Showing posts with label பரதர் தொலக்காட்சி. Show all posts
Showing posts with label பரதர் தொலக்காட்சி. Show all posts

Wednesday, 9 August 2017

நெய்தல் பரதா !

நெய்தல் நில உறவுகளுக்கு வணக்கம் !

பார் போற்ற வாழ்ந்த இனம் பரதர் என்பதில் ஐயமில்லை !  நெய்தல் நிலத்தில் தலைமகனாக ! மீன் கொடி கட்டி
ஆண்டு பாண்டியனாக ! அதன் எச்சங்கள் இன்று பல போர்வைகள் கொண்டு மூடப்பட்முள்ளதை நம் கண் கூட காண முடியும் ! தூத்துக்குடியில் நம் கடைசி மன்னரான பரதவர்ம பாண்டியாபதி (தேர்மாறன்) அவர்களின் அரண்மனை இன்று ஒட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த வருடம் நம் பரதர் மாதா திருவிழாவிற்கு சென்றிருந்த போது அங்கே செல்ல முயன்றோம் அப்போது ஒருவர் வந்து தம்பி இது ஒட்டல் உள்ளே எல்லாம் போக முடியாது இது அரண்மனையாக இருந்தாலும் இப்போது இது எங்கள் இடம் என்றார். அந்த நொடி இதயம் சற்று கணத்தது பார் புகழ்ந்த ஐயா தொன் கபிரியேல் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியன் அவர்கள் வாழ்ந்த அரண்மனக இன்று ஓட்டலா ?  இது மட்டுமா இன்னும் எத்தனை அவர் கல்லறை கல்வெட்டு தூத்துக்குடி லசால் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சாக்கடையில் கிடந்தது உலக புகழ் பெற்ற தூத்துக்குடி மாதா தேரை கட்டியவர் இவர் தான் இவருக்கு கொடுக்கப்பட மரியாதையை நன்றாக பாருங்கள் !

இது மட்டுமா தூத்தக்குடியின் அனைத்து சமுதாயத்தவரும் போற்றும் வகையில் வாழ்ந்த தூத்தக்குடி மாநகருக்கு தண்ணீர் தந்த இராவ் பகதூர் குரஸ்பர்னாந்து நிலமையும் சொல்ப்போனால் இப்படித்தான் என்ன சிலை மட்டும் ஒரு பேருக்கு வச்சிருக்காங்க ! இந்த மாநகராட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் இவர் !

சரி நடந்தது நடந்தது நடந்து முடிந்தது தூக்கி போடுவோம் ! நான் இங்கே கேட்கும்கேள்வி ?  நாளைய நம் இனத்திற்கு நமது நன்றிக்கடன் என்ன ? நம் பெற்றோர் செய்ய மறந்ததை நாம் செய்யப்போகிறோதா இல்லையா ?

எங்கோ ஒரு மீனவன் கடலில் இறக்கிறான் என்றால் உங்களுக்கு வலிக்குமா ? வலிக்காதா ? மனம் துடிக்குமா துடிக்காதா ?

எனது கேள்விகள் அனைத்தும் இன்றைய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் என எம் வருங்கால சமுதாயத்திடம் மட்டுமே !

நமக்கு பிரச்சனைகளே கிடையாதா ?

பெரும் பிரச்சனை மீனவர் பிரச்சனை
அதை தடுக்க நம் இனம் போதாதா ? போதும் ஆனால் ஒன்றுபட வேண்டும் ! அதுதான் முடியவில்லை !

நம் சமுதாயத்தில்  படித்தவர்களே இல்லையா ? ஏன் அரசு துறைகளில் ஒருவரை கூட காண முடிவதில்லை ?

எங்கே சென்றனர் ? 

உங்களைத்தான் கேட்கிறேன் எங்கே செல்லப்போகிறீர்கள் யாரையோ சொல்வது போல் படிக்காதீர்கள் உங்களை பற்றி தான் பேச போகிறீர்கள் உங்களால் கலைக்டர் ஆக முடியாதா ? சமுதாய உணர்வு உண்டா சமுதாயத்திற்கு  எதாவது செய்யனும் என்று ஆசை இருக்கிறதா ?  அப்போம் கலைக்டர் ஆகலாமே அது இல்லாட்டி அதற்கு அடுத்து
ஐ.பி.எஸ் ஆகலாம் !  ஐ.பி.எஸ் ஆகி எதாவது உதவி பன்னலாமே இப்படி இந்த இரண்டு இல்ல ஆயிரம் இருக்கு ! அனைத்திலும் அமரலாமே ?

சரி அரசு துறை இருக்கட்டும்.

தொழில் பற்றி பேசுவோம்.

நம்ம ஆட்கள் ஒரு தொழில் செய்றாங்க ஒரு வியாபாரம் அதற்கு நம்ம ஆதரவு அளிக்க வேண்டுமா ? கூடாதா ? அங்கே என்ன பொருள் வச்சிருக்காரோ அந்த பொருள நம்ம ஆட்கள் கிட்ட போய் வாங்குங்க ! அப்போம் தான் தொழில் துறையிலும் முன்னேற முடியும்  !

அடுத்து திருமணம் !

இது தான் நான் பேசுன அந்த எதிர்காலத்தற்கு அஸ்திவாரம் இதை ஒழுங்கா போட்டாத்தானே ஏதிர்காலம்னு ஒன்னு இருக்கும் இல்லன்னா இல்லாமலே போகும் !

சகோதரர்களே ! சகோதரகளே !

இதைப்பற்றி பல பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.அதனால் சுறுக்கமாகவே கூறுகிறேன். தயவு செஞ்சி கலப்பு திருமணம் செய்யாதீங்க காதல் உங்க கண்ண மறைக்கும் கொஞ்சம் சிந்திங்க ! நீங்க பிறந்து வந்த இனத்த ! இது வாழனுமா ?
அழியனுமா ?

பிரச்சனைகளை பற்றி பேச வேண்டுமென்றால் பேசிக்கிட்டேத்தான் இருக்கனும் இப்படி !

நம் சமுதாயத்தின் நாளைய மாற்றம் இன்றைய இளைஞர் கூட்டம் ! அதிலும் முதன் முதலாய் எம் சகோதரிகள் கூட்டம் !

நீங்களின்றி நம் இனம் மாறாது !

நடந்ததை மறப்போம் ! நாளை நல்லதென அமைப்போம் !
சிறுதுளி கடலாய் இணைவோம் !

எம் பரத குல இளைஞர் , இளம்பெண்களே !
விழித்துக்கொள் ! நாம் நம் இனத்திற்காக செய்ய வேண்டிய கடமை நமக்கு உண்டு !
தூக்கிவிட வேண்டிய பொறுப்பும் உண்டு !

ஒன்றுபடுவோம் !  வெற்றிப்பெறுவோம் !

உங்கள் அன்பு சகோதரன் !

நெய்தல் தமிழன் !
     - இருதய ஆஸ்ட்ரோ.த

Monday, 5 June 2017

ஜே.பி.சந்திரபாபு

"நகைச்சுவை சக்கரவர்த்தி"
திரை உலகில் மறைந்தாலும்
எங்கள் மனதில் மறையாது
உங்கள் உருவம் !
சந்திரபாபு... 
இப்பெயரை கேட்டாலே உள்ளமெல்லாம் ஓர் நிமிடம் பரவசமாகிவிடும்...

நெய்தல் தமிழனின் உருவாக்கம்...
ஐயா ஜே.பி.சந்திரபாபு அவர்களின்
புகைப்படம்...

ஓர் நடிகர் மட்டுமல்ல... சுதந்திரபோராட்ட வீரர் ஜே.பி ரொட்ரிக்ஸ் அவர்களின் புதல்வர் என்பது நம்மில் பலர் மறந்த ஒன்று !

நாம் வென்றாக வேண்டும்...
அதற்கு நாம் ஒன்றாக வேண்டும்...

இந்த புகைப்படம் (Orginal Image) வேண்டுமென்றால் எங்கள்  இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்...

Email: parathartv@gmail.com

Monday, 8 May 2017

தென்கழியில் கித்தேரி சங்கீத சபாவில் புகுழும் பரதர் குலம் !

தென்கழி புனிதை
புதுமைகளின் அரசி தூய கித்தேரியம்மளின்
சங்கீத சபா ! பாடல் !

"பாரதம் பரதரைப் போற்றணுமே
பரதவர் பாரினில் புகழ்சிறக்க
உழைப்பவர் யாருக்கும் அடிமையில்லை.."

இது புனித கித்தேரியம்மாள் சங்கீத சபாவின் 2015 ஆம் ஆண்டு பாடல் !

தாய் தேரினில் வரும் போது பாடிய பாடல்
இது தான் !

எங்கள் கித்தேரி தாயிடம் தேர் வலம்
வரும் பொழிதினிலே மன்றாடி கேட்டோம்  !

இப்பரதர் குலம் புகழ் பார் எங்கும் பரவ வேண்டும் !
இப்பரதர் குலம் ஒற்றிமையோடு திகழ வேண்டும் !

என்று !

தாய்  அருள் புரிவாள் !

இச்சமுதாயம் மாறும் !

இந்த வருடமும் இப்பரதர் சமுதாயத்தாயம்
புகழ் போற்றி !! இப்பரதர் குலம் ஒற்றுமை வேண்டி பாடல் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் !

புனித  கித்தேரியம்மாளே !
எங்கள் குலம் காத்தருளும் !
இப்பரதர் குலத்திற்கு ஒற்றுமை கொடுத்தருளும் !

Thursday, 26 January 2017

சி.சி தொன் சூசை அந்தோணி தெக்ருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன்

சி.சி தொன் சூசை அந்தோணி தெக்ருஸ் வாஸ் பல்தான் பரதவர்ம பாண்டியன்

கி.பி 1839-1856

"தென்னவற்  பெயரிய துன்னருக் துப்பிற்

தொன் முதுகடவுட் பின்னர்மேய

வரைந்தாழருவிப் பொருப்பிற் பொருக"

மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தர கடவுளின் வழியில் தோன்றிய நெடுஞ் செழியன்  என மதுரை காஞ்சியில் கூறப்படும் பரதர் குலத்தவரைப் போல பராக்கிரம் பொருந்திய மாவீரம் கொண்டவனாய்
திகழ்ந்தான் இப்பரத குல கோமாண் தொன் சூசை அந்தோணி என்க.

இவ்வரசன் மன்னார் பகுதியில் முத்துசுலாபம் ஒன்றைக் கட்டி தன் தம்பி !   தொன் சவேரியாரை அந்த முத்து சுலாபத்தை நடத்தும்படி கொடுத்தார்.

இவ்வரசன் அரிப்பில் உள்ள அல்லி யரசானி மாளிகையில்  சுலாபத்தை சிறப்புர நடத்தி புறப்படும் வழியில்
நோய் வாய்ப்பட்டு திருமந்திர நகரை
அடைந்து சில தினங்களில் இயற்கையை எய்கிறான்.

இம்மண்ணனின் காலத்தில் தான்
தூலுஸ் இயேசு சபை குருக்கள் இப்பரத நாட்டில் வந்து அடிகோளென்றினர். அன்று முழைக்கப்பட்ட இந்த வேத இரட்டை ஆட்சியால் பரத குலம் பிளவுட்குட்பட்டது !  பரத நாட்டில் வந்த இயேசு சபை குருக்களார் தூத்துக்குடியில் திரு இருதய கோவிலைக்கட்டினர். அக்கோயில் நிலமும் அதனை சுற்றியிள்ள  விளை நிலமும் உள்ளூர் சாதித் தலைவனார்
வியாகுல மோத்தா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது !
இம்மாற குல வேந்தனுக்கு ஒர் ஆண் மகன் பிறந்தான் !  அந்த மன்னவன் சின்னுள் வாழ்ந்து அமரர் நாடு சென்றான். ஆனது பற்றி வருத்தமுற்று தனக்கு மின் மணி முடி சூட  தனுக்கு பின் மகனில்லாத குறை கொண்டு.
மன வேதனைக்கொண்டு தனக்கு பின் தன் அரசை ஆள தொன் கபிரியேலுக்கு வழங்கி இவ்வரசன் 1856  ஆம் ஆண்டு இவ்வரசன் விண்ணில் எய்தினான்.

வரலாறு அனைவரும் தெரியவேண்டியது கட்டாயம் !
வரலாறு இழந்தால் அழிக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தம் !

தமிழன் என்று பெருமைப்படுவதற்கான காரணம் என்ன ? தமிழரின் வரலாறே காரணம் அத்தமிழர் வரலாற்றில் பாதி பெருமை தந்தது நம் பரத குலமே !

கடலில் கப்பல் கொண்டு நாம் பயணிக்காமலிருந்தால் !
தமிழன் தமிழ்நாட்டை தவிர
கடல் தாண்டி கால் பதித்த பெருமைகள் கிடைத்திருக்காது !

கடலிலே வணிகம் கொண்டு இந்நாடு செழித்திருக்காது !

முத்தெடுத்து பரதர் படைக்காமலிரிந்தால்  முத்தமிழ் சங்கம் கட்டிய பாண்டிய நாடு செழித்திருக்காது !

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ! தமிழனின் பெருமைக்கு மூலக்கராணமாய் அமைந்த பரத குலத்தின் பெருமைகளை !

இந்த காலம் நாம் ஒற்றுமையுடன் ஒன்று கூடி வென்று காட்ட வேண்டிய
காலம் இது ! பரதா !

இன்று ஒன்று கூடாவிடில் நாளை ஒன்று கூட நினைத்தாலும் ஒன்று கூட உன் இனம் இருக்காது

Thursday, 29 December 2016

சி.சி.தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவி ஆட்சி செய்த காலம்( கி.பி.1562-1565)

ஏழுகடற்துறை வேந்தனாகிய சி.சி தொன் மிக்கேல் ஜொவாம் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியனுக்கு  (ஆட்சி செய்த காலம்
கி.பி 1553- 1562 ) ஒரே மகளாகிய சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவி . சி.சி தொன் மிக்கேல் ஜொவாம் தெக்ருஸ் பரதவர்ம பாண்டினுக்கு மகன் இல்லாதமையால் ஏழுகடற்துறைப் பாண்டிய அரசியாய் இக்கோமகள் 1562  ஆம் ஆண்டு அரியனை ஏறுகிறாள். நம் பரத குல அரசி.தன் மகனாகிய அர்சுனனுக்காய் பாரதப் போர்களத்தில் நின்று போர் செய்த சித்திரவாகனனின் மகளாகிய "அல்லிராணி" போன்றவளாய் மாவீரம் பொருந்தி ஆட்சி செய்கிறாள் பாண்டியதேவி.வீரம் மட்டும் கொண்டவளாக இல்லாமல் பார்ப்போர் எல்லாம் வியங்கும் வண்ணம் விண்ணில் வாய்ந்த மின்னலுக்கு உருவம் கொடுத்து இம்மண்ணில் பெண்ணாய் படைத்துவிட்டனரோ என்று அனைவரும் வியக்கும் வண்ணம் அழகெல்லாம் ஒன்றாய் அமைந்த குமரி குல மகளாய் ஒளிர்கிறாள்.

" உட்கட்டுத்தாலி உருக்குமணி ஆபரணம்
கைகட்டுப் பவளம் கரண்டைக்காய் சீதனங்கள் "

எனப் புகழேந்தி புலவர் புகழ்ந்திருக்கிறார்.
மஞ்சுதருப் பரவர் மகளிர் மீன் வணக்கமுடையவரானதுபற்றி மீன் வடிவமுள்ள ஆபரணங்களையும் அணிந்து வந்தனர்.ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இம்மஞ்சுதருப் பண்டைப்பரவர் மகளிர் அணிந்திருந்த உருக்குமணியின் ஓர் பாகமாகிய தங்கவளையங்கள் சிந்துவெளிப் புதை பொருளிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இத்தங்க வளையங்களைத் தமிழ்நாட்டு மகளீர் வடிகாதுகளில் அணிந்து கொள்ளும் வளையங்கள் என்கின்றனர் வித்வான் திரு.இராச மாணிக்கம் பிள்ளை , பி.ஓ.எல் ;எல்.டி.., எம்.ஓ.எல் அவர்கள்  ஆனால் அத்தங்க வளையங்கள் உருக்குமணியின் ஓர் பாகமாக இருக்கின்றன.உருக்குமணி என்பது ஓர் சுவர்ணக் காதணி, சுறாவின் வடிவம், சந்திரனின் சொருபமும் அதிற் பொருந்தியிருக்கும் எனகிறார் பரத குல பழமை நூலாசிரியர். ஆசிரியர் ஜே.பி இரட்லர் உருக்குமணியை மகர குண்டலம் என்பர்.மகர குண்டலம் என்பது ஓர் சுறாவின் சொருபத்தைக்கொண்ட காதணி என அவரது அகராதியில் தீட்டி வைத்தார்.
இவ்வாறு எழில்வாய்ந்த பைம்பொண்ணால் இழைத்த சுறாவின் வடிவங்கொண்ட இந்த உருக்குமணியின் தோற்றம் கலைபதினாறு கொண்ட சந்திரனை மின்னுகின்ற இருமீன்கள் தொழுதுகொண்டிருந்த பான்மையை நிகர்க்கு கூறியிருந்திருப்பாரோ புலவர் புகழேந்தி. இவ்வரசியின் அணிகலன்களில் இவள் சந்திரகுலத்திற்கான அணிகலன்கள் என எடுத்துரைக்கின்றன.

12 ஆம் நூற்றாண்டு காலத்தில் சந்திரகுல பரதர் பாண்டியரின் 62 ஆம் வாரிசான சத்துருனாத பாண்டியனின் தாசி வயிற்றிலிருந்து பிறந்த வீர பாண்டியன் பூர்விக பாண்டிய வம்சத்தாரை அழிக்க தொடங்க பூர்விக பாண்டிய வம்சத்தார் பரத குல பாண்டியர் தென்பாண்டி நாட்டின் கடலோரத்தில் குடிபெயர்கின்றனர் மதுரைவிட்டு தங்களு பூர்விக பாண்டிய குடிபெருமையை இழந்தாலும் தென்பாண்டி நாட்டில் தனியாட்சி நடத்த ஆரம்பிக்கின்றனர்.பின் தாசி வயிற்றிலிருந்து பிறந்த பாண்டிய அரசனான வீரப்பாண்டியனை பரதர் குலத்தவர் எதிரியாகவே பார்க்கின்றனர் அவன் தலைமுறையையும் அரசனாக மதிக்கவில்லை இதுவே  "தென் பரதர் போரேறே "  என்று பாண்டியன் நெடுஞ்செழியனை புலவர் புகழ்வது. பரதர் பாண்டியரை எதிர்ப்பதும் பாண்டியருக்கு
கோபம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் பரதரை போரிட்டு வெல்வதும் அதற்கு சினம் கொண்ட சிங்கங்களை போன்ற பரதர்களை எவருக்கும் அடங்காத பரதர்களை அடக்கிய மாவீரன் பாண்டியன் என்று நெடுஞ்செழியனை புகழ்கின்றனர் புலவர்.இதுவே வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகிறது... பூர்விக பாண்டிய வம்சத்தார் பரதர் பாண்டியருக்கு எதிரிகள் ஆனது இப்படித்தான்.அந்த வீரப்பாண்டியன்  முதல் 12 ஆம் நூற்றாண்டு முதல் பரதர் குலத்தவர் பாண்டிய ஆட்சிக்கு உட்படாது தனி ஆட்சிக்குட்படுகின்றனர்.

இந்த வரிசையில் சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவியின் 15 ஆம் நூற்றாண்டு ஆட்சிக்காலத்தில் மதுரை ஆண்ட விசுவநாத நாயக்கன் பரதர் மீது படையெடுக்கிறான்.இவன் படையெடுப்பதற்கு காரணம் பூர்விக பாண்டிய குலத்தாரான பரதர் வீரப்பாண்டியன் ஆட்சி முதலே தனியாட்சி மேற்கொண்டு பாண்டிய ஆட்சிக்கு உட்படாது இருக்கின்றனர் இது தொடரவே
விசுவநாத நாயக்கனையும் இவர்கள் மதிக்கவில்லை இதுவே போருக்கு காரணமாகிறது. இப்போரில்  ஏழுகடற்துறையின் பரத குல போர்படை சேனைகளும், பரத கப்பற்படைகளும் ,போர்ச்சுக்கல் நாட்டு சேனைகளும் போருக்கு ஆயுத்தமாகின்றன. காலம் காலமாக பரதரின் பங்காளிகளான மறவர் செம்பொண்ணுட்டு தேவர் எனும் ஆப்பனூர்
மறவர் சேனைகளும் ஆயுதங்களோடு பங்காளிகளுடன் (பரதர்) ஆர்பரித்து போருக்கு ஆயுத்தமாகின்றன.மீனவன் நெடுஞ்செழியன் படைவீரர்களான நாகை பரதவர் படைகளும் கப்பற்படைகளோடு இனைந்து கர்ஜிக்கின்றன.பாண்டியதேவியும் போருக்கு ஆயுத்தமாகிறாள் பரத குலம் காக்க ! இப்பெருஞ்சேனை படைகளுக்கு தலைவனாய் மாறகுல சேகரன் லூயிஸ் எஸ்தோவான்பீரிஸ் என்ற மாவீரன் போர் முன் நின்று தலைமை தாங்குகிறான். பாண்டியாபதி என்ற இராச அரண்மனை பாண்டியாபதி தீவுக்கு மாற்றப்படுகிறது.யுத்தம் ஆரம்பிக்கிறது பரத குல சேனைகளும் விசுவநாத நாயக்கனின் சேனைகளும் மோதுகின்றன. போர்களம் இரத்த களமாய் மாறுகிறது. மாறகுல சேகரன் வழியில் பரத சேனைகள் நாயக்க படைகளை இரத்த வெள்ளத்தில் ஓட செய்கின்றன. நாயக்கர் படைகள் தோல்வியை தழுவுகிறது. மீண்டும் விசுவநாத நாயக்கன் பரதர்களை எப்படியேனும் வென்றாக வேண்டும் என்ற தீர்மானத்தோடு
அப்போதைய விஜயநகர அரசிடம் உதவி கோர்கிறான். பின் விஜயநகர போர் படைகளோடு மீண்டும் பரதர்களோடு போர் புரிய வருகிறான் இங்கோ பரதர் சேனைகளும் பங்காளி மறவர் சேனைகளும்
போர்களத்தில் வெற்றி வாகை சூடி மீண்டும் வாகை சூட ஆர்பரிக்கின்றன.மீண்டும் விசயநாத நாயக்கன் விஜயநகர போர்படைகளுக்கும் பரத சேனைகளுக்கும் போர் மூள்கிறது. பரத கப்பல் படைகளுடன் மோதிய விஜய நகர போர் படைகள் போர் புரிய வலிமையற்றவர்களாகவே பின் வாங்குகின்றனர் மீண்டும் விசுவநாத நாயக்கன் தோல்வியை தழுவுகிறான். மிஞ்சிய சேனைகளோடு ( போரில் பரத படையோடு போரிட்டு மாண்டு)  மதுரைக்கு ஓடி உயிர் பிழக்கிறான். வெற்றி!  வெற்றி !!
என்று பரத சேனைகள்  சிங்கத்தின் உருவம் கொண்டு கர்ஜிக்கின்றன.
போரில் வென்ற பாண்டியதேவி போரில் தலைமை தாங்கிய தன் தாயின் உடன்பிறந்தவன் மகனை ( தாய் மாமா மகன்)  மாற குல சேகரன் லூயிஸ் எஸ்தோவான்பிரிஸ் என்ற மாவீரனை மணந்து அம்மாவிரனை அரசனாக்கிறாள்.

"யுத்தத்தில் திறமையுள்ளோர் வெற்றியும் திறமையில்லாதவர் தோல்வியுமுறுதல் இயற்கையே "

ஆனால் ஒரு பெண் ஆளுகையின் போது மதுரை நாயக்க மன்னன் விசுவநாத நாயக்கன் படையெடுப்பு அரசநீதிக்கு முறையன்று.ஆனாலும் எதிர்த்து போராடி போர்களத்தில் வென்றிகண்ட வீர மறத்தி பரத குல பாண்டியதேவியின் வீரம்  தமிழக வரலாற்றில் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை ஆனால் ஏனோ அவை பொண் எழுத்துக்களால் அல்ல வரலாற்றிலே மறைக்கப்பட்டது.

அது மட்டுமின்றி பரதர் இனம் கூட மறந்தது.
இப்படி 15 ஆம் நூண்றாண்டிலே போர்களம் கண்டு வென்றி கொண்ட நம் பரத குலகுமாரி நம் முப்பாட்டி சி.சி தொன் மரியமர்கர்த் தெக்ருஸ் பரதவர்ம பாண்டியதேவியின் உருவம் கூட முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பது மிக வருத்தமலிக்கிறது.... காலம் வெனற நம் முப்பாட்டி வீர மறத்தி பரத குர பேரரசியின் வரலாறுகளை மீண்டும் எழுதுவோம் பொண் எழுத்துகளால் மட்டும் அல்ல நம் இரத்த எழுத்துகளால் இனம் காக்க போரிடிய நம்
ஆத்தாளின் வீரத்துக்கு மரியாதை செய்வோம் நம் ஆத்தாளின் படத்தை சீராய் உருவாக்கி நம் அரசியின் விரத்தை ஓர் நாளில் நினைவு கூறி வீர வணக்கம் செலுத்துவோம்....

வரலாற்றை இழந்த இனத்தால்
வரலாற்றில் வாழ முடியாது !
மீட்டெடுப்போம் நம் வரலாறை !!
சங்கே முழங்கு எம் பரத குல பெருமைகளை கொண்டு !!!
                      - இருதய ஆஸ்ட்ரோ பரதர்.த
                                           கூத்தன்குழி

Saturday, 3 December 2016

பரத மாவீரர் நாள்...

இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து
மறைக்கப்பட்ட பரதர் இனம் தனது அதிகாரத்தையும்,உரிமையையும் இழந்து
கிளர்வுற்று மீண்டெடுழுந்த போர்களம் தான்
வெடலைப்போர்களம் கி.பி 1535

சங்ககாலம் தொட்டே முத்தெடுத்தலும்,
சங்கறுத்தலும்,மீன் பிடித்த்தலும் தனது
பிறப்புரிமையாக கொண்டி கடலை ஆண்டு
மன்னார் வளைகுடாவில்  மீன் கொடி கட்டி
ஆண்டவர்களே பரதவ பாண்டியர்கள்.
கி.பி 1534  அப்போது பாண்டிய அரசு
தன் அரசாட்சியை விஜய நகர பேரரசிடம்
பறி கொடுத்திருந்தது.அவர்களிடம்
அரேபியர்களும்,மூர் இனத்தவர்களும்
நயவஞ்சகமாக பொன்னும் பொருளும் கொடுத்து காலம் காலமாக பரதர்களுக்கு
உரிய மன்னார் வளைகுடாவை குத்தகைக்கு
வாங்கினார்.மற்றும் மூர் இன முஸ்லிம்கள்
தூத்துக்குடியில் குடியமர்த்தப்பட்டனர்.

பரதர்களிடம் வரி என்ற பெயரில் தங்கள்
கொடுமைகளை ஆரம்பித்தனர். அடங்க மறுத்த பரதர்கள் சிரம் அறுக்கப்பட்டனர்.
இந்த வேளையில் கடற்கரைக்கு பணியாரம்
விற்க சென்ற பரத பெண் ஒருத்தியை
மூர் இனத்தவன் ஒருவன் கேளி செய்ய
அவள் அவன் கண்ணத்தில் அறைகிறாள்.
கோபமுன்ட மூர் இனத்தவன் பரத்தியின்
காதை அறுத்துவிட வெகுண்டது போர் களம். பரதர் இனத்தவர் சினம் கொண்டு
சிங்கமாய் சீறுகின்றனர் . 100 க்கும் மேற்பட்ட மூர் இனத்தவர்களை
வெட்டி இரத்த வெள்ளமாக்கினர்.
இதுவே பரதர்களின் இன அழிவுக்கு
அடித்தளமாக அமைகிறது.

மூர் இனத்தவர் பகிரங்கமாக ஒரு
அறிவிப்பு அறிவிக்கின்றனர்.பரதர் தலை ஒன்றுக்கு ஐந்து ருபாய் என்று அறிவிக்க
மூர் இனத்தவரும்,நாயக்கர்களும் பரதர்களை
வெட்டி சாய்க்க ஆரம்பித்தனர்.மூர் இனத்தையும் நாயக்கர்களையும் ஒரே மூச்சில் அழிக்கும் வீரம் இருந்தாலும் அந்தகாலத்தில் அவர்களிடம் இருந்த
நவின துப்பாகிகள் நம்மிடம் இல்லை
நம்மிடம் இருந்தவை வாளும்,ஈட்டியும்,இது போற்று இரும்பு ஆயுதங்கள் தான் இவைகள் துப்பாக்கிகளின் முன் செய்வதறியது நின்றுவிட்டன.அனைத்து பரதர் ஊர்களும் இரத்த வெள்ளங்களில் ஆறாய் ஓடுகிறது.
ஊருக்குள் காலடி வைத்தால் பரதர் தலைகள்
எங்கும் சிதறிகிடக்கின்ற நிலமை வர வியந்த மூர்கள் பணம் கொடுத்து முடியாமல் பணத்தை ஐந்திலிருந்து ஓன்றாக குறைக்கிறான் அப்போதும் இரத்த வெள்ளம்
குறையவில்லை.அந்த காலத்தில் பரதர் தலைவனராக இருந்த விக்கிர ஆதித்ய பாண்டியன் தன் இனத்தை எப்படி காப்பாற்ற
என்று செய்வதறியாமல் தவித்து கண்கலங்குகிறார்.*ஆனாலும் இத்தகைய
துண்பங்களை அணுபவித்த போதிலும்
கடலை விட்டு கொடுக்கவோ,எதிரிகளின்
காலில் விழுந்து இழந்த உரிமைகளை மீட்கவோ மனம் வரவில்லை இந்த பரதர் சமுதாயத்திற்கு "வாளோடு போரிட்டு வீழ்ந்தாலும் வீழ்வோம்,வாளுக்கு அடிபணிந்து வீழ்ந்து விடமாட்டோம்" என்று
உறுதியாய் இருந்தனர்.

இந்த சமயத்தில் தான் ஏற்கனவே மூர்களால்
சித்திரவதை அணுபவிக்க பட்டு தூத்துக்குடிக்கு தப்பி வந்து விக்கிரம ஆதித்ய் பாண்டியனால் பாதுகாத்து வந்த
டாம்ஜோன் குருஸ்.தன்னை காப்பாற்றிய விக்கிரம ஆதித்ய பாண்டியனுக்கு நன்றிகள் கூறி மேலும் பரதர் இனத்தக காக்க ஒரு வழி கூறுகிறார்.அவருடன் சேர்ந்து சாதித்தலைவரும்,ஏழு ஊர் பட்டங்கட்டிமார்களும் சேர்ந்து கொச்சிக்கு
பணம் மேட்கொள்கின்றனர்.

அங்கே போர்ச்சுகீசிய ஆளுமையில் இருந்த துறைமுக கோட்டையில்  கேப்டன் பெட்ரோ
வாஸ் மற்றும் விக்கர் ஜெனரல் மைக்கேல் வாஸை சந்தித்து ஆதரவு கேட்கின்றனர்.
அதற்கு அவர்கள் பரதர் கிறிஸ்தவ மதம் மாறினால் இன்னொரு சக கிறிஸ்தவனுக்கு
உதவுவதை யாரும் எங்களிடம் கேட்க முடியாது மற்றும் நாங்கள் இல்லாவிடில் இறைவன் காப்பாற்றுவார் என்று சொல்லி
நம்பிக்கை கூட்டி மதம் மாற சொல்கின்றனர்.
பரதர் சாதித்தலைவனார் விக்கிரம ஆதித்ய பாண்டியனும் எதிரியின் காலில் விழுந்து
உயிர் வாழ்வதை விட மதம் மாறலாம் என்று
உடனே மதம் மாற முடிவு எடுக்கிறார்.

இதை அறிந்த மூர் இனத்தவர் அதிர்ச்சியுற்று
பொன்,பொருள்,முத்து,20,000 பணம் என 
கேப்டன் பெட்ரோவாஸை சந்தித்து பரதருக்கு உதவாதீர்கள் என்று கூறுகிறார்கள் அதற்கு அவர் "காலம் காலமாக இந்த கடலை ஆண்டவர் யார் என்பதும் தெரியும், இங்கு நடந்த அணிதீகளும் தெரியும் ,நடக்க போதும் தெரியும் பரதர்கள் மதம் மாறுவதை யாரம் தடுக்க முடியாது என்று கூறுகின்றார்.

உடனே பரதர் மதம் மாறுகின்றனர் சுமார்
20,000 பரதர்கள் உலகிலேயே ஒருவர் சொன்ன வார்த்தைக்காக ஒரு இனமே (20,000 பேர்)  மதம் மாறியது பரதர்களை தவிர வேறு யாரும் இல்லை. அதன்படியே
1537 ஆம் ஆண்டு  பாதிரியார்கள் ஒரே நாளில் ஒவ்வொரு பரதர் ஊராய் சென்று
திருமுழுக்கு கொடுத்தனர். பரதர் அனைவரும் கடலில் மூழ்கி  திருமுழுக்கு பெற்று அன்றே அனைவரும் மதம் மாறுகின்றர்.

அந்த நாள் தான் விபுதி புதனுக்கு முன் நாம்
கொண்டாடும் சாம்பல் திருநாள்.அதுதான்
ஒட்டு மொத்த பரதர்களும் கிறிஸ்தவம் மாறிய நாள்.அன்று முதல் பரதர்கள் பக்தியில் அதிகமாகி தாங்கள் பரதர் என்று சொல்வதை விட தான் கிறிஸ்தவன் என்பதை சொல்வதை பெருமையாக நினைக்க ஆரம்பித்தனர் அதுவே (இன்றைய நிலைமைக்கு காரணம்).

பின்னர் போர்ச்சுகீசியர்களின் வாக்குறுதிபடியே மதம் மாறிய பின்னர்
போர்ச்சுகீசிய படைகள் அணுப்பிவைக்க படுகின்றனர்.அன்று சில வருணங்களாக
முத்தெடுப்பதிலும்,மின் பிடிப்பதிலும்
பிரச்சனைகளை கொண்டிருந்த பரதர்
மீண்டும் இயல்பு நிலைக்கு ஆரம்பிக்கின்றனர்...
ஆனால் இந்த நிம்மதி நிலைக்கவில்லை...
போர்ச்சுகீசிய படைகள் பெரும்பாண்மை
மீண்டும் நாடு திரும்மி சில கப்பல் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகின்றனர்.
இந்த சமயத்தில் மூர்கள் மீண்டும்
2000 படை வீரர்களுடன் பரதர் ஊர்களை
சூறையாடினர் தடையாக இருந்த சில
போர்ச்சுகீசிய கப்பல்களை தகர்த்தெறிந்தனர்.மீண்டும் பரத ஊர்கள்
இரத்த வெள்ளமாய் ஓடினர்.
விவரம் தெறிந்த போர்ச்சுக்கல் படை
கிளம்பினாலும் காற்றின் காரணமாக வர முடியாமல் திரும்புகின்றனர்.

இதை கேள்விப்பட்ட மூர் இனத்தவன்
கடற்கரையிலே நின்று கொண்டு கொக்கருக்கிறான்."மன்னார் வளைகுடாவின் மன்னர்கள் பரதர்கள்" இப்போது மண்ணுக்குள்ளே.சுல்தானின் படைகள் வருகின்றன,நாயக்கர்களின் படைகளும் வந்துவிட்டன இனி இந்தியாவே நமக்கு கீழே.பரதர்களையே வீழ்த்திய பிறகு இங்கே யார் இருக்கா நம்மை வீழ்த்த.என்று கடற்கரையிலே பேசிக்கொண்டே இருக்கிறான்.

ஆனால் திடிரென்று வீரமும்,விஞ்சானமும்
சேர்ந்து விட்டது.ஆம் போர்ச்சுகீசிய படைகள் 12 கப்பல்களில் 600 வீரர்கள்
வருகின்றனர்.வந்து கடற்கரைக்கு சென்று பார்கின்றனர் .அங்கு  இருந்தது பெண்களும் ,இளைஞர்களும் கனவனை இழந்த பெண்கள் தங்கள் மகனை இனம் காக்க போருக்கு அணுப்பினர் புறுனாநுற்று வீர கதைகள் அங்கே நடந்தது.

மீதம் இருந்த அனைத்து பரதர்களும் *தற்கொலை படையாய் மாறினர்* நாம் அழிந்தாலுத் நம் இனத்தின் அடுத்த தலைமுறையாவது இந்த மண்ணில் உரிமையோடு வாழ வேண்டும் என்று.இங்கே பரதரின் வீரமும்,போர்ச்சுகீசியரின்
வெடிகுண்டுகளும் ஒன்று சேர்ந்து புது
இரத்த சரித்திரம் எழுதுகிறது.

புன்னக்காயலில் உள்ள விக்கிரம ஆதித்ய பாண்டியனன்  - கீழக்கரை நம் பங்காளி மறவர்களுக்கு அவசர செய்தி சொல்ல
மறவர் கூட்டம் போர்களத்திற்கு விரைகின்றனர்.

வெடலையில் அடும் கொட்டமும்,நாயக்கர்களின் நயவஞ்சகமும்,
பார்த்து மீசை துடிக்க,புஜங்கள் துடிக்க,
இரத்தம் சூடேறி வாழ்வா ! சாவா !! போரிட்டு பார்த்துவிடலாம் என்று பரதர்களும் பங்காளி மறவர்களும் சேர்ந்து தரைவழி போர்களத்திற்கு தயராகினர்.

மறவர் சொந்தங்கள்  தரைவழி போருக்கு தயாராகவும்,காலம் கடந்தால் கடற்கரை உள்ளே நுழைந்து போர் செய்யவும் தயார்
நிலையில் இருந்தனர்.

இரண்டாவது நமது பரத குல முத்துக்குளிப்பார்களை கடலில் மூழ்கி
நாயக்கர் கப்பல்களில் ஏறி போர் ஆரம்பிக்கவும் கப்பல்களை கொழுத்தவும்
ஆணையிட்டனர்.

மூன்றாவது எதிரி கண் விழிப்பது நமது
துப்பாக்கி முனையிலும்,வாள் முனையிலும் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

யாரும் பின் வாங்க கூடாது நெஞ்சை நிமிர்த்தி காட்டி முன்னேர வேண்டும்.
நாம் திரும்பி வந்தால் அது வெற்றியாக மட்டும் தான் இருக்க வேண்டுமே தவிர
வேறும் எதுவுமாக இருக்க முடியாது
நம் சந்ததிகள் வாழ நம் உயிரை கொடுப்போம் என்று சபதம் எடுத்து கிழம்பினர்.

அன்று தான் துப்பாக்கியை பரதர் கையில் கொடுத்து சுட சொன்னார் கேப்டன் மார்டிம்.
பரதர் எப்படி சுட என்று தெரியாமல் விழித்த போது சாதித்தலைவனார் சொன்னார் கடலில் மாரியாவிலே வரும் சுறாவை
வேல் தூக்கி குறிப்பார்த்து எறிய தெரிந்த பரதருக்கா குறிபார்த்து சுட தெரியாது.
சுட்டாபாருங்கள் தெரியும் என்று.
அன்று ஒலே நாளில் காலை முதல் மாலை வரை பரதர்கள் பயிற்சி எடுத்து போர்ச்சுகீசியலை காட்டிலும் துப்பாக்கி சுடுவதில் வல்லுனர் ஆகினர் என்பது வரலாற்று உண்மை.அன்றே நாட்டு வெடிகுண்டு சுத்தவும் எறியவும் கற்றுக்கொண்டர் பரதர் இனம் காக்க.

ஜனவரி 29 மாலை சூரியன் மறைந்தது.
பரதர்கள் விடிவதற்கு காத்திருந்தனர்.
முத்துக்குளிப்பவர்களும் கடலில் மூழ்கி கப்பலுக்குள் பதுங்கி இருந்தனர்
விடியலுக்காக. அன்று ஒரு நாள் இரவு (ஜனவரி 29 1537 அன்று ) ஒட்டு மொத்த பரதர் இனமும் இனத்தின் மீட்சிக்காக யாரும் உறங்காது போருக்கு ஆயுத்தமாகி கொண்டிருந்தனர் .பெண்கள்  வெற்றிக்காக இறைவனிடம் ஜெபம் செய்தனர்.

ஜனவரி 30 1537 சூரியன் உதித்தது.
மூன் இனத்தவர்கள் அதிச்சியுற்றனர்.
பரதர் துப்பாக்கி முனையில் மூர் இனத்தவர்
அகப்பட்டு விட்டனர்.முன் வரிசையில் பரதர் இளைஞர்கள் துப்பாக்கிகளோடும்,பின் வரிசையில் போர்ச்சுகீசிய படைகளும்,பரதர்களும் சென்றனர்.மூர் இனத்தவர் கண் மூடி திறப்பதற்கு முன்
இரத்தம் கொதித்து கொண்டிருந்த பரதர்
மூர் இனத்தை கடலில் இரத்த வெள்ளத்தில்
ஓட விட்டனர்.போரில் சில பரதர்களும் துப்க்கி சூடில் உயிர் இழந்தனல் ஆனால் வெற்றி கண்டது பரதர் இனம் மீண்டது..!!

நம் பரதர் இனம் காக்க அன்று இரத்தம் சிந்திய வரலாறு .....
ஒவ்வொரு  வருடமும், நமது ஞாறத்தந்தை
சவேரியாரின் திருவிழா (டிசம்பர்-03) போது போரில் இறந்த பரதர் மாவீரர்களுக்கு
அஞ்சலி செலுத்துவது.அவர் வீரத்துக்கு
மரியாதை செய்வது திருவிழா திருப்பலி
முடிந்து அஞ்சலி செலுத்துவது வழக்கமாகவே இருந்தது பின் சாதியின்
பெயரால் மறைமாவட்டம் நன்றியை மறந்து
அதை படிபடியாய் நிறுத்தியது.மக்களும் மறந்தார்கள். அது மீண்டும் நடத்தப்பட வேண்டும்....அடுத்த வருடம் அனைத்து பரதர்
ஊர்களிலும் பரதர் இளைஞர்கள் சேர்ந்து
நம் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும்
விழாவை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

போரில் உயிர் இழந்த பரதர் குல மாவீரர்களுக்கு
#வீர_வணக்கம்_பரத_மாவீரர்களுக்கு