரம் ஆகிவிட்டது ! இவற்றை புரிந்து உங்கள் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ளுங்கள் !

அப்பாவி பெண்களின் புகைப்படங்களை வைத்து அவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொண்டிருக்கும் மானம் கெட்டவர்களே !
உன்னை பெற்றடுத்தவளும் ஓர் பெண் தான் என்பதை மட்டும் நினைவில் கொள் !

இனியும் சமூக வலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டுத்தான் இருப்பீர்கள் என்றால். ஓர் நாள் உங்கள் படம் ஏதேனும் ஓர் ஆபாச இனையதளத்தில் ஆபாசமாக  , ஆபாசமான பதிவுகளோடு பதிவேற்றப்பட்டிருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள் நன்றி !

#உங்கள்_பாதுகாப்பு_உங்கள்_கையில்

       - நெய்தல் தமிழன்
             

Monday, 19 June 2017

சிறப்பு வேலைவாப்பு முகாம் 2017

உறவுகள் இந்த நல்வாய்ப்பை பயண்படுத்தி
கொள்ளவும். நமது சமுதாய இளைஞர்களின் வேலைவாயப்பிற்காக . பரவர் நலப் பேரவை மற்றும் DMI கல்வி குழுமம் இனைந்து  நடத்தும் சிறப்பு வேலைவாயப்பு முகாம்-2017

நாள்- ஜூலை :01:2017

இடம்- ஸ்னோஸ் ஹால் , தூத்துக்குடி
(பரிசுத்த பனிமய மாதா பேராலய வளாகம் )
நேரம் - காலை 8 மணி முதல்...

தொடர்புக்கு - எஸ்.சகாயராஜ்
தொலைபேசி எண்( 9841699393)

ஜெயல்பிரிட் பர்னான்டோ
தொலைபேசி எண் ( 9841406398)

உங்களுக்கு பயண்பெறாவிட்டாலும்
வேலை தேடும் நம் இன இளைஞர்களுக்கு பயண்படலாம். Share  செய்யவும் மற்றும். உங்கள் உறவுகளுக்கு தகவலை தெரியப்படுத்தவும்.

Monday, 5 June 2017

சந்திரபாபு

" குங்கும பூவே கொஞ்சு புறாவே"

மறக்க முடியாத வரிகள்....

நகைச்சுவைச் சக்கரவர்த்தி
சந்திர குலத்தின் நாயகன்
ஐயா சந்திரபாபு...

நடிகன் என்று மட்டுமல்ல குணத்தில் பரவனின் குணம்...சற்றும் குறைந்திராது இந்த திமிர் எவரிடத்திலும்...

"மனம்கொத்தி" படத்தில் வரும் ஒரு வசனம்

நம்ம நடிகர் சந்திரபாபுவ பாரு கல்யாணம் முடிச்சி ஒரு வாரத்துல இவர் மனைவி இன்னொருத்தர காதலிக்கிறேனும் சொல்வாங்க... உடனே அவுங்க காதலிச்சவங்களுக்கே கல்யாணம் பன்னி கொடுத்திருவார்... இந்த குணம் எவருக்கு வரும்...

என்று உம் புன்னகை மறையாது... தாத்தா !

படம் உருவாக்கம் - நெய்தல் தமிழன்

இந்த படத்தின் ஒர்ஜினல் புகைப்படம் தேவைப்படுமின் தொடர்பு கொள்ளவும்...

இமெயில் - parathartv@gmail.com

Friday, 26 May 2017

மீன் கொடி பறக்க விட்ட வரலாறு

பழம்பெரும் பாண்டியர்களின் வரலாற்றை பேசும் பகுதி

(தமிழ் மண்ணின் மூத்த குடிமக்கள் பாண்டியர்கள், பழம்பெருமை வாய்ந்த அவர்களின் சிறப்பையும், பெருமைகளையும் தெள்ள, தெளிவாய் எடுத்துரைக்கிறது இந்தப் பகுதி. பல்வேறு பாண்டியர்களின் வரலாற்றை கால வாரியாக இத்தொடரில் நீங்கள் அறியலாம்)

கொற்கை துறைமுகம்

இந்த கொற்கைநகர் கி.மு. 600 வரை பாண்டியர் தலைநகராய் இருந்தது. பின்னர் நெடுஞ்செழியன் காலத்திலேயே தற்போதைய மதுரைக்கு பாண்டியர் தலைநகர் மாற்றப்பட்டது. அதன்பிறகும் இந்நகர் சிறப்புக்குன்றாமல் “பெரிப்ளூஸ்”, டாலமி காலம் வரை சிறந்த துறைமுக மற்றும் வணிக நகரமாய் திகழ்ந்தது. முத்துக்குளித்தலுக்கு இந்நகர் பெரும் சிறப்பைப் பெற்றிருந்ததை பெரிப்ளூஸின் செங்கடல் செலவு நூல் மூலமாக அறியலாம்

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். கடல் கொண்ட தென்னாட்டில் இருந்து மீண்ட பரதவர்கள் உருவாக்கியதே கொற்கை.கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிக துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பல் படைத்தளமாகவும் இருந்தது.

. சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.

கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.

புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம்.

பட்டினப்பாலை எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம்.

சிறுபாணாற்றுப்படை நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம்.

பெரும்பாணாற்றுப்படை கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.

கொற்கை வில்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

தலையாங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மதுரையில் இருந்துகொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை யெல்லாம் நிறைவேற்றி வைத்தான். கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர். முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.

அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.

மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.கொற்கைப் பகுதியில் பழையர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர். கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.

மறைந்துவிட்ட துறைமுகம் கொற்கை.

கொற்கை என்பது பண்டைய பாண்டியர்களின் தலைநகரம் என்று சங்க பாடல்கள் சான்றுக் கூறுகின்றன. கண்ணகி மதுரையை எரித்தப்போது பாண்டிய நாட்டின் மன்னராக இருந்த நெடுஞ்செழியனின் தம்பியான வெற்றிவேல் செழியன், கொற்கையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்துள்ளதாகச் சிலப்பதிகாரம் செப்புகின்றது. இந்த கொன்றை நகர் மிகப்பெரியக் கடல்துறைமுகமாக இருந்திருக்கின்றது. சீன யாத்திரிகர் ”யுவான் சுவாங் அவர்களின் குறிப்புகளில் கூட கொற்கைப் பற்றி சில செய்திகள் கூறப்பட்டிருகின்றது . ஆனால் இன்று தமிழ்நாட்டு கடற்புர மாற்றங்களால் துறைமுகமாக இருந்த இந்த நகரம் இன்று ஒரு சிற்றூராக மாறியுள்ளது. ஒருக் காலத்தில் கொற்கை நகரை நீராட்டிய கடல் இன்று 6 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது. முன்பு, கொற்கை பக்கமாகத்தான் தாமிரபரணி ஆறு பாய்ந்து கொண்டிருந்ததாம். அந்த ஆறு வழியாக, கடலுக்கு பாதை. ஆனால் இன்று, ஆறும் இல்லை. கடலும் இல்லை.

மடல் விரிந்த வாழைகள், தாரைகள் நீந்தும் குளம், மங்கையின் மார்பிலிருந்து நழுவிய சிற்றாடை போல் நெளியும் சிற்றோடை என மருதநிலத்தின் இலக்கணம் மாறாத அந்த சிற்றூர்தான் அலையடிக்கும் கடலும், நீர்யானை போன்ற நாவாய்களும், சங்கறுக்கும் ஒலியும், முத்துக்கு விலை பேசும் சத்தச் சலனமும் மிக்க நெய்தல் நிலம் சார்ந்த பட்டினப்பாக்கமாக விளங்கியதென்றால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கிறது.

இலங்கிரும் பரப்பின் எறிசுறா நீக்கி

வலம்புரி மூழ்கிய வான்மதில் பரதவர்

ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லென

கலிகெழு கொற்கை

என உயர்வு நவிற்சி இல்லாத சங்கப்பாடலே இதற்கு சான்றாக இருக்கிற பொழுது  அதை நம்பித்தான் ஆகவேண்டும்.காலத்துக்கு ஆற்றல் அதிகம். அது மானுட வரலாற்றின் பக்கங்களை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் புரட்டிப் போட்டுவிடும். மறப்போர் பாண்டியன் “அறத்தின் காக்கும் கொற்கை அம்பெருந்துறை” என அகநானூறு அடையாளம் காட்டும் பாண்டியர்களின் பழம்பதியான கொற்கை தான் இன்று மருத நிலமாக இவ்வாறு உருமாறிக்கிடக்கிறது.

கி.மு. 4–ம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ம் நூற்றாண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட நம்நாட்டுப்புலவர்களும், வெளிநாட்டு பயணிகளும் கொற்கையின் புகழைப் பாடியிருக்கிறார்கள்.